ரிஸ்க்கே இல்லாம இதை செய்யும் சுதர்சன்.. இந்திய அணியில் கில்லை ஈஸியா முந்தப்போறாரு.. அஜய் ஜடேஜா பேட்டி

Ajay Jadeja
- Advertisement -

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் 9 வெற்றிகளைப் பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. குறிப்பாக மே 18ஆம் தேதி நடைபெற்ற 60வது போட்டியில் டெல்லியை அதனுடைய சொந்த மண்ணில் குஜராத் 10 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது. அப்போட்டியில் டெல்லி நிர்ணயித்த 200 ரன்கள் இலக்கை 19 ஓவரிலேயே எடுத்த குஜராத் முதல் முறையாக 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

அந்த அணிக்கு தமிழக வீரர் சாய் சுதர்சன் அபாரமாக விளையாடி சதத்தை அடித்து 108* ரன்கள் குவித்தார். அவருடன் சேர்ந்து விளையாடிய கேப்டன் சுப்மன் கில் 93* ரன்கள் விளாசி வெற்றியை எளிதாக்கினார். இந்த வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய சாய் சுதர்சன் ஆட்டநாயகன் விருது வென்று 617* ரன்களுடன் ஆரஞ்சு தொப்பியை தன்வசமாக்கியுள்ளார்.

- Advertisement -

கில்லை முந்துவார்:

இந்நிலையில் சுப்மன் கில்லை விட சாய் சுதர்சன் ரிஸ்க் இல்லாமல் கிளாஸ் பேட்டிங்கை செய்யும் திறமையைப் பெற்றிருப்பதாக முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா பாரட்டியுள்ளார். எனவே இந்திய அணியில் வருங்காலங்களில் சுப்மன் கில்லை பின்னுக்குத் தள்ளி சாய் சுதர்சன் முதன்மை பேட்ஸ்மேனாக முன்னேறுவார் என்றும் அவர் கணித்துள்ளார். இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் ஜடேஜா பேசியது பின்வருமாறு.

“சாய் சுதர்சனிடம் இந்தியாவின் வருங்கால கேப்டனை (கில்) பின்னுக்குத் தள்ளி வெளிச்சத்தை பெறும் திறன் இருக்கிறது. அவருடைய பேட்டிங் கண்களில் பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. டெல்லிக்கு எதிரானப் போட்டியில் மட்டும் அவர் சுப்மன் கில்லை விட முன்னோக்கி இருந்ததாக தெரியவில்லை. கடந்தப் போட்டிகளிலும் அவர் கில்லை விட சிறந்த பேட்ஸ்மேனாக தெரிந்தார்”

- Advertisement -

ஜடேஜா கணிப்பு:

“சுப்மனை விட அவருடைய பேட்டிங் ரிஸ்க் இல்லாதது போல் இருக்கிறது. சாய் சுதர்சன் இந்திய அணிக்காக தொடர்ச்சியாக விளையாடி அதிகம் சாதித்த வீரருடன் (கில்) விளையாடுகிறார். கில் டெல்லிக்கு எதிரானப் போட்டியில் சரியான டைம்மிங்கை கொண்டிருக்கவில்லை. அதனால் அவர் பவராக அடிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார். ஆனால் சுதர்சன் அவ்வாறு விளையாடவில்லை”

இதையும் படிங்க: நீங்க பர்ஸ்ட் உங்க ரெக்கார்டை பாருங்க.. சுப்மன் கில்லுக்கு சப்போர்ட் செய்து பேசிய – ரவி சாஸ்திரி

“அவருடைய பேட்டிங் மிகவும் எளிதாக தெரிந்தது” என்று கூறினார். அவர் கூறுவது போல இந்த வருடம் விராட் கோலி, சூரியகுமார், நிக்கோலஸ் பூரான் போன்ற ஜாம்பவான்களை மிஞ்சம் அளவுக்கு சுதர்சன் அசத்தி வருகிறார். அதனால் வருங்காலங்களில் அவர் இந்திய அணியில் சுப்மன் கில்லை விட சிறப்பாக செயல்பட வாய்ப்புள்ளது.

Advertisement