பாவம் நியூஸிலாந்து, 2023 உ.கோ’யில் பாகிஸ்தானிடம் இந்தியா வாலாட்ட முடியாது – முன்னாள் பாக் வீரர் அதிரடி பேட்டி

- Advertisement -

நியூசிலாந்துக்கு எதிராக நடைபெற்ற வரும் டி20 தொடரில் முதல் போட்டியில் தோற்ற இந்தியா 2வது போட்டியில் போராடி வென்று தொடரை சமன் செய்துள்ளது. இதையடுத்து இத்தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் கடைசி போட்டி பிப்ரவரி 1ஆம் தேதியன்று நடைபெறுகிறது. முன்னதாக நடைபெற்ற ஒருநாள் தொடரில் 3 போட்டிகளிலும் மிகச் சிறப்பாக செயல்பட்டு 3 – 0 (3) என்ற கணக்கில் ஒய்ட் வாஷ் வெற்றியுடன் கோப்பையை வென்ற இந்தியா சமீபத்திய இலங்கை தொடரையும் வென்ற காரணத்தால் ஒருநாள் கிரிக்கெட்டில் ஐசிசி தரவரிசையில் புதிய உலகின் நம்பர் ஒன் கிரிக்கெட் அணியாக முன்னேறி சாதனை படைத்தது.

Rohit sharma IND vs NZ

- Advertisement -

வரும் அக்டோபர் மாதம் 50 ஓவர் உலகக் கோப்பை நடைபெறும் நிலையில் இந்த உச்சத்தை தொட்டுள்ள இந்திய அணி 2011க்குப்பின் கோப்பை வெல்ல முடியும் என்ற நம்பிக்கையை ரசிகர்களிடம் ஏற்படுத்தியுள்ளது. அந்த தொடரில் இளம் வீரர் சுப்மன் கில் இரட்டை சதமடித்து உலக சாதனை படைத்த நிலையில் 2 வருடங்களுக்கு மேலாக சதமடிக்க முடியாமல் தவித்து வந்த கேப்டன் ரோகித் சர்மாவும் அந்த கதைக்கு முற்றுப்புள்ளி வைத்து முழுமையான ஃபார்முக்கு திரும்பினார். மேலும் 349, 385 என அந்தத் தொடரில் பெரிய ரன்களை குவித்த இந்தியா நிறைய சாதனைகளையும் படைத்து அசத்தியது.

இதுவே பாகிஸ்தானா இருந்தா:
இந்நிலையில் அந்த தொடரில் நியூசிலாந்து பவுலிங் சுமாராக இருந்ததை பயன்படுத்தி இந்தியா அதிரடியாக விளையாடி கோப்பை வென்றதாக தெரிவிக்கும் முன்னாள் பாகிஸ்தான் வீரர் ஆகிப் ஜாவேத் இதுவே 2023 உலகக்கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தளவுக்கு சிறப்பாக செயல்பட்டிருக்க முடியாது என்று கூறியுள்ளார். ஏனெனில் நியூசிலாந்தை விட ஒருநாள் கிரிக்கெட்டில் பாகிஸ்தான் பவுலிங் தரமானது என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு.

Aakib Javed

“பாகிஸ்தான் எப்போதும் இந்தியாவுக்கு கடினமான போட்டிகளைக் கொடுத்துள்ளது. குறிப்பாக இந்த வருடம் நடைபெறும் உலகக் கோப்பைக்காக பாகிஸ்தான் இந்தியாவுக்கு செல்லும் போது அங்குள்ள பிட்ச்களில் எந்த பிரச்சனையும் சந்திக்காதது. சமீபத்தில் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்தியா ஏராளமான ரன்களை அடித்தது. ஆனால் பாகிஸ்தானின் பவுலிங் நியூசிலாந்து பவுலிங் கிடையாது. அதனாலயே அந்த தொடரில் இந்திய வீரர்கள் 4 சதங்களை அடித்தனர். மறுபுறம் ஒருநாள் கிரிக்கெட்டில் பாகிஸ்தானின் பவுலிங் சிறப்பாக இருக்கிறது”

- Advertisement -

“குறிப்பாக ஷாஹீன் அப்ரிடி, ஹரிஸ் ரவூப், நசீம் ஷா ஆகியோர் முழுமையாக ஃபிட்டாகி வரும் போது பாகிஸ்தான் அணிக்கு நிறைய நன்மையை ஏற்படுத்துவார்கள். மேலும் பாகிஸ்தான் அணியில் சடாப் கான், முகமது நவாஸ் போன்ற ஸ்பின்னர்கள் இந்தியாவில் தாக்கத்தை ஏற்படுத்துவார்கள். எனவே உலகக் கோப்பைக்காக பாகிஸ்தான் அணியில் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் தேவையில்லை. அதனால் உலக கோப்பையில் பாகிஸ்தான் 300 ரன்கள் அடிக்கும் பட்சத்தில் அதை இந்தியா உட்பட எந்த எதிரணியாக இருந்தாலும் சேசிங் செய்வது மிகவும் கடினமாகும்” என்று கூறினார்.

ஆனால் இந்தியாவுக்கு வருவதற்கு முன்பாக கடந்த சில வாரங்களுக்கு முன் பாகிஸ்தானை அதன் சொந்த மண்ணில் எதிர்கொண்ட நியூசிலாந்து 2 – 1 (3) என்ற கணக்கில் வெற்றி வாகை சூடி கோப்பையை வென்றது. அப்படிப்பட்ட நிலையில் இந்த கருத்தை பார்க்கும் இந்திய ரசிகர்கள் இதே பந்து வீச்சு கூட்டணிக்கு எதிராக சொந்த மண்ணில் கூட வெற்றி பெற முடியாத நீங்கள் இந்தியாவைப் பற்றி பேசலாமா என்று வழக்கம் போல கலாய்த்து தள்ளுகிறார்கள்.

இதையும் படிங்க: IND vs NZ : 3வது டி20 நடைபெறும் அஹமதாபாத் மைதானம் எப்படி? புள்ளிவிவரங்கள், பிட்ச் – வெதர் ரிப்போர்ட்

இருப்பினும் ஷாஹீன் அப்ரிடி அப்ரிடி போன்ற முக்கிய வீரர்கள் குணமடைந்து வந்தால் 2023 உலக கோப்பையில் சொந்த மண்ணாக இருந்தாலும் நிச்சயமாக பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியாவின் ஆட்டம் செல்லுபடியாகாது என்று அவர் வெளிப்படையாக பேசியுள்ளார். ஆனால் அவர் கூறும் அதே பவுலர்களை சவாலான ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற்ற 2022 டி20 உலக கோப்பையில் எதிர்கொண்ட இந்தியா விராட் கோலியின் அபார ஆட்டத்தால் வரலாற்று சிறப்புமிக்க வெற்றி கண்டது. எனவே பழையதை மறந்து விட்டு மீண்டும் மீண்டும் இந்தியாவை வம்பிழுக்கும் வகையில் பேசாதீர்கள் என்று அவருக்கு ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகிறார்கள்.

Advertisement