இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நாயகன் ரோகித் சர்மா டெஸ்ட் போட்டிகளில் சமீபத்தில் ஓய்வு பெற்றார். 2024 டி20 உலகக் கோப்பையை இந்தியாவின் கேப்டனாக வென்ற அவர் 2025 சாம்பியன்ஸ் ட்ராபியையும் வென்று சாதனை படைத்துள்ளார். மேலும் ஐபிஎல் தொடரில் 5 கோப்பைகளை வென்று சாதனை படைத்துள்ள அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
முன்னதாக ரோகித் சர்மாவை போன்ற நட்சத்திர வீரர்கள் விலை உயர்ந்த கார்களை பயன்படுத்துவது வழக்கமாகும். அந்த வகையில் ரோகித் சர்மா நீல நிறம் கொண்ட லம்போகினி காரை உபயோகித்து வருகிறார். அந்த காருக்கு 264 என்ற முகவரி நம்பரையும் அவர் கொண்டுள்ளார். அதாவது ஒருநாள் கிரிக்கெட்டில் இலங்கைக்கு எதிராக 264 ரன்கள் அடித்த ரோகித் சர்மா அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த வீரராக உலக சாதனை படைத்தார்.
பரிசாக கொடுத்த ஹிட்மேன்:
அதன் நினைவாக ரோகித் சர்மா தம்முடைய லம்போகினி காரின் நம்பர் பிளேட்டில் 264 என்ற சிறப்பு நம்பரை வாங்கி வைத்துள்ளார். அப்படிப்பட்ட சூழ்நிலையில் இன்று தம்முடைய காரை ஒரு அதிர்ஷ்ட ரசிகருக்கு ரோகித் சர்மா பரிசாக வழங்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதாவது தற்போது ஐபிஎல் தொடர் நடைபெற்ற வருகிறது.
அதை மையமாக வைத்து ட்ரீம் 11 நிறுவனம் துல்லியமான கனவு அணியை உருவாக்கும் ரசிகர்களுக்கு பணம் உட்பட பல்வேறு பரிசுத்தொகைகளை கொடுத்து வருகிறது. மறுபுறம் ரோஹித் சர்மா அந்த நிறுவனத்தின் ஒரு விளம்பர தூதராக இருக்கிறார். எனவே அவரை மையமாக வைத்து ஒரு குறிப்பிட்ட போட்டியில் வெல்லும் ரசிகருக்கு ரோஹித் சர்மாவின் லம்போகினி கார் பரிசாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டதாக தெரிகிறது.
ரசிகர்கள் வியப்பு:
அந்தப் போட்டியில் ரசிகர் ஒருவர் வெற்றி பெற்றுள்ளார். அந்த ரசிகருக்கு ரோஹித் சர்மா தம்முடைய 4 கோடி மதிப்பிலான லம்போகினி காரை பரிசாகக் கொடுத்துள்ளார். அதை அந்த ரசிகர் தன்னுடைய சகோதரர் மற்றும் அப்பாவுடன் சேர்ந்து வாங்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: ரிஸ்க்கே இல்லாம இதை செய்யும் சுதர்சன்.. இந்திய அணியில் கில்லை ஈஸியா முந்தப்போறாரு.. அஜய் ஜடேஜா பேட்டி
இதைப் பார்க்கும் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வியப்பை வெளிப்படுத்துகிறார்கள். ஏனெனில் 4 கோடி காரை பரிசாக கொடுத்த ரோஹித் சர்மாவுக்கு பணம், கார் பெரிய விஷயம் கிடையாது. ஆனால் 264 என்ற ஸ்பெஷல் நம்பர் பிளேட் போட்ட காரை ரோஹித் சர்மா இப்படி பரிசாக தூக்கிக் கொடுத்து விட்டாரே? என்று ரசிகர்கள் ஆச்சரியத்தை வெளிப்படுத்துகிறார்கள்.



