சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனான மகேந்திர சிங் தோனி தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் 2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறார். 43 வயதான அவருக்கு இந்த சீசனே கடைசி ஐபிஎல் தொடராக பார்க்கப்படுகிறது. அதனால் இந்த ஐபிஎல் தொடருடன் அவர் ஓய்வை அறிவிப்பார் என்றும் பேசப்பட்டு வந்தது. ஆனால் இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான பதட்டமான போர் சூழல் காரணமாக ஐ.பி.எல் போட்டிகளி அட்டவணைகள் மாற்றப்பட்டது.
எம்.எஸ் தோனியின் எதிர்காலம் குறித்து பேசிய : ஸ்டீபன் பிளமிங்
அதனால் சென்னை அணி கடைசியாக தங்களது ஹோம் கிரவுண்டில் விளையாடும் போட்டியும் மாற்றப்பட்டது. இதன் காரணமாக இந்த ஆண்டு அவரால் சேப்பாக்கம் மைதானத்தில் விளையாட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. அதனால் தோனி இந்த ஆண்டு ஓய்வை அறிவிக்கமாட்டார் என்று கூறப்படுகிறது.
ஏனெனில் ஏற்கனவே தோனி அளித்திருந்த கருத்தில் : கண்டிப்பாக தன்னுடைய கடைசி போட்டி சேப்பாக்கத்தில் தான் இருக்கும் என்று தெரிவித்திருந்ததால் நிச்சயம் இந்த ஆண்டு ஓய்வு அறிவிப்பை வெளியிட மாட்டார் என்றும் அடுத்த ஆண்டு சில போட்டிகளில் விளையாடிவிட்டு சேப்பாக்கம் மைதானத்தில் தான் ஓய்வை அறிவிப்பார் என்றும் பேசப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளரான ஸ்டீபன் பிளமிங் மகேந்திர சிங் தோனியின் ஐபிஎல் எதிர்காலம் குறித்த சில கருத்துக்களை தற்போது பகிர்ந்துள்ளார். அந்த வகையில் சி.எஸ்.கே அணியானது தற்போது டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் பயிற்சி செய்து வரும் வேளையில் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அந்த அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் கூறுகையில் :
தோனி இன்றளவும் வலிமையாக இருக்கிறார். அவர் தொடர்ந்து நன்றாக தான் விளையாடி வருகிறார். ஆனாலும் அவருடைய எதிர்காலம் குறித்து தற்போது கூறுவது கடினம் என்று தெரிவித்துள்ளார். இதன் காரணமாக நிச்சயம் தோனியின் முடிவு அவரது கையில் தான் உள்ளது என்றும் அடுத்த 8 மாதங்கள் அவரது உடற்தகுதி எவ்வாறு இருக்கிறது என்பதை தொடர்ந்தே தோனி தனது முடிவை அறிவிப்பார் என்று தெரிகிறது.
இதையும் படிங்க : விராட் கோலி எதிர்காலத்தில் கிரிக்கெட் பக்கமே வரமாட்டார்.. இதுதான் அவரோட முடிவு – ரவி சாஸ்திரி பேட்டி
நடப்பு 2025 ஐ.பி.எல் தொடரில் இதுவரை 12 லீக் ஆட்டங்களில் விளையாடியுள்ள சி.எஸ்.கே அணி அதில் 9 போட்டிகளில் தோல்வியை சந்தித்து ஏற்கனவே இந்த ஆண்டிற்கான பிளே ஆப் வாய்ப்பை இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.



