IND vs RSA : இந்திய அணி செய்த அந்த தவறுகள் தான் நாங்க ஜெயிக்க காரணம் – தெம்பா பாவுமா ஓபன்டாக்

Bavuma
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலக கோப்பை தொடரின் நேற்றைய முக்கியமான சூப்பர் 12 சுற்றுப்போட்டியில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். அதன்படி முதலில் விளையாடிய இந்திய அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 133 ரன்களை குவித்தது.

INDvsRSA Cup

- Advertisement -

இந்திய அணி சார்பாக சூரியகுமார் யாதவ் அதிகபட்சமாக 68 ரன்களை குவித்தார். அவரை தவிர்த்து வேறு எந்த வீரரும் 20 ரன்களை கூட தாண்டவில்லை. பின்னர் தொடர்ந்து விளையாடிய தென் ஆப்பிரிக்கா அணியானது 134 என்கிற இலக்கினை எதிர்த்து விளையாடியது. இந்திய அணியின் பவுலர்கள் துவக்கத்திலேயே சில விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தாலும் தென் ஆப்பிரிக்க அணியின் ரன் குவிப்பை தடுக்க முடியவில்லை.

இறுதியில் 19.4 ஓவர்களில் ஐந்து விக்கெட்டுகளை இழந்த தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியானது 137 ரன்கள் குவித்து ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் புள்ளி பட்டியலிலும் தென்னாப்பிரிக்க அணி இந்திய அணியை பின்னுக்கு தள்ளி முதல் இடத்திற்கு சென்றுள்ளது. இந்நிலையில் இந்தப் போட்டியில் அடைந்த வெற்றி குறித்து பேசிய தென்னாப்பிரிக்கா அணியின் கேப்டன் தெம்பா பவுமா கூறுகையில் :

IND vs RSA MIller Rahul Rohit Suryakumar

முதல் 10 ஓவர் முடிந்ததுமே நாங்கள் பேட்டிங்கில் இன்டென்ட் காமிக்க வேண்டும் என்று நினைத்தோம். அதன்படி எங்களுக்கு சரியான நேரத்தில் வாய்ப்பு கிடைக்கவே எங்களது வீரர்கள் நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்து ரன் குவிப்பை வேகப்படுத்தினர். இன்றைய போட்டியில் அனைத்து விடயங்களும் எங்களுக்கு சாதகமாக அமைந்தது. குறிப்பாக இந்த போட்டியில் எங்களது பேட்டிங் ஃபார்ம் மிகச்சிறப்பாக இருந்தது.

- Advertisement -

ஆனாலும் என்னுடைய மோசமான பேட்டிங் எங்கள் அணிக்கு தடையாகவே இருக்கிறது. இருந்தாலும் ஒட்டுமொத்தமாக எங்களது அணியின் பேட்டிங் சிறப்பாக இருந்ததால் இந்த போட்டியில் வெற்றி பெற்றோம். இது போன்ற கடினமான சூழ்நிலைகளில், பிரஷரான வேளைகளில் விளையாடி கிடைக்கும் வெற்றி பிரமாதமான ஒன்று. இந்த போட்டியில் மைதானம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாகவும் இருந்தது. இந்திய அணி செய்த சில ஃபீல்டிங் தவறுகள் எங்களது வெற்றிக்கான வாய்ப்பை தந்தன.

இதையும் படிங்க : IND vs RSA : நீங்க சொல்றது சரி தான். கடைசில தோல்விக்கான காரணம் இதுதான் – ஒப்புக்கொண்ட ரோஹித்

இந்த தொடரில் நாங்கள் கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாக எங்களை கருதவில்லை. ஆனாலும் யாரும் எதிர்பாராத வகையில் நாங்கள் மிகச் சிறப்பான ஆட்டத்தை இந்த தொடர் முழுவதுமே வழங்க உள்ளோம் என தெம்பா பவுமா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement