பாபர் அசாமுக்கு கேப்டன்ஷிப்ன்னா என்னன்னே தெரியாது, அவர வெச்சுகிட்டு ஜெயிக்கவும் முடியாது – முன்னாள் பாக் வீரர் அதிரடி பேட்டி

Babar-Azam
- Advertisement -

பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அங்கு 5 டி20 மற்றும் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. அதில் முதலாவதாக நடைபெற்ற டி20 தொடரில் முதலிரண்டு போட்டிகளில் பாகிஸ்தான் வென்று ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. இருப்பினும் 3வது போட்டியில் போராடி வென்ற நியூசிலாந்து 4வது போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டாலும் 5வது போட்டியில் மார்க் சேப்மேன் சதத்தால் அதிரடியான வெற்றி பெற்று 2 – 2 (5) என்ற கணக்கில் தொடரை சமன் செய்து பதிலடி கொடுத்தது. அதனால் கடந்த வருடம் ஆஸ்திரேலியா, இங்கிலாந்திடம் சொந்த மண்ணில் படுதோல்வியை சந்தித்த பாகிஸ்தான் மீண்டும் இத்தொடரில் நியூசிலாந்திடம் தோற்று விமர்சனங்களை சந்தித்து வருகிறது.

Pak vs NZ Mark Chapman

- Advertisement -

குறிப்பாக டேவோன் கான்வே போன்ற முக்கிய வீரர்கள் இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் தொடரில் பங்கேற்பதால் 2வது தர அணியை தங்கள் நாட்டுக்கு அனுப்பியதாக நியூசிலாந்தை முன்னாள் பாகிஸ்தான் வீரர் அப்துல் ரசாக் ஆரம்பத்திலேயே விமர்சித்தார். ஆனால் அதற்கேற்றார் போல் செயல்படாத பாக்கிஸ்தான் சமீபத்தில் ஆப்கானிஸ்தானிடம் தோற்ற நிலையில் தற்போது 2வது தர நியூசிலாந்திடம் சொந்த மண்ணில் மீண்டும் தோற்றதால் வழக்கம் போல கிண்டல்களை சந்தித்து வருகிறது.

ஒன்னுமே தெரியாது:
முன்னாதாக 2017இல் அறிமுகமாகி 2019 வாக்கில் 3 வகையான கிரிக்கெட்டிலும் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்திய பாபர் அசாம் உடனடியாக கேப்டனாக அறிவிக்கப்பட்டார். அவரது தலைமையில் கணிசமான வெற்றிகள் கிடைத்தாலும் 2022 ஆசியக் கோப்பை ஃபைனலில் இலங்கையிடமும் டி20 உலகக்கோப்பை ஃபைனலில் இங்கிலாந்திடமும் தோற்ற பாகிஸ்தான் கடந்த வருடம் சொந்த மண்ணில் நடைபெற்ற அனைத்து தொடர்களிலும் தோற்று ஒரு வருடமாகியும் இன்னும் வெற்றிப் பாதைக்கு திரும்ப முடியாமல் திணறி வருகிறது.

Babar Azam 1

அதனால் அவருடைய கேப்டன்ஷிப் மீது அதிருப்தியடைந்துள்ள சோயப் அக்தர், டேனிஷ் கனேரியா போன்ற முன்னாள் வீரர்கள் சடாப் கான் கேப்டனாக நியமிக்கப்பட வேண்டும் என்று கடந்த சில மாதங்களாகவே விமர்சித்து வருகிறார்கள். இந்நிலையில் 4 வருடமாகியும் பாபர் அசாமுக்கு இன்னும் எப்படி கேப்டன்ஷிப் செய்ய வேண்டும் என்பது பற்றி தெரியவில்லை என்று முன்னாள் வீரர் கம்ரான் அக்மல் அதிரடியாக விமர்சித்துள்ளார். அதனால் அவர் கேப்டனாக இருக்கும் வரை பாகிஸ்தான் வெற்றி பாதைக்கு திரும்ப முடியாது என்று வெளிப்படையாக விமர்சிக்கும் அவர் இது பற்றி பிரபல பாகிஸ்தான் இணையத்தில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“அவர்களின் தவறுகளைப் பற்றி நாம் பேசும் போது அவர்கள் நம்மையே தேவையற்ற விமர்சனம் என்று சொல்லி திசை திருப்ப முயற்சிக்கிறார்கள். ஆனால் எங்களுடைய கவனம் அவருடைய செயல்பாடுகளில் அல்லாமல் கேப்டன்ஷிப்பில் இருக்கிறது. அவர்களின் இந்த சுமாரான திறமையை கண்டும் நாங்கள் அமைதியாக இருப்பதற்கு குருடர்கள் அல்ல. 4 வருடங்கள் கழித்தும் பாபர் அசாமுக்கு எப்படி கேப்டன்ஷிப் செய்ய வேண்டும் என்பது இன்னும் தெரியவில்லை. குறிப்பாக எந்த நேரத்தில் எந்த பவுலருக்கு பந்து வீச வழங்க வேண்டும் என்பது கூட இன்னும் அவருக்கு தெரியவில்லை”

Kamran

“அப்படி தொடர்ந்து அதே தவறுகளை செய்து வருவதால் பாகிஸ்தான் அணி தொடர்ந்து தோற்று வருவதில் எந்த ஆச்சரியமும் இல்லை. ஏனெனில் நாம் நம்முடைய தவறுகளை இன்னும் கட்டுப்படுத்தவில்லை என்பதாலேயே எதிரணி வெற்றி வாகை சூடுகிறது. எடுத்துக்காட்டாக களத்தில் 2 இடது கை பேட்ஸ்மேன்கள் (மார்க் சேப்மேன் – ஜிம்மி நீசம்) இருந்தால் நீங்கள் பந்தை இப்திகார் அகமதிடம் வழங்கியிருக்க வேண்டும். ஆனால் அதை செய்யாத அவர் லெக் ஸ்பின்னரான சடாப் கானுக்கு பந்து வீச ஓவர்களை வழங்கினார்”

இதையும் படிங்க:PBKS vs LSG : பஞ்சாப்பை அடித்து நொறுக்கிய லக்னோ – நூலிழையில் ஆர்சிபி சாதனை தவறினாலும் புதிய வரலாறு படைத்த லக்னோ

“அதனால் நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் அவரை சரமாரியாக அடித்து நொறுக்கினார்கள். அந்த சமயத்தில் நீங்கள் அவருக்கு ஓய்வு கொடுத்து விட்டு மற்றொரு ஆல் ரவுண்டருக்கு வாய்ப்பு கொடுத்திருக்க வேண்டும்” என்று கூறினார். இப்படி கடந்த சில மாதங்களாகவே கேப்டன்ஷிப் விமர்சனங்களை சந்தித்து வரும் பாபர் அசாமுக்கு தேர்வுக்குழு தலைவர் சாகித் அப்ரிடி மற்றும் பாகிஸ்தான் வாரியத்தினர் ஆதரவாக இருந்து வருவதால் தொடர்ந்து கேப்டனாக செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement