இந்திய அணி நிர்வாகத்தின் ஆசையால் வாழ்க்கையை இழந்த லக்னோ பிட்ச் தயாரிப்பாளர் – வெளியான செய்தியால் ரசிகர்கள் கோபம்

- Advertisement -

நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் முக்கிய நேரங்களில் சொதப்பி தோற்ற இந்தியா 2வது போட்டியில் கடுமையாக போராடி வென்றது. அதனால் 1 – 1* (3) என்ற கணக்கில் சமனில் இருக்கும் இத்தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் கடைசி போட்டி பிப்ரவரி 1ஆம் தேதியன்று அகமதாபாத் நகரில் நடைபெறுகிறது. ரோகித் சர்மா, கேன் வில்லியம்சன் என இரு அணிகளிலுமே முக்கிய வீரர்கள் இல்லாத நிலைமையில் கடைசி போட்டியில் முழுமூச்சுடன் விளையாடி இத்தொடரை கைப்பற்றுவதற்கு இரு அணிகளும் போராடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக லக்னோவில் நடைபெற்ற இத்தொடரின் 2வது போட்டியில் பேட்டிங்க்கு சாதகமாக பிட்ச் இருக்கும் என்று எதிர்பார்த்த நியூசிலாந்து டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்தது. ஆனால் முதல் பந்திலிருந்தே தாறுமாறாக சுழன்றதால் அதிரடி காட்ட முடியாத அந்த அணி 20 ஓவர்களில் 99/8 ரன்கள் மட்டுமே எடுத்தது. சரி சுழல் பந்து வீச்சை இயற்கையாகவே சிறப்பாக எதிர்கொள்ளக்கூடிய இந்திய பேட்ஸ்மேன்கள் எளிதாக ரன்களை எடுப்பார்கள் என்று பார்த்தால் அவர்களையும் அதிரடி காட்ட விடாமல் லக்னோ மைதானம் மிகப்பெரிய சவால் கொடுத்தது.

- Advertisement -

பரிதாப பராமரிப்பாளர்:
அதிலும் குறிப்பாக 99% போட்டிகளில் களமிறங்கிய முதல் பந்திலிருந்தே அடித்து நொறுக்கக்கூடிய சூரியகுமார் யாதவ் கூட அதிரடியாக விளையாட முடியாத அளவுக்கு லக்னோ மைதானம் சவால் கொடுத்தது. உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக இருக்கும் அவர் 180க்கும் மேற்பட்ட கேரியர் ஸ்ட்ரைக் ரேட் கொண்டிருந்தும் முதல் முறையாக 30 பந்துகளை எதிர்கொண்டு 100க்கும் குறைவான ஸ்ட்ரைக் ரேட்டில் 26* (31) ரன்களை எடுத்து போராடி வெற்றி பெறும் அளவுக்கு பிட்ச் மோசமாக இருந்தது. மேலும் 100 ரன்களை துரத்த 19.5 ஓவர்களை இந்தியா எடுத்துக் கொண்டது. அதை விட மொத்தம் 239 பந்துகள் வீசப்பட்டும் அந்த போட்டியில் இரு அணிகளை சேர்ந்த வீரர்களும் ஒரு சிக்சர் கூட அடிக்கவில்லை.

அதன் காரணமாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக பந்துகள் வீசப்பட்டும் சிக்ஸர் அடிக்கப்படாத போட்டி என்ற வித்தியாசமான சாதனையையும் அந்த போட்டி படைத்தது. அதனால் கடுப்பான ரசிகர்களைப் போலவே இது டி20 கிரிக்கெட்டுக்கு உகந்த பிட்ச் அல்ல என்று முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் விமர்சித்தார். மேலும் போட்டி முடிந்த பின் கேப்டன் பாண்டியா விமர்சித்தது பின்வருமாறு. “இதுவரை நாங்கள் விளையாடிய 2 மைதானங்களும் ஏமாற்றத்தை கொடுப்பதாக இருந்தது. கடினமான மைதானங்களில் விளையாடுவதை பற்றி நான் கவலைப்படவில்லை. ஆனால் இந்த பிட்ச் டி20 கிரிக்கெட்டுக்கு உகந்தது போல் உருவாக்கப்படவில்லை. வருங்காலங்களில் மைதான பராமரிப்பாளர்கள் பிட்ச்களை கடைசி நேரத்தில் அவசரமாக உருவாக்காமல் முன்கூட்டியே உருவாக்க வேண்டும் என்பதை நான் விரும்புகிறேன்” என்று கூறினார்.

- Advertisement -

இந்நிலையில் இப்போட்டிக்காக முன்கூட்டியே வழக்கமான கருமண்ணை கொண்டு ஒரு வாரத்திற்கு முன்பே 2 பிரத்தியேகப் பிட்ச்சை லக்னோ மைதான பராமரிப்பாளர் உருவாக்கியதாக இன்று காலை செய்திகள் வெளியானது. ஆனால் முதல் போட்டியில் தோற்றதால் எப்படியாவது முன்கூட்டியே தொடரை சமன் செய்ய வேண்டும் என்று விரும்பிய இந்திய அணி நிர்வாகம் கடைசி நேரத்தில் சுழலுக்கு சாதகமாகும் வகையில் செம்மண்ணால் கொண்ட புதிய பிட்ச்சை தயாரிக்குமாறு லக்னோ நிர்வாக பராமரிப்பாளிடம் கேட்டுக் கொண்டதாக செய்திகள் தெரிவித்தது.

அதன் காரணமாகவே கடைசி நேரத்தில் பழைய பிட்ச்சுக்கு அருகில் அவசர அவசரமாக உருவாக்கப்பட்ட புதிய பிட்ச் முழுமையாக தயாராவதற்கு முன்பாக போட்டி நாள் வந்து விட்டதால் சுழலுக்கு சாதகமாக அமைந்ததாக செய்திகள் தெரிவிக்கிறது. இந்நிலையில் மோசமான பிட்ச்சை உருவாக்கிய லக்னோ மைதான பராமரிப்பாளர் “சுரேந்தர் குமார்” அதிரடியாக பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தற்போது புதிய செய்திகள் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: நீங்க ஒன்னும் உம்ரான் மாலிக், சிராஜ் இல்ல சீக்கிரம் முன்னேறுங்க – சொதப்பல் இளம் வீரரை விளாசிய கம்பீர்

இதை பார்க்கும் ரசிகர்கள் இந்திய அணி நிர்வாகத்தின் பேராசையால் சொன்ன வேலையை செய்த நல்ல மனம் கொண்ட ஒரு மைதான பராமரிப்பாளரின் வாழ்க்கை கேள்விக்குறியாகி உள்ளதை நினைத்து பிசிசிஐ மற்றும் ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி நிர்வாகத்தை கோபத்துடன் விளாசி வருகிறார்கள்.

Advertisement