அந்த 2 தப்பையும் சரி பண்ணிக்கோங்க, அப்போதான் ரொம்ப நாள் விளையாட முடியும். ஷ்ரேயாஸ் ஐயருக்கு – ஆகாஷ் சோப்ரா அறிவுரை

Aakash-Chopra
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி இளம் வீரரான ஷ்ரேயாஸ் ஐயர் 2017-ஆம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமாகி இதுவரை 42 ஒருநாள் போட்டிகள், 49 டி20 போட்டிகள் மற்றும் 10 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று விளையாடி உள்ளார். இந்திய அணியில் 4-ஆவது இடத்தில் இறங்கும் நிரந்தர பேட்ஸ்மேனாக பார்க்கப்பட்ட அவர் இந்த ஆண்டு துவக்கத்தில் ஏற்பட்ட காயம் காரணமாக தற்போது சிகிச்சை பெற்று ஓய்வில் இருந்து வருகிறார்.

Shreyas Iyer VS RSA

- Advertisement -

எதிர்வரும் 50 ஓவர் உலகக்கோப்பை தொடரில் நான்காவது இடத்தில் இறங்கி விளையாடும் பேட்ஸ்மனாக பார்க்கப்படும் அவர் ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் கம்பேக் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காயம் காரணமாக இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரை தவறவிட்ட அவர் தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரிலும் தேர்வு செய்யப்படாமல் இருந்து வருகிறார். இந்நிலையில் காயத்திற்கு பிறகு மீண்டு இந்திய அணிக்கு திரும்ப இருக்கும் ஷ்ரேயாஸ் ஐயர் இரண்டு விடயங்களில் கவனம் செலுத்த வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

Shreyas Iyer

இது குறித்து அவர் கூறுகையில் : ஸ்ரேயாஸ் ஐயர் திறமையான வீரர் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. தன்னுடைய அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே நியூசிலாந்து அணிக்கு எதிராக சதம் விளாசி அசத்தினார். அவரைப் பொறுத்தவரை பேட்டிங்கில் சுழற்பந்து வீச்சாளர்களை மிகவும் எளிதாக கையாளுகிறார்.

- Advertisement -

ஆனால் வேகப்பந்துவீச்சாளர்களை பொறுத்தவரை ஸ்விங் பந்து வீசும் பவுலர்களையும், ஷார்ட் பால் வீசும் பவுலர்களையும் எதிர்கொள்வதில் சற்று தருமாறுகிறார். ஆனால் இந்த இரண்டு தவறையும் அவர் செய்து சரி செய்து கொண்டு நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் நிச்சயம் இந்திய அணியில் அவரால் நீண்ட தூரம் பயணிக்க முடியும்.

இதையும் படிங்க : என்னையா ட்ராப் பண்ணீங்க, செமி ஃபைனலில் சதமடித்து சச்சின், கவாஸ்கர் சாதனையை சமன் செய்த புஜாரா – கம்பேக் நிகழுமா?

தற்போதைக்கு அவர் காயத்தால் எவ்வித போட்டிகளிலும் விளையாடாமல் இருந்தாலும் நிச்சயம் அவர் இந்திய அணிக்கு திரும்பும்போது இந்த குறைகளை எல்லாம் திருத்திக் கொண்டு அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என ஆகாஷ் சோப்ரா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement