இந்தியா தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான டி20 தொடரில் இருந்து வெளியேறிய – நட்சத்திர வீரர்

IND-vs-RSA-T20
- Advertisement -

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரானது நாளை டிசம்பர் 10-ஆம் தேதி டர்பன் நகரில் துவங்க இருக்கிறது. மொத்தம் மூன்று போட்டிகள் கொண்ட இந்த டி20 தொடருக்கான இந்திய அணி சூரியகுமார் யாதவ் தலைமையில் அறிவிக்கப்பட்டு ஏற்கனவே தென்னாபிரிக்க சென்று அடைந்து தற்போது தயாராகி வருகிறது.

இந்நிலையில் நாளை முதலாவுது டி20 போட்டி நடைபெற இருக்கும் வேளையில் தற்போது நட்சத்திர வீரர் ஒருவர் அணியிலிருந்து வெளியேறியுள்ள தகவல் வெளியாகி இணையத்தில் அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.

- Advertisement -

அந்த வகையில் தென் ஆப்பிரிக்க அணியை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளரான லுங்கி நெகிடி இந்து தொடரில் இருந்து விலகி உள்ளதாக கூறப்படுகிறது. தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான லுங்கி நெகிடி நோர்க்கியா இல்லாத நேரத்தில் அந்த அணிக்காக மிகச் சிறப்பான பங்களிப்பை வழங்கி வந்தார்.

இந்த சமயத்தில் அவர் காயம் காரணமாக இந்த டி20 தொடரில் இருந்து வெளியேறியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தென்னாபிரிக்க அணிக்காக மூன்று வகையான கிரிக்கெட்டிலும் முன்னணி வீரராக இடம்பிடித்து விளையாடி வரும் அவர் இந்த டி20 தொடரில் இருந்து வெளியேறியுள்ளார்.

- Advertisement -

மேலும் அடுத்தடுத்து நடைபெற இருக்கும் ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களுக்கான அணியில் இணைவாரா? என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது. காயம் காரணமாக நெகிடி வெளியேறியுள்ள வேளையில் அவருக்கு பதிலாக பியூரன் ஹென்றிக்ஸ் மாற்றுவீரராக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : இந்தியா – தெ.ஆ அணிகள் மோதும் முதல் டி20 நடைபெறும் கிங்ஸ்மீட் மைதானம் எப்படி? வரலாற்று புள்ளிவிவரம்.. பிட்ச் ரிப்போர்ட்

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான இந்த 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதலாவது டி20 போட்டி நாளை டிசம்பர் 10 ஆம் தேதி டர்பன் நகரில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement