CSK vs RR : எனக்கு இந்திய அணியில் விளையாட ஒரு வருஷத்துக்கு வாய்ப்பு கொடுத்ததே இந்த மைதானம் தான் – தோனி நெகிழ்ச்சி

MS-Dhoni
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 37-வது லீக் போட்டியானது ஜெய்ப்பூர் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின. அதன்படி நடைபெற்று முடிந்த இந்த ஆட்டத்தில் டாசில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

CSK vs RR

- Advertisement -

அதன்படி முதலில் விளையாடிய ராஜஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 202 ரன்களை அடித்தது. அந்த அணி சார்பாக ஜெய்ஷ்வால் 27 ரன்களை குவித்து அசத்தினார்.

அதனை தொடர்ந்து 203 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய சென்னை அணி 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 170 ரன்களை மட்டுமே அடித்ததால் ராஜஸ்தான் அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் பலம் வாய்ந்த சென்னை அணியை ராஜஸ்தான் அணி எந்த ஒரு பிரச்சனையும் இன்றி வீழ்த்தியதால் அவர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

MS Dhoni 1

அதோடு கடைசி இரண்டு ஆண்டுகளில் ராஜஸ்தான் அணி நான்கு முறை சென்னை அணியை வீழ்த்தி தங்களது வெற்றி பயணத்தையும் தொடர்கிறது. இந்நிலையில் இந்த போட்டி முடிந்து ஜெய்ப்பூர் மைதானத்தில் விளையாடுவது குறித்து பேசிய சென்னை அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி சில நெகிழ்ச்சியான கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.

- Advertisement -

அந்த வகையில் தோனி கூறியதாவது : என்னுடைய முதல் ஒரு நாள் சதம் விசாகப்பட்டினம் மைதானத்தில் வந்தது. அப்படி நான் அந்த முதல் சதத்தை அடித்ததும் எனக்கு இந்திய அணியில் அடுத்த பத்து போட்டிகளில் விளையாட வாய்ப்பு கிடைத்தது. அதே வேளையில் இந்த ஜெய்ப்பூர் மைதானத்தில் நான் 183 ரன்களை குவித்த போது தான் இந்திய அணியில் எனக்கு அடுத்த ஒரு ஆண்டு வரை விளையாடும் வாய்ப்பு கிடைத்தது.

இதையும் படிங்க : பாபர் அசாமுக்கு கேப்டன்ஷிப்ன்னா என்னன்னே தெரியாது, அவர வெச்சுகிட்டு ஜெயிக்கவும் முடியாது – முன்னாள் பாக் வீரர் அதிரடி பேட்டி

எனவே இந்த மைதானம் எனக்கு என் மனதிற்கு மிகவும் நெருக்கமான மைதானம். இந்த மைதானத்தில் நான் விளையாடிய அந்த இன்னிங்சை என்னால் மறக்கவே முடியாது என தோனி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement