TNPL 2023 : சரத்குமாரின் திண்டுக்கல் இம்பேக்டை உடைத்த கோவை, கை கொடுத்த சச்சின் – முதல் அணியாக ஃபைனலுக்கு சென்றது எப்படி?

TNPL Qualifier
- Advertisement -

தமிழகத்தில் நடைபெற்று வரும் டிஎன்பிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரின் லீக் சுற்று முடிந்து நாக் அவுட் சுற்று போட்டிகள் துவங்கியுள்ளன. கடந்த ஜூன் 12ஆம் தேதி துவங்கிய இந்த தொடரில் மொத்தம் 8 அணிகள் பங்கேற்ற நிலையில் 28 போட்டிகள் கொண்ட லீக் சுற்றின் முடிவில் நடப்பு சாம்பியன் கோவை, திண்டுக்கல், நெல்லை மற்றும் மதுரை ஆகிய அணிகள் புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களை பிடித்து பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றன. அந்த நிலைமையில் ஜூலை 7.15 தேதி இரவு மணிக்கு சேலத்தில் இருக்கும் எஸ்சிஎப் மைதானத்தில் நடைபெற்ற குவாலிபயர் 1 பிளே ஆப் போட்டியில் புள்ளி பட்டியலில் டாப் 3 இடங்களை பிடித்த கோவை மற்றும் திண்டுக்கல் ஆகிய அணிகள் மோதின.

அந்த போட்டியில் டாஸ் அதிர்ஷ்டத்தை பெற்ற திண்டுக்கல் முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய கோவை அணிக்கு பவர் பிளே பயன்படுத்தி 4.3 ஓவரில் அதிரடியான 43 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல தொடக்கம் கொடுத்த சுரேஷ்குமார் 1 பவுண்டரி 3 சிக்சருடன் 26 (12) ரன்களில் வருண் சக்கரவர்த்தி சுழலில் சிக்கினார். ஆனால் அவருடன் மறுபுறம் தடவிய சுஜய் 12 (16) ரன்களில் அவுட்டாக அடுத்ததாக பி சச்சின் மற்றும் முகிலேஷ் ஆகியோர் ஜோடி சேர்ந்து அதிரடியாக ரன்களை குவித்தனர்.

- Advertisement -

ஃபைனலில் கோவை:
அந்த வகையில் 6வது ஓவரில் ஜோடி சேர்ந்த இருவருமே திண்டுக்கல் பவுலர்களை சிறப்பாக எதிர்கொண்டு 16 ஓவர்கள் வரை நிலைத்து நின்று 3வது விக்கெட்டுக்கு 82 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்திய போது 3 பவுண்டரி 2 சிக்ருடன் முகிலேஸஷ் 44 (27) ரன்களில் அவுட்டாக அடுத்த சில ஓவர்களில் 7 பவுண்டரி 2 சிக்சருடன் 70 (46) ரன்கள் குவித்து சச்சின் ஆட்டமிழந்தார்.

கடைசியில் கேப்டன் ஷாருக்கான் 2, அரவிந்த் 2 ரன்களில் அவுட்டானாலும் அதிக் ரஹ்மான் 4 பவுண்டரியுடன் 19 (10) ரன்கள் எடுத்த உதவியுடன் 20 ஓவர்களில் கோவை 193/7 ரன்கள் எடுக்க திண்டுக்கல் சார்பில் அதிகபட்சமாக சுபோத் பாத்தி 4 விக்கெட்டுகளை சாய்த்தார். அதைத்தொடர்ந்து 194 ரன்களை துரத்திய திண்டுக்கல் அணிக்கு தரமணி கண்ணன் வீசிய முதல் ஓவரிலேயே விமல் குமார் 1 (4) ரன்னில் அவுட்டாக மற்றொரு தொடக்க வீரர் சிவம் சிங்கும் கேப்டன் ஷாருக்கானிடம் 10 (14) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தார்.

- Advertisement -

அடுத்த ஓவரிலேயே மறுபுறம் அதிரடியாக விளையாட முயற்சித்த பூபதி குமாரும் 3 பவுண்டரி 1 சிக்சருடன் 25 (19) ரன்களில் அவுட்டானதால் 43/3 என திண்டுக்கல் சரிவை சந்தித்தது. அதனால் கேப்டன் பாபா இந்திரஜித் நிதானமாக விளையாடிய நிலையில் எதிர்புறம் ஆதித்யா கணேஷ் 5 (9) ஜி கிஷோர் 2 (4) என மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் முகமது வேகத்தில் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகி பின்னடைவை கொடுத்தனர்.

அந்த அழுத்தத்தில் அடுத்த சில ஓவர்களில் பாபா இந்திரஜித் 21 (17) ரன்களில் அவுட்டாக சுபோத் பாத்தியும் 14 (51) ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றத்தை கொடுத்ததால் திண்டுக்கல் வெற்றி கேள்விக்குறியானது. இருப்பினும் அந்த சமயத்தில் இம்பேக்ட் வீரராக களமிறங்கிய சரத்குமார் முதல் பந்திலிருந்தே அதிரடியை துவக்கி கடைசி நேரத்தில் வெற்றிக்கு போராடியதால் போட்டியில் பரபரப்பு ஏற்பட்டது.

- Advertisement -

குறிப்பாக கேப்டன் ஷாருக்கான் வீசிய 17வது ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்களை அடித்த அவர் 18 பந்துகளில் அரை சதம் கடந்து வெற்றிக்கு போராடிய போதிலும் எதிர்ப்புறம் கை கொடுப்பதற்கு பேட்ஸ்மேன்கள் இல்லாமல் திண்டுக்கல் தடுமாறியது. மேலும் 19வது ஓவரில் தரமணி கண்ணன் முதல் 5 பந்துகளில் 1 ரன் மட்டுமே கொடுத்து கொடுக்காமல் அழுத்தத்தை உண்டாக்கியதால் கடைசி பந்தில் சிக்ஸர் அடித்த சரத்குமார் கடைசி ஓவரில் 1 பவுண்டரி 8 சிக்ஸருடன் 62 (26) ரன்களை முரட்டுத்தனமாக அடித்து போராடி ஆட்டமிழந்தார்.

இறுதியில் 20 ஓவர்களில் திண்டுக்கல்லை 163/9 ரன்களுக்கு கட்டுப்படுத்தி 30 ரன்கள் வித்தியாசத்தில் கோவை வென்றது. பந்து வீச்சில் அதிகபட்சமாக முகமது 3 விக்கெட்டுகளும் தரமணி கண்ணன் மற்றும் யுவ்தீஸ்வரன் ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் எடுத்தனர்.

இதையும் படிங்க:அந்த 2 தப்பையும் சரி பண்ணிக்கோங்க, அப்போதான் ரொம்ப நாள் விளையாட முடியும். ஷ்ரேயாஸ் ஐயருக்கு – ஆகாஷ் சோப்ரா அறிவுரை

அதனால் ஜூலை 12ஆம் தேதி நடைபெறும் மாபெரும் ஃபைனலுக்கு நடப்பு சாம்பியன் கோவை நேரடியாக முதல் அணியாக தகுதி பெற்றது. மறுபுறம் தோல்வியை சந்தித்த திண்டுக்கல் நாளை நடைபெறும் எலிமினேட்டர் போட்டியில் தோற்கும் அணியுடன் ஜூலை 10ஆம் தேதி குவாலிபயர் 2 போட்டியில் மீண்டும் மோத உள்ளது.

Advertisement