- Advertisement -
ஐ.பி.எல்

லக்னோ 205 ரன்ஸ்.. 27 கோடி பண்ட் 14 வருட மோசமான சாதனை.. மலிங்காவை முந்தி ஹர்ஷல் அபார சாதனை

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் மே 19ஆம் தேதி லக்னோவில் 61வது போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் ஏற்கனவே வெளியேறிய ஹைதராபாத் அணி லக்னோவுக்கு எதிராக டாஸ் வென்று முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து இப்போட்டியில் வென்றால் மட்டுமே பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் அரைகுறை வாய்ப்பை தக்க வைக்க முடியும் என்ற கட்டாயத்தில் லக்னோ களமிறங்கியது.

அப்படிப்பட்ட சூழ்நிலையில் அந்த அணிக்கு துவக்க வீரர்கள் ஐடன் மார்க்ரம் – மிட்சேல் மார்ஷ் அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தனர். பவர் பிளே கடந்து ஓவருக்கு 10 ரன்களை வெளுத்து வாங்கிய அந்த ஜோடியில் இருவருமே அரை சதத்தை அடித்தார்கள். தொடர்ந்து அட்டகாசமாக விளையாடிய அந்த ஜோடி 11 ஓவரில் 115 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து அற்புதமான துவக்கத்தைக் கொடுத்தது.

- Advertisement -

மோசமான சாதனை:

அப்போது மிட்சேல் மார்ஷ் 65 (39) ரன்களில் ஹர்ஷ் துபே வேகத்தில் விக்கெட்டை இழந்தார். அடுத்ததாக வந்த கேப்டன் ரிஷப் பண்ட் 7 (6) ரன்னில் எஷான் மலிங்கா வேகத்தில் அவுட்டாகி ஏமாற்றத்துடன் சென்றார். 27 கோடி என்ற வரலாறு காணாத தொகைக்கு வாங்கப்பட்ட அவர் இந்த வருடம் சென்னைக்கு எதிராக 63 ரன்களை எடுத்தார்.

மற்ற போட்டிகளில் சொதப்பிய அவர் மொத்தம் 135 ரன்களை 12.27 என்ற மோசமான சராசரியில் எடுத்துள்ளார். இதன் வாயிலாக ஒரு ஐபிஎல் தொடரில் மிகவும் குறைவான சராசரியைக் கொண்ட விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் மோசமான சாதனையை ரிஷப் பண்ட் படைத்துள்ளார். இதற்கு முன் 2011 தொடரில் நமன் ஓஜா 12.30 சராசரியில் பேட்டிங் செய்ததே முந்தைய மோசமான சாதனை.

- Advertisement -

அபார சாதனை:

தொடர்ந்து நடைபெற்ற போட்டியில் மறுபுறம் அதிரடி காட்டிய மார்க்ரம் 61 (38) ரன்னில் ஹர்ஷல் படேல் வேகத்தில் அவுட்டானார். இதையும் சேர்த்து ஐபிஎல் தொடரில் அவர் 2381 பந்துகளில் 150 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். இதன் வாயிலாக ஐபிஎல் வரலாற்றில் பந்துகள் அடிப்படையில் வேகமாக 150 விக்கெட்டுகள் எடுத்த வீரர் என்ற சாதனையை ஹர்ஷல் படேல் படைத்துள்ளார். இதற்கு முன் ஜாம்பவான் லசித் மலிங்கா 2444 பந்துகளில் 150 விக்கெட்டுகளை எடுத்தது முந்தைய சாதனையாகும்.

இதையும் படிங்க: எம்.எஸ் தோனியின் ஐ.பி.எல் எதிர்காலம் குறித்து மவுனம் கலைத்த – சி.எஸ்.கே கோச் ஸ்டீபன் பிளமிங்

தொடர்வது நடைபெற்ற போட்டியில் மிடில் ஆர்டரில் நம்பிக்கை நட்சத்திரம் நிக்கோலஸ் பூரான் அதிரடியாக விளையாடி 45 (26) ரன்கள் குவித்து கை கொடுத்தார். ஆனால் எதிர்ப்புறம் ஆயுஸ் படோனி 3, அப்துல் சமத் 3, சர்துள் தாக்கூர் 4 ரன்னில் அவுட்டாகி சென்றனர். இறுதியில் ஆகாஷ் தீப் 6* (1) ரன்கள் எடுத்த உதவியுடன் 20 ஓவரில் லக்னோ 205/7 ரன்களை எடுத்தது. ஹைதெராபாத்துக்கு எஷான் மலிங்கா அதிகபட்சமாக இதை 2 விக்கெட்டுகள் எடுத்தார்.

- Advertisement -