அப்போ கே.எல் ராகுல்.. இப்போ நீங்களா? சஞ்சீவ் கோயங்காவிடம் வசமாக சிக்கிய ரிஷப் பண்ட் – விவரம் இதோ

Sanjiv Goenka
- Advertisement -

கடந்த 2022-ஆம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் அறிமுகமான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி 2022 மற்றும் 2023 ஆகிய ஆண்டுகளில் அடுத்தடுத்து பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி அசத்தியது. லக்னோ அணியின் கேப்டனாக இருந்த கே.எல் ராகுல் முதல் இரண்டு சீசன்களிலும் சிறப்பாக செயல்பட்ட வேளையில் கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் அவரது தலைமையிலான லக்னோ அணி முதல் முறையாக பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறாமல் வெளியேறியது.

அப்போ கே.எல் ராகுல்.. இப்போ ரிஷப் பண்ட் : சஞ்சீவ் கோயங்கா அட்டகாசம்

கடந்த ஐபிஎல் தொடரில் லக்னோ அணி இப்படி சரிவை சந்தித்தது அந்த அணியின் உரிமையாளரான சஞ்சீவ் கோயங்காவிற்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்தது. அதிலும் குறிப்பாக கடந்த ஆண்டு ஹைதராபாத் அணியிடம் 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்த பிறகு கேப்டன் கே.எல் ராகுலை சஞ்சீவ் கோயங்கா மைதானத்திலேயே திட்டிய வீடியோ இணையத்தில் வைரலாகி இருந்தது.

- Advertisement -

அதன்பின்னர் கடந்த ஆண்டு முடிவடைந்த ஐ.பி.எல் தொடருக்கு பின்னர் லக்னோ அணியிலிருந்து வெளியேறிய கே.எல் ராகுல் தற்போது 2025 ஐ.பி.எல் தொடரில் டெல்லி அணியால் வாங்கப்பட்டு அந்த அணியில் விளையாடி வருகிறார். அதேவேளையில் 2025 மெகா ஏலத்தில் 27 கோடி என்கிற பெரிய தொகைக்கு வாங்கப்பட்ட ரிஷப் பண்ட் லக்னோ அணியின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார்.

அவரது தலைமையின் கீழ் லக்னோ அணி சிறப்பாக செயல்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் இந்த தொடரின் முதல் மூன்று போட்டியில் ஒரு வெற்றி மட்டுமே பெற்ற அந்த அணி பின்னடைவை சந்தித்துள்ளது. அதிலும் குறிப்பாக ரிஷப் பண்ட்டின் பேட்டிங் இந்த தொடரில் மிக மோசமாக இருந்து வருகிறது.

- Advertisement -

முதல் இரண்டு போட்டிகளிலும்அவர் ஆட்டமிழந்த போது பெரியளவில் சஞ்சீவ் கோயங்கா கோபத்தை காண்பிக்காத வேளையில் நேற்று பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியின் போது லக்னோ அணி தோல்வி அடைந்ததும் மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்திய ரிஷப் பண்டை மைதானத்திற்கு சென்று ஏதோ கோபமாக அவரது பாணியில் பேசியுள்ளார். அது குறித்த புகைப்படங்களும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

இதையும் படிங்க : ரிஷப் பண்ட் இந்த விஷயத்தை மாத்தியே ஆகனும்.. இல்லனா லக்னோ அணிக்கு தான் சிக்கல் – ஹர்பஜன் சிங் கருத்து

இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் அன்று கே.எல் ராகுல், இன்று நீங்களா? என்பது போன்ற கேலியான கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். மேலும் கே.எல் ராகுல் எப்படி அவரிடம் மாட்டி தவித்தாரோ அதேபோன்று ரிஷப் பண்ட் தற்போது வசமாக சிக்கியுள்ளதாக ரசிகர்கள் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement