குல்தீப் மேஜிக்கால் 94/7 என திண்டாடிய லக்னோ.. டெயில் எண்டருடன் சேர்ந்து 100% வெற்றி இலக்குக்கு காப்பாற்றிய படோனி

LSG vs DC
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 12ஆம் தேதி லக்னோவில் 26வது லீக் போட்டி நடைபெற்றது. அதில் லக்னோ சூப்பர் ஜெயிட்ன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. அதில் டாஸ் வென்ற லக்னோ முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய லக்னோவுக்கு அதிரடியாக விளையாட முயற்சித்த குயிண்டன் டீ காக்’கை 19 ரன்களில் அவுட்டாக்கிய கலீல் அகமது அடுத்ததாக வந்த தேவதூத் படிக்கலையும் 3 ரன்களில் பெவிலியன் அனுப்பினார்.

இருப்பினும் எதிர்புறம் கேப்டன் கேஎல் ராகுல் வழக்கத்திற்கு மாறாக அதிரடியாக விளையாடி அசத்தினார். ஆனால் இந்த பக்கம் வந்த மார்க்கஸ் ஸ்டோனிஸை 8 (0) ரன்களில் அவுட்டாக்கிய குல்தீப் யாதவ் அடுத்ததாக வந்த அதிரடி வீரர் நிக்கோலஸ் பூரானை தம்முடைய மாயாஜால சுழலால் கிளீன் போல்டாக்கி கோல்டன் டக் அவுட்டாக்கினார்.

- Advertisement -

அசத்திய படோனி:
போதாக்குறைக்கு அடுத்த சில ஓவர்களில் மறுபுறம் அதிரடியாக விளையாடிய கேப்டன் கேஎல் ராகுலும் 39 (22) ரன்களில் குல்தீப் சுழலில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார். அப்போது வந்த தீபக் ஹூடா 10 (13), க்ருனால் பாண்டியா 3 (4) ரன்களில் அவுட்டாகி லக்னோவுக்கு மிகப்பெரிய அடியை கொடுத்தனர். அதனால் 94/7 என சரிந்த லக்னோ 130 ரன்கள் தொடுமா என்று அந்த அணி ரசிகர்கள் கவலையடைந்தனர்.

ஆனால் அப்போது எதிர்புறம் தில்லாக விளையாடிய இளம் வீரர் ஆயுஸ் படோனி டெல்லிக்கு தொல்லையை கொடுக்கும் ரன்களை எடுத்தார். அவருடன் அடுத்ததாக வந்த அர்சத் பதற்றமடையாமல் சிங்கிள்களை எடுத்து ஸ்ட்ரைக்கை மாற்றினார். அதை பயன்படுத்தி விக்கெட்டை விடாமல் தொடர்ந்து அசத்தலாக விளையாடிய ஆயுஸ் படோனி நேரம் செல்ல செல்ல அதிரடியாகவும் செயல்பட்டு அரை சதமடித்தார்.

- Advertisement -

அந்த வகையில் கடைசி வரை அவுட்டாகாமல் அசத்திய அவர் 5 பவுண்டரி ஒரு சிக்சருடன் 55* (35) ரன்கள் குவித்து நல்ல ஃபினிஷிங் கொடுத்தார். அவருடன் அர்சத் கான் 20* (16) ரன்கள் எடுத்ததால் 20 ஓவரில் லக்னோ 167/7 ரன்கள் எடுத்தது. மறுபுறம் கடைசி நேரத்தில் சுமாராக பந்து வீசிய டெல்லி சார்பில் அதிகபட்சமாக குல்தீப் யாதவ் 3, கலீல் அகமது 2 விக்கெட்டுகள் எடுத்தனர்.

இதையும் படிங்க: 2-3 வருஷமா நான் பும்ராவுக்கு எதிரா மட்டும் நெட் பிராக்டீஸ்ல கூட பேட்டிங் பண்றது இல்ல. ஏன் தெரியுமா? – சூரியகுமார் யாதவ்

முன்னதாக ஐபிஎல் தொடரில் 160 ரன்கள் அடித்த போட்டியில் லக்னோ ஒருமுறை கூட தோல்வியை சந்திக்காத லக்னோ அனைத்து முறையும் வெற்றிகரமாக இலக்கை கட்டுப்படுத்தி வென்றுள்ளது. இந்த போட்டியில் ஆயுஷ் படோனி போராட்டத்தால் அந்த எடுத்துள்ள லக்னோ வெற்றி பெறுமா என்ற எதிர்பார்ப்பு அந்த அணி ரசிகர்களிடம் காணப்படுகிறது.

Advertisement