TNPL 2023 : பலப்பரீட்சை நடத்திய நடப்பு சாம்பியன்கள் – சாய் சுதர்சன் ஹாட்ரிக் அதிரடியில் சேப்பாக் வீழ்ந்தது எப்படி

Sai Sudharsan
- Advertisement -

தமிழகத்தில் நடைபெற்று வரும் 2023 டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் ஜூலை 19ஆம் தேதி இரவு 7.15 மணிக்கு திண்டுக்கல்லில் இருக்கும் என்பிஆர் காலேஜ் மைதானத்தில் நடைபெற்ற 9வது லீக் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லிஸ் மற்றும் கோவை கிங்ஸ் ஆகிய அணிகள் மோதின. கடந்த வருடம் நடைபெற்ற ஃபைனலில் மழையால் கோப்பையை பகிர்ந்து கொண்டு நடப்பு சாம்பியனாக அந்தஸ்து பெற்ற இந்த 2 அணிகளும் இப்போட்டியில் மோதியது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. அந்த நிலையில் டாஸ் வென்ற கோவை முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய சேப்பாக்கத்திற்கு ஆரம்பத்திலேயே நட்சத்திர வீரர்கள் ஜெகதீசன் 4 (5) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார்.

அடுத்து சில ஓவர்களிலேயே அடுத்து வந்த சந்தோஷ் சிவ் 14 (12) (12) ரன்களில் கேப்டன் ஷாருக்கான் வேகத்தில் கிளீன் போல்ட்டான நிலையில் மறுபுறம் ரொம்பவே தடுமாறிய நம்பிக்கை நட்சத்திரம் பிரதோஷ் பால் 6 (13) ரன்களில் பெவிலியன் திரும்பினார். அதனால் 31/2 என ஆரம்பத்திலேயே தடுமாறிய அந்த அணிக்கு அடுத்ததாக காப்பாற்றுவார்கள் என்று கருதப்பட்ட நம்பிக்கை நட்சத்திரம் பாபா அபாரஜித் 12 (13) ரன்களில் ரன் அவுட்டாகி சென்ற நிலையில் அதிரடி வீரர் சஞ்சய் யாதவ் தடுமாற்றமாக செயல்பட்டு 2 (9) ரன்களில் பெவிலியன் திரும்பினார்.

- Advertisement -

எளிதான வெற்றி:
அதன் காரணமாக 61/5 என மேலும் சரிந்த அந்த அணி 100 ரன்கள் தாண்டுமா என்று எதிர்பார்க்கப்பட்ட போது முக்கிய நேரத்தில் சசிதேவ் 23 (22) ரன்களும் ஹரிஷ் குமார் அதிரடியாக 1 பவுண்டரி 3 சிக்சரை பறக்க விட்டு 32 (20) ரன்களும் எடுக்க ரோகித் 2 பவுண்டரியுடன் 13* (9) ரன்கள் எடுத்தார். அதனால் ஓரளவு தப்பிய சேப்பாக்கம் 20 ஓவர்களில் 126/8 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் பந்து வீச்சில் அசத்திய கோவை சார்பில் அதிகபட்சமாக வள்ளியப்பன் யுவ்தீஸ்வரன் 3 விக்கெட்டுகளையும் சித்தார்த், கேப்டன் சாருக்கான், முகமது மற்றும் சுப்பிரமணியம் ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளையும் எடுத்தனர்.

அதை தொடர்ந்து 127 என்ற இலக்கை துரத்திய கோவைக்கு 39 ரன்கள் ஓபனிங் ஃபார்ட்னர்சிப் அமைத்தாலும் தடுமாற்றமாகவே செயல்பட்ட பி சச்சின் 14 (16) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றுத்துடன் சென்றார். இருப்பினும் மறுபுறம் அதிரடியாக செயல்பட்ட சுரேஷ்குமாருடன் அடுத்ததாக களமிறங்கிய சாய் சுதர்சன் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி வெற்றியை நோக்கி பயணிக்க வைத்தார். அதில் சற்று நிதானமாக விளையாடிய சுரேஷ்குமார் 14 ஓவர்கள் வரை நிலைத்து நின்று 2வது விக்கெட்டுக்கு 65 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து 8 பவுண்டரி 1 சிக்சருடன் 47 (34) ரன்கள் குவித்து வெற்றியை உறுதி செய்து ஆட்டமிழந்தார்.

- Advertisement -

இருப்பினும் மறுபுறம் நல்ல ஃபார்மில் இருக்கும் சாய் சுதர்சன் தொடர்ந்து அட்டகாசமான பேட்டிங்கை வெளிப்படுத்தி அரை சதமடித்து கோவையின் வெற்றியை உறுதி செய்தார். குறிப்பாக கடந்த ஐபிஎல் 2023 தொடரில் அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்ற மாபெரும் இறுதிப்போட்டியில் எம்எஸ் தோனி தலைமையிலான சென்னைக்கு எதிராக 95 ரன்களை விளாசி சச்சின் டெண்டுல்கர் போன்ற ஜாம்பவான்களின் பாராட்டுகளை அள்ளிய அவர் இந்த தொடரிலும் முதலிரண்டு போட்டிகளில் தலா 80க்கு மேற்பட்ட ரன்களை குவித்தார்.

அந்த வரிசையில் தற்போது ஹாட்ரிக் அரைசதம் அடித்துள்ள அவர் இந்தப் போட்டியிலும் கடைசி வரை அவுட் ஆகாமல் 9 பவுண்டரி 1 சிக்சருடன் 64* (43) ரன்கள் எடுத்து வெற்றி பெற வைத்தார். அதனால் 16.3 ஓவரிலேயே 128/2 ரன்கள் எடுத்த கோவை 8 விக்கெட் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றி பெற்றது. மறுபுறம் பெரிய இலக்கை நிர்ணயிக்கத் தவறிய சேப்பாக்கம் சார்பில் அதிகபட்சமாக ரஹீல் ஷா மற்றும் லோகேஷ் ராஜ் ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்தும் வெற்றிக்கான முடியவில்லை.

இதையும் படிங்க:Ashes 2023 : தைரியதால் தப்பு கணக்கு போட்டதா இங்கிலாந்து? போராடும் ஆஸி – பரபரப்பான முதல் டெஸ்டை வெல்லப்போவது யார்

இந்த வெற்றிக்கு 4 ஓவரில் 29 ரன்களை மட்டும் கொடுத்து 3 விக்கெட்டுகளை எடுத்து முக்கிய பங்காற்றிய யுவ்தீஸ்வரன் ஆட்டநாயகன் விருதை வென்றார். இந்த வெற்றியால் இதுவரை பங்கேற்ற 3 போட்டிகளில் இரண்டாவது வெற்றியை பதிவு செய்த கோவை புள்ளி பட்டியலில் 2வது இடத்திற்கு முன்னேறியது. மறுபுறம் 3 போட்டிகளில் முதல் தோல்வியை பதிவு செய்த சேப்பாக்கம் ரன் ரேட் அடிப்படையில் புள்ளி பட்டியலில் 4வது இடத்திற்கு சரிந்தது.

Advertisement