2-3 வருஷமா நான் பும்ராவுக்கு எதிரா மட்டும் நெட் பிராக்டீஸ்ல கூட பேட்டிங் பண்றது இல்ல. ஏன் தெரியுமா? – சூரியகுமார் யாதவ்

Suryakumar
- Advertisement -

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று முடிந்த நடப்பு ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 25-ஆவது லீக் போட்டியில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணியானது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தலான வெற்றியை பதிவு செய்தது. அதிலும் குறிப்பாக ஆர்.சி.பி அணி நிர்ணயித்த 197 ரன்கள் இலக்கினை 15.3 ஓவர்களிலேயே துரத்தி மும்பை இந்தியன்ஸ் அணி அதிரடி காட்டியிருந்தது.

இந்த போட்டியின் போது மும்பை இந்தியன்ஸ் அணியின் சார்பாக வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா நான்கு ஓவர்களில் 21 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

- Advertisement -

அதேபோன்று பேட்டிங்கில் சூர்யகுமார் யாதவ் 19 பந்துகளில் 52 ரன்கள் குவித்து அசத்தினார் இவர்கள் இருவரது செயல்பாடு மிகச் சிறப்பாக இருந்தது ரசிகர்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்த போட்டிக்கு பிறகு பேசிய நட்சத்திர வீரரான சூரியகுமார் யாதவ் பும்ரா குறித்து கூறுகையில் :

கடந்த இரண்டு, மூன்று ஆண்டுகளாகவே நான் பும்ராவை வலைப்பயிற்சியின் போது சந்திப்பதை தவிர்த்து விட்டேன். மேலும் அவருக்கு எதிராக விளையாட மாட்டேன் என்று மும்பை அணியின் நிர்வாகத்திடமும் கூறிவிட்டேன். ஏனெனில் நெட்டில் பும்ராவை எதிர்த்து நான் விளையாடினால் ஒன்று என்னுடைய பேட் உடையும் அல்லது என்னுடைய கால் உடையும்.

- Advertisement -

இதன் காரணமாகவே நான் அவருக்கு எதிராக கடந்த 2-3 ஆண்டுகளாக பயிற்சியில் கூட அவரது பந்துகளுக்கு எதிராக விளையாடுவது கிடையாது. உண்மையிலேயே பும்ரா உலகின் தலை சிறந்த பந்து வீச்சாளர் நீங்கள் அவருக்கு எதிராக ஒரு திட்டத்தை தீட்டினால் அவர் உங்களுக்கு எதிராக ஒரு திட்டத்தை தீட்டுவார். அந்த அளவுக்கு அவர் கில்லாடி என்று சூரியகுமார் யாதவ் பேசினார்.

இதையும் படிங்க : சக வீரரை ஒருமையில் திட்டினாரா தமிழக வீரர் அஸ்வின்.. ஸ்டம்ப் மைக் மூலம் வெளியான பதிவு – நடந்தது என்ன?

சமீபத்தில் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக இரண்டு அறுவை சிகிச்சைகளை செய்து கொண்டு பின்னர் ஐபிஎல்-க்கு திரும்பியுள்ள சூரியகுமார் யாதவ் முதல் போட்டியில் டக் அவுட் ஆகி இருந்தாலும் தற்போது ஆர்சிபி அணிக்கு எதிராக 17 பந்துகளில் அரைசதம் அடித்துள்ளது அனைவரது மத்தியிலும் பாராட்டினை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement