நீங்க ஒன்னும் உம்ரான் மாலிக், சிராஜ் இல்ல சீக்கிரம் முன்னேறுங்க – சொதப்பல் இளம் வீரரை விளாசிய கம்பீர்

Gambhir
- Advertisement -

நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் விளையாடி வரும் இந்தியா முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரை 3 – 0 (3) என்ற கணக்கில் வென்ற நிலையில் அடுத்ததாக நடைபெறும் டி20 கிரிக்கெட் தொடரில் முதல் போட்டியில் தோற்றாலும் 2வது போட்டியில் கடுமையாக போராடி வென்று சமன் செய்துள்ளது. இதை தொடர்ந்து இத்தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் 2வது போட்டி பிப்ரவரி 1ஆம் தேதியன்று நடைபெறும் நிலையில் ஸ்பின்னர்களை தவிர்த்து பேட்டிங், பவுலிங் ஆகிய 2 துறைகளிலும் பெரும்பாலான இளம் வீரர்கள் சுமாராக செயல்படுவது இந்தியாவுக்கு பின்னடைவை ஏற்படுத்தி வருகிறது.

Arshdeep SIngh No Ball

- Advertisement -

குறிப்பாக வேகப்பந்து வீச்சு துறையில் அர்ஷிதீப் சிங் நோ-பால்களை அசால்டாக போட்டு இந்தியாவின் வெற்றியை தாரை பார்ப்பது ரசிகர்களை ஏமாற்றமடைய வருகிறது. 2018 அண்டர்-19 உலகக்கோப்பை வென்ற இந்திய அணியில் இடம் பிடித்திருந்து ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணியில் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்திய அவர் கடந்த ஜூலை மாதம் சீனியர் கிரிக்கெட்டில் அறிமுகமானார். உம்ரான் மாலிக் போல அதிரடியான வேகம் இல்லை என்றாலும் நல்ல லைன், லென்த் போன்ற விவேகத்தை பின்பற்றி சிறப்பான செயல்பாடுகளை வெளிப்படுத்திய அவர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 2022 டி20 உலகக் கோப்பையில் அதிக விக்கெட்களை எடுத்த இந்திய பவுலராக சாதனை படைத்தார்.

வேகம் இல்ல:
அதனால் ஜஹீர் கானுக்கு பின் தரமான இடது கை வேகப்பந்து வீச்சாளர் என்று ரசிகர்கள் மகிழ்ந்த நிலையில் டி20 உலக கோப்பைக்கு பின் உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடாமல் லேசான காயத்தை சந்தித்த அவர் சமீபத்திய இலங்கைக்கு எதிரான தொடரின் ஒரு போட்டியில் ஹாட்ரிக் நோ-பால் உட்பட 5 நோ-பால்களை வீசி மோசமான உலக சாதனை படைத்து இந்தியாவின் வெற்றியை தாரை பார்த்தார். அத்துடன் நியூசிலாந்து தொடரின் முதல் போட்டியிலும் கடைசி ஓவரில் நோ-பால் உட்பட 27 ரன்களை வாரி வழங்கிய அவர் மீண்டும் கொஞ்சமும் முன்னேறாத செயல்பாடுகளை வெளிப்படுத்தி விமர்சனங்களை சந்தித்தார்.

Arshdeep Singh

இந்நிலையில் பந்து வீச்சில் எப்படி செயல்பட்டாலும் அடுத்தடுத்து நோ-பால் போட்டு வெற்றியை தாரை பார்ப்பது எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது என்று தெரிவிக்கும் கௌதம் கம்பீர் உம்ரான் மாலிக், சிராஜ் போல் அவரிடம் வேகமும் இல்லை என்று கூறியுள்ளார். அதனால் சில வேரியேஷன்களை கற்றுக் கொள்வதுடன் அடிப்படையை பின்பற்றினாலே நோ-பால் வீசுவதை தவிர்த்து விடலாம் என்று விமர்சித்துள்ள அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“அவருடைய புள்ளி விவரங்கள் ஏற்றுக்கொள்ளக் கூடியது. அது வடக்கேயும் தெற்கேயும் செல்லலாம். ஆனால் நீங்கள் நோ-பால் வீசுவதை எந்த வகையிலும். மிகவும் முக்கியமான விஷயம் என்னவெனில் அந்த நோ-பால்களை நீங்கள் வீச முடியாது. குறிப்பாக சர்வதேச கிரிக்கெட்டில் அதை எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது. அது முக்கிய நேரத்தில் உங்களது வெற்றியை எதிரணிக்கு தாரை பார்க்கலாம். முந்தைய போட்டியிலும் அதுதான் நடந்தது. இதை தவிர்க்க அடிப்படையை சரியாக பின்பற்றுங்கள்”

Arshdeep SIngh No Ball Gautam Gambhir

“ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற உலகக்கோப்பையும் சொந்த மண்ணில் நடைபெறும் போட்டிகளும் முற்றிலும் வித்தியாசமானது. ஏனெனில் ஆஸ்திரேலியாவில் ஸ்விங் மற்றும் பவுன்ஸ் ஆகியன புதிய பந்தில் நன்றாக வேலை செய்யும். ஆனால் இந்திய துணை கண்டத்தில் பெரும்பாலும் பிளாட்டான பிட்ச்கள் தான் இருக்கும். அதில் நீங்கள் மெதுவான பந்துகள் அல்லது ஸ்லோயர் பவுன்சர்கள் போன்றவற்றை வீச வேண்டும். மேலும் சில வேரியேஷன் இருக்க வேண்டும். துரதிஷ்டவசமாக அவரிடம் எதிரணி பேட்ஸ்மேன்களை தெறிக்க விடும் அளவுக்கு வேகமில்லை”

இதையும் படிங்க: பாவம் நியூஸிலாந்து, 2023 உ.கோ’யில் பாகிஸ்தானிடம் இந்தியா வாலாட்ட முடியாது – முன்னாள் பாக் வீரர் அதிரடி பேட்டி

“எனவே அவர் சில வேரியேஷன்களில் முன்னேற்றம் காண வேண்டும். ஏனெனில் அவர் முகமது சிராஜ் அல்லது உம்ரான் மாலிக் கிடையாது. எனவே அடிப்படையை எளிமையாக பின்பற்ற வேண்டிய அர்ஷிதீப் சிங் நோ-பால் வீசுவதை தவிர்க்க வேண்டும்” என்று கூறினார். முன்னதாக இந்தியாவுக்காக விளையாடாத நாட்களில் உள்ளூர் கிரிக்கெட்டுக்கு விளையாடாமல் சர்வதேச கிரிக்கெட்டில் மீண்டும் விளையாட வராதீர்கள் என்று அவரை கம்பீர் ஏற்கனவே விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement