இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், நட்சத்திர வீரருமான விராட் கோலி கடந்த சில தினங்களுக்கு முன்னர் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். 36 வயதான விராட் கோலி இன்றளவும் முழு உடற்தகுதியுடன் இருக்கும் வேளையில் நிச்சயம் அவரால் மேலும் இரண்டு, மூன்று ஆண்டுகளுக்கு தொடர்ந்து விளையாடியிருக்க முடியும். ஆனால் அவர் நிர்வாகத்தின் மீது ஏற்பட்ட அதிருப்தியாலே முன்கூட்டியே ஓய்வை அறிவித்தார் என்றும் பேசப்பட்டு வருகிறது.
விராட் கோலி கிரிக்கெட்டை விட்டே விலகிடுவார் : ரவி சாஸ்திரி
ஏனெனில் இங்கிலாந்து தொடருக்கு முன்னதாக இந்திய அணியின் டெஸ்ட் கேப்டன்சியை விரும்பிய அவர் பிசிசிஐ-யிடம் அது குறித்து ஒரு வேண்டுகோளை முன் வைத்தார். ஆனால் பிசிசிஐ அவரது வேண்டுகோளை ஏற்க மறுக்கவே விராட் கோலி முன்கூட்டியே ஓய்வு அறிவிப்பை வெளியிட்டார் என்றும் கூறப்படுகிறது. இருந்தாலும் விராட் கோலி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றதை அடுத்து பலரும் அவருக்கு வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.
டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து அவர் ஓய்வு பெற்றாலும் 2027 ஒருநாள் உலகக் கோப்பை வரை இந்திய அணிக்காக விளையாடுவார் என்று எதிர்பார்க்கலாம். அதோடு அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் 40 வயதை நெருங்கும் விராட் கோலி ஐபிஎல் போட்டிகளில் இருந்தும் விரைவில் ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் விராட் கோலி சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்று விட்டால் அவர் கிரிக்கெட்டை விட்டே வெளியேறி விடுவார் என்றும் அவரை பயிற்சியாளராகவோ, வர்ணனையாளராகவோ பார்க்க முடியாது என ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : விராட் கோலி ஒருநாள் போட்டிகளில் மட்டுமே இனி விளையாட உள்ளார்.
அவர் ஒருவேளை ஒருநாள் போட்டிகளில் இருந்தும் ஓய்வை அறிவித்து விட்டால் அதன் பின்னர் நிச்சயமாக கிரிக்கெட் உடனான தொடர்பிலேயே இருக்க மாட்டார். அவர் இத்தனை ஆண்டு காலம் கிரிக்கெட்டின் மீது முழு அர்ப்பணிப்புடன் இருந்தார். இனி அவருக்கு குடும்பம் தான் முக்கியம் என்பதனால் எதிர்காலத்தில் அவர் வர்ணனையாளராகவோ அல்லது பயிற்சியாளராகவோ எப்படி ஒரு வகையிலும் கிரிக்கெட் உடன் தொடர்பில் இருக்க மாட்டார்.
இதையும் படிங்க : தனது 4 கோடி 264 நம்பர் பிளேட் லம்போகினி காரை.. ரசிகருக்கு கொடுத்த ரோஹித் சர்மா.. வியப்பான விவரம்
தனிப்பட்ட நபராக குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடவே விரும்புவார் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். அவர் கூறியது போலவே விராட் கோலி அளித்திருந்த ஒரு பேட்டி ஒன்றில் : நான் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் நிச்சயம் யார் கண்களிலும் எளிதில் தென்பட மாட்டேன் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.



