போன வருஷம் 9.25 கோடி. இந்த வருஷம் வெறும் 90 லட்சம் – சி.எஸ்.கே அணி வீரருக்கு ஏற்பட்ட பரிதாபம்

Gowtham-1
- Advertisement -

இந்தியாவில் அடுத்த மாதம் துவங்க இருக்கும் பதினைந்தாவது ஐபிஎல் தொடருக்கு முன்னதாக பெங்களூருவில் பிப்ரவரி 12 மற்றும் 13 ஆகிய இரண்டு நாட்கள் வீரர்களுக்கான மெகா ஏலம் நடைபெற்றது. இந்த 15-வது சீசனில் கலந்து கொள்ளும் 10 அணிகளும் இந்த ஏலத்தில் கலந்து கொண்டு தங்களது அணிக்கு தேவையான வீரர்களை போட்டி போட்டு தேர்வு செய்தன. இதன் காரணமாக வீரர்களின் மெகா ஏலமானது மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றது.

CSK-Auction

- Advertisement -

அதில் சில வீரர்கள் அதிக விலைக்கு சென்று ஆச்சரியப்பட வைத்தனர். அதே வேளையில் நட்சத்திர வீரர்கள் சிலர் சற்று குறைவான தொகைக்கு சென்றனர். அந்தவகையில் எப்படியோ ஒரு வழியாக இந்த ஏலமானது சிறப்பாக நடைபெற்று முடிந்து தற்போது அனைத்து அணிகளும் முடிவாகி விட்டன. அந்த வகையில் நடப்பு சாம்பியனும், நான்கு முறை கோப்பையை கைப்பற்றிய அணியுமான சிஎஸ்கே எந்தெந்த வீரர்களை தேர்வு செய்யும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்த வேளையில் தற்போது சிஎஸ்கே அணியின் வீரர்கள் பட்டியலும் முழுவதுமாக வெளியாகிவிட்டது.

இந்நிலையில் கடந்த சீசனில் சென்னை அணிக்காக விளையாடிய பல வீரர்கள் இந்த ஆண்டு அணியில் இருந்து கழற்றி விடப்பட்டுள்ளனர். அப்படி கழட்டி விடப்பட்ட வீரர்களில் முக்கிய வீரர்களாக சுரேஷ் ரெய்னா மற்றும் டு பிளேசிஸ் ஆகியோர் பார்க்கப்படுகின்றனர். ஆனால் இவர்களை எல்லாம் தாண்டி ஒரு வீரரின் நிலைமை மிகவும் மோசமாக மாறியுள்ளது. அந்த வீரர் யாரெனில் கடந்த ஆண்டு மினி ஆக்சனில் சென்னை அணியால் 9.25 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டவர் ஆல்ரவுண்டர் கிருஷ்ணப்பா கௌதம்.

gowtham

ஆனால் இந்த ஆண்டு சிஎஸ்கே அணியில் இருந்து கழட்டி விடப்பட்ட அவரை ஏலத்தில் எடுக்க கொஞ்சமும் சிஎஸ்கே ஆர்வம் காட்டவில்லை. மற்ற அணிகளும் அவரை எடுக்க யோசித்தன. கடந்த ஆண்டு 9.25 கோடிக்கு ஏலம் போன அவர் தற்போது வெறும் 90 லட்ச ரூபாய்க்கு லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்காக விளையாட ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

- Advertisement -

ஐபிஎல்லில் விளையாடும் வீரர்கள் ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக விளையாடி தொகையை அதிகரிக்கும் வேளையில் இவர் 9.25 கோடியிலிருந்து வெறும் 90 லட்சத்திற்கு இறங்கியுள்ளது மிக வருத்தமான ஒன்று தான். சிஎஸ்கே அணிக்காக அவர் சென்ற வருடம் மிகப்பெரிய தொகைக்கு தேர்வு செய்யப்பட்டிருந்தாலும் அவருக்கு அணியில் விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. பெரும்பாலும் வெளியிலேயே அமர வைக்கப்பட்டு இருந்தார்.

இதையும் படிங்க : ஐ.பி.எல் தொடரில் விலை போகல. அடுத்த எதிர்கால திட்டம் என்ன? – சுரேஷ் ரெய்னா அளித்த பதில்

அதுமட்டுமின்றி கடந்த ஆண்டு இந்திய அணிக்காக ஒரே ஒரு ஒருநாள் போட்டியில் அறிமுகமான கிருஷ்ணப்பா கவுதம் அதிலும் சோபிக்க தவறவே தற்போது 33 வயதான அவரை ஏலத்தில் யாரும் கண்டுகொள்ளாமல் இறுதியில் வெறும் 90 லட்ச ரூபாய்க்கு லக்னோ வாங்கியது குறிப்பிடத்தக்கது. ஐபிஎல் ஏலத்தில் ஒரு வருட இடைவெளியில் 9.25 கோடியில் இருந்து அடுத்த ஆண்டு வெறும் 90 லட்சத்திற்கு குறைந்து மிகப்பெரிய சரிவை சந்தித்த வீரராக கிருஷ்ணப்பா கவுதம் பரிதாப நிலையை சந்தித்துள்ளார் என்றே கூறலாம்.

Advertisement