ஐ.பி.எல் தொடரில் விலை போகல. அடுத்த எதிர்கால திட்டம் என்ன? – சுரேஷ் ரெய்னா அளித்த பதில்

Raina
- Advertisement -

இந்தியாவில் கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் எப்போதுமே முக்கிய அணியாக வலம்வரும் சிஎஸ்கே அணி ரசிகர்களின் மத்தியில் மிகவும் பிரபலம். ஏனெனில் இதுவரை அதிக முறை பிளே ஆப் சுற்றுக்கு சென்ற அணியாகவும், நான்கு முறை கோப்பையை கைப்பற்றிய அணியாகவும் திகழும் சிஎஸ்கே அணியானது தோனியின் தலைமையில் பிரமாதமான செயல்பாட்டை ஐபிஎல் வரலாற்றில் வெளிப்படுத்தி தவிர்க்க முடியாத அணியாக இருந்து வருகிறது.

CSK-2

- Advertisement -

இப்படி சிஎஸ்கே அணி வீரநடை போட அணியின் துணை கேப்டனும், அனுபவ வீரருமான சுரேஷ் ரெய்னாவும் ஒரு முக்கிய காரணம் என்றால் அது மிகையல்ல. ஏனெனில் சிஎஸ்கே அணிக்காக கடந்த பல ஆண்டுகளாக விளையாடி வரும் சுரேஷ் ரெய்னா அணியில் முக்கிய நபராக இருந்து சிஎஸ்கே அணிக்கு எத்தனையோ போட்டிகளில் வெற்றியை உறுதி செய்து தந்துள்ளார்.

அதுமட்டுமின்றி சிஎஸ்கே அணி கோப்பையை கைப்பற்றும் போதெல்லாம் இவரது ஆட்டம் பிரமாதமாக இருக்கும். இப்படி சிஎஸ்கே அணியின் தூணாக இருந்த இவரை ஏலத்தில் எடுக்காதது ரசிகர்களிடையே பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை 205 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 5528 ரன்களை குவித்துள்ளார்.

raina 1

இப்படி இவ்வளவு பெரிய பிளேயராக இருந்தாலும் அவரை சிஎஸ்கே அணி கண்டுகொள்ளவே இல்லை என்பது மிகவும் வேதனைக்குரிய ஒரு விடயம். அடிப்படை விலையான இரண்டு கோடி ரூபாய்க்கு அவர் முதல் சுற்றில் ஏலம் போகவில்லை என்றாலும் நிச்சயம் 2-வது சுற்றில் அவரை சற்று குறைவான தொகைக்கு சிஎஸ்கே அணி அவரை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் இரண்டாவது சுற்றில் அவரது பெயரே இடம்பெறவில்லை. இதன்காரணமாக முதன்முறையாக ஐ.பி.எல் தொடரில் சுரேஷ் ரெய்னா விற்கப்படாமல் போனார். இதனால் ரெய்னாவின் ரசிகர்கள் வருத்தத்தில் ஆழ்ந்துள்ளனர்.

- Advertisement -

இந்நிலையில் ரெய்னா விற்கப்படாமல் போனதை தொடர்ந்து பத்திரிகை ஒன்றிற்கு பேட்டியளித்த அவர் தனது எதிர்கால திட்டம் குறித்து பேசியுள்ளார். இதுகுறித்து நிருபர் ஒருவர் எழுப்பிய கேள்வியில் உங்களுடைய அடுத்த திட்டம் என்ன? அரசியலில் சேர விரும்புகிறீர்களா? என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த ரெய்னா : எனக்கு கிரிக்கெட் தான் முதல் காதல். என்னுடைய உயிர் மூச்சு கிரிக்கெட். எனவே கிரிக்கெட் தொடர்பான வேலைகளை தொடர்ந்து செய்வேன் அரசியல் பற்றி எனக்கு அதிகம் தெரியாது. அது குறித்த தெளிவும் எனக்கு இல்லை என்பதனால் நிச்சயம் அரசியலில் ஈடுபட மாட்டேன். கிரிக்கெட் சார்பான பணிகளை தொடர்ந்து செய்ய விரும்புகிறேன்.

இதையும் படிங்க : நல்லவேளை சி.எஸ்.கே அணியிலிருந்து வெளிய போனதும் நல்லதுதான் – சாய் கிஷோருக்கு அடித்த அதிர்ஷ்டம்

அதுமட்டுமின்றி எனக்கு சமைக்க மிகவும் பிடிக்கும். எனவே நல்ல செஃப்பாக மாற விரும்புகிறேன். அதோடு அனைத்து இடங்களையும் சுற்றிப் பார்க்க விருப்பம் அதையும் நான் செய்ய உள்ளேன் என்று தனது எதிர்கால திட்டம் குறித்து சுரேஷ் ரெய்னா வெளிப்படையாக பகிர்ந்திருந்தார். ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக அதிக ரன்கள், அதிக அரை சதங்கள், பிளே ஆப் சுற்றில் அதிக ரன்கள், அதிக கேட்சிகள், பைனலில் அதிக ரன்கள் என பிரமாண்டமான சாதனைகளை தன் வசம் வைத்துள்ள மிஸ்டர் ஐபிஎல் என்கிற ரெய்னாவை தவறவிட்டு உள்ளதால் ரசிகர்கள் மிகவும் வருத்தத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement