PBKS vs LSG : பஞ்சாப்பை குழப்பிய கேஎல் ராகுலின் மாஸ் கேப்டன்ஷிப் – லக்னோ பெரிய வெற்றி, கலாய்க்கும் ரசிகர்கள்

PBKS vs LSG KL Rahul
- Advertisement -

இந்திய கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்வித்து வரும் ஐபிஎல் 2023 டி20 தொடரில் ஏப்ரல் 28ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு முகாலில் நடைபெற்ற 38வது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகள் மோதின. அப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய லக்னோவுக்கு 41 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தாலும் தடுமாற்றமாக செயல்பட்ட கேப்டன் ராகுல் 12 (9) ரன்னில் அவுட்டான நிலையில் மறுபுறம் சரவெடியாக செயல்பட்ட கெய்ல் மேயர்ஸ் 7 பவுண்டரி 4 சிக்சருடன் 54 (24) ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

அந்த நிலைமையில் களமிறங்கி அதிரடி காட்டிய மார்கஸ் ஸ்டோனிஸ் உடன் கை கோர்த்த இளம் வீரர் ஆயுஷ் படோனி தனது பங்கிற்கு அதிரடியாக 3 பவுண்டரி 3 சிக்ஸரை பறக்க விட்டு 3வது விக்கெட்டுக்கு 89 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து 43 (24) ரன்களில் ஆட்டமிழந்தார். அதைத்தொடர்ந்து களமிறங்கிய நிக்கோலஸ் பூரான் தனது பாணியில் அதிரடியாக விளையாடிய நிலையில் மறுபுறம் சிறப்பாக செயல்பட்ட மார்கஸ் ஸ்டோனிஸ் 4வது விக்கெட்டுக்கு 76 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து 7 பவுண்டரி 4 சிக்ஸருடன் 54 (24) ரன்கள் குவித்து அவுட்டானார்.

- Advertisement -

அபார வெற்றி:
இறுதியில் நிக்கோலஸ் பூரான் 7 பவுண்டரி 1 சிக்சருடன் 45 (19) ரன்களும் தீபக் ஹூடா 11* (6) ரன்களும் க்ருனால் பாண்டியா 5* (2) ரன்களும் அடித்து சூப்பர் பினிஷிங் கொடுத்தனர். அதனால் 20 ஓவரில் 257/5 ரன்கள் எடுத்த லக்னோ ஐபிஎல் வரலாற்றில் 2வது அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்து சாதனை படைத்தது. சுமாரான பந்து வீசிய பஞ்சாப் சார்பில் அதிகபட்சமாக ரபாடா 2 விக்கெட்கள் எடுத்தார். அதை தொடர்ந்து 258 என்ற மெகா இலக்கை துரத்திய பஞ்சாப்புக்கு முதல் ஓவரிலேயே கேப்டன் தவான் 1 (2) ரன்னில் அவுட்டாகி பின்னடைவை கொடுத்த நிலையில் இம்பேக்ட் வீரராக விளையாடிய பிரப்சிம்ரன் சிங் 9 (13) ரன்களில் நடையை கட்டினார்.

அதனால் 31/2 என்ற சுமாரான தொடக்கத்தை பெற்ற பஞ்சாப்புக்கு அடுத்ததாக ஜோடி சேர்ந்த அதர்வா டைட் மற்றும் சிகந்தர் ராசா ஆகியோர் அதிரடியாக விளையாடி 3வது விக்கெட்டுக்கு 78 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து சரிவை சரி செய்தனர். இருப்பினும் பெரிய இன்னிங்ஸ் விளையாடுவதற்குள் 4 பவுண்டரி 1 சிக்ஸருடன் சிக்கந்தர் ராசா 36 (22) ரன்களில் அவுட்டாக அடுத்த ஓவரிலேயே மறுபுறம் மிரட்டலாக பேட்டிங் செய்த அதர்வா டைட் 8 பவுண்டர் 2 சிக்ஸருடன் அரை சதமடித்து 66 (36) ரன்களில் ஆட்டமிழந்தார்.

- Advertisement -

ஆனாலும் ரன்ரேட் தொடர்ந்து 20க்கும் மேல் எகிறியதால் வேறு வழியின்றி அடுத்ததாக களமிறங்கி அதிரடியாக விளையாட முயற்சித்த லியாம் லிவிங்ஸ்டன் 23 (14) ரன்களிலும் சாம் கரண் 21 (11) ரன்களிலும் அவுட்டாகி சென்றனர். அதே போலவே அடுத்து வந்த ஜித்தேஷ் சர்மாவும் 3 சிக்சருடன் 24 (19) ரன்களில் அவுட்டானதால் 19.5 ஓவரில் பஞ்சாப் போராடி 201 ரன்களுக்கு ஆல் அவுட்டான நிலையில் லக்னோ சார்பில் அதிகபட்சமாக நவீன்-உல்-ஹக் 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.

அதனால் 56 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற லக்னோ புள்ளி பட்டியலில் 2வது இடத்திற்கு முன்னேறியது. முன்னதாக இந்த போட்டியில் முதல் ஓவரிலிருந்தே ராகுல் சஹர் (7.25) பஞ்சாப் பவுலர்கள் கொஞ்சமும் எந்த இடத்திலும் துல்லியத்தை காட்டாமல் ரன் மெஷின்களாக 12க்கும் மேற்பட்ட எக்கனாமியில் ரன்களை வாரி வழங்கி ஆரம்பத்திலேயே தோல்வியை பரிசளித்தனர்.

- Advertisement -

அதே போல அவ்வளவு பெரிய இலக்கை துரத்தும் போது பேட்டிங்கில் ஷிகர் தவான் – பிரப்சிம்ரன் சிங் ஓப்பனிங் ஜோடி 50 ரன்கள் கூட பார்ட்னர்ஷிப் அமைத்துக் கொடுக்காததால் ஏற்பட்ட அழுத்தத்தில் என்ன தான் அடுத்து வந்த பேட்ஸ்மேன்கள் அதிரடியாக போராடினாலும் பஞ்சாப்புக்கு வெற்றியை பெற்றுக் கொடுக்க முடியவில்லை.

இதையும் படிங்க: CSK vs RR : எனக்கு இந்திய அணியில் விளையாட ஒரு வருஷத்துக்கு வாய்ப்பு கொடுத்ததே இந்த மைதானம் தான் – தோனி நெகிழ்ச்சி

அதை விட 258 ரன்களை எந்த விதத்திலும் பஞ்சாப் துரத்தி விடக்கூடாது என்ற எண்ணத்துடன் செயல்பட்ட லக்னோ கேப்டன் ராகுல் கீப்பர் நிக்கோலஸ் பூரான், ஹூடா மற்றும் தம்மை தவிர்த்து எஞ்சிய 9 வீரர்களையும் பந்து வீச வைத்து எதிரணியை குழப்பும் வகையில் கேப்டன்ஷிப் செய்தது ரசிகர்களை கிண்டலடிக்க வைத்துள்ளது. அதனால் தோனி கூட இப்படி கேப்டன்ஷிப் செய்ய மாட்டார் என்று ரசிகர்கள் கலாய்த்து வருகிறார்கள்.

Advertisement