நீங்க பர்ஸ்ட் உங்க ரெக்கார்டை பாருங்க.. சுப்மன் கில்லுக்கு சப்போர்ட் செய்து பேசிய – ரவி சாஸ்திரி

Ravi Shastri
- Advertisement -

இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கடந்த சில நாட்களுக்கு முன்னர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார். அவரை தொடர்ந்து இந்திய அணியின் மற்றொரு நட்சத்திர வீரரும், முன்னாள் கேப்டனுமான விராட் கோலியும் அடுத்து சில நாட்களிலேயே ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார். இப்படி அடுத்தடுத்த இரண்டு ஜாம்பவான் வீரர்களின் ஓய்வு அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

சுப்மன் கில்லை ஆதரித்து பேசிய ரவி சாஸ்திரி :

அதோடு எதிர்வரும் இங்கிலாந்து தொடருக்கு முன்னதாக இவர்கள் இருவரும் வெளியேறியதால் தற்போது இந்திய அணிக்கு புதிய டெஸ்ட் கேப்டனை நியமிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டனாக செயல்பட்ட வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா தான் இந்திய அணியின் அடுத்த கேப்டனாக இருப்பார் என்று பேசப்பட்டது.

- Advertisement -

ஆனால் மூன்று வகையான இந்திய அணியிலும் இடம்பிடித்து விளையாடி வரும் ஜஸ்ப்ரீத் பும்ராவின் பணிச்சுமையை கணக்கில் காண்பித்து அவருக்கு டெஸ்ட் கேப்டன்சி மறுக்கப்பட்டுள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகி இருந்தன. இதன் காரணமாக அடுத்த டெஸ்ட் கேப்டனுக்கான போட்டியில் கே.எல் ராகுல், ரிஷப் பண்ட், சுப்மன் கில் ஆகியோர் இருந்து வருகின்றனர்.

ஆனாலும் இளம் வீரரான சுப்மன் கில்லுக்கு தான் அடுத்த புதிய டெஸ்ட் கேப்டன்சி வழங்கப்படும் என்று பேசப்படுகிறது. ஏனெனில் இளம் வீரரான அவர் இன்னும் பல ஆண்டுகள் அணியை வழிநடத்த முடியும் என்பதனால் அதனை கருத்தில் கொண்டு அவரை புதிய கேப்டனாக நியமிக்க நிர்வாகம் நினைக்கிறது.

- Advertisement -

ஆனாலும் அவர் வெளிநாடுகளில் நடக்கும் டெஸ்ட் போட்டிகளில் பெரிய அளவில் ரன் குவிக்கவில்லை என்பதனால் அவரை டெஸ்ட் கேப்டனாக மாற்றக்கூடாது என்ற விமர்சனமும் இருந்து வருகிறது. இந்நிலையில் அந்த விமர்சனங்களுக்கு எல்லாம் பதிலளிக்கும் வகையில் இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளரான ரவி சாஸ்திரி அவரை ஆதரித்து பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : சுப்மன் கில்லை வெளிநாட்டில் ரன்கள் அடிக்கவில்லை என்று பலர் பேசுகிறார்கள். இப்படி வெளிநாட்டில் ரன் அடிக்கவில்லை என்கிற விமர்சனம் அவர்மீது அடிக்கடி வரும்.

இதையும் படிங்க : என்னையா குண்டுன்னு கிண்டல் பண்ணீங்க.. இந்தியாவுக்காக சர்பராஸ் கான் செய்த 2 காரியம்.. ரசிகர்கள் பாராட்டு

ஆனால் அப்படி சொல்பவர்கள் இடம் நான் கூற வேண்டியது ஒன்றே ஒன்றுதான். அவரை குறை கூறும் நீங்கள் வெளிநாட்டு மண்ணில் எவ்வளவு ரன்கள் அடித்தீர்கள்? என்று யோசித்துப் பாருங்கள். அதோடு வெளிநாட்டில் நீங்கள் விளையாடிய உள்ளீர்களா? என்பதையும் யோசித்து பாருங்கள் என்று சொல்வேன் என சுப்மன் கில்லை ஆதரித்து ரவி சாஸ்திரி பேசியது குறிப்பிடத்தக்கது.

Advertisement