Ashes 2023 : தைரியதால் தப்பு கணக்கு போட்டதா இங்கிலாந்து? போராடும் ஆஸி – பரபரப்பான முதல் டெஸ்டை வெல்லப்போவது யார்

- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் துவங்கியுள்ள நூற்றாண்டு பழமை வாய்ந்த ஆஷஸ் 2023 டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் ஜூலை 16ஆம் தேதி பர்மிங்கம் நகரில் துவங்கிய முதல் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 393/8 ரன்கள் குவித்து முதல் நாளிலேயே டிக்ளர் செய்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. அந்த அணிக்கு அதிகபட்சமாக நம்பிக்கை நட்சத்திரம் ஜோ ரூட் 118* ரன்களும் ஜானி பேர்ஸ்டோ 78 ரன்களும் ஜாக் கிராவ்லி 61 ரன்களும் எடுக்க ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக நேதன் லயன் 4 விக்கெட்களை சாய்த்தார்.

அதை தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியாவுக்கு டேவிட் வார்னர் 9, மார்னஸ் லபுஸ்ஷேன் 0, ஸ்டீவ் ஸ்மித் 16 என டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் குறைந்த ரன்களில் பெவிலியன் திரும்பினார். அதனால் 67/3 என சரிந்த அந்த அணிக்கு மற்றொரு தொடக்க வீரர் உஸ்மான் கவாஜா நங்கூரமாக பேட்டிங் செய்த நிலையில் எதிர்ப்புறம் டிராவிஸ் ஹெட் 50, கேமரூன் கிரீன் 38 அலெக்ஸ் கேரி 66 என முக்கிய மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் பொறுப்புடன் செயல்பட்டு முக்கிய ரன்கள் எடுத்தனர். அத்துடன் 38 ரன்கள் எடுத்த கேப்டன் கமின்ஸ் உடன் இணைந்த கவாஜா இங்கிலாந்து மண்ணில் தன்னுடைய முதல் சதமடித்து பெரிய சவாலை கொடுத்ததால் ஆஸ்திரேலியா முன்னிலை பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

- Advertisement -

பரபரக்கும் டெஸ்ட்:
ஆனால் பேட்டிங்கை போலவே வித்தியாசமாக இருபுறத்திலும் தலா 3 ஃபீல்டர்களை நிறுத்திய பென் ஸ்டோக்ஸ் சிங்கிள் கூட எடுக்க விடாமல் அழுத்தத்தை கொடுத்ததால் 141 ரன்களில் கவாஜாவை ஒரு வழியாக அவுட்டாக்கிய இங்கிலாந்து டெயில் எண்டர்களையும் விரைவில் சாய்த்து ஆஸ்திரேலியாவை 386 ரன்களுக்கு கட்டுப்படுத்தியது. அந்த அணிக்கு பந்து வீச்சில் அதிகபட்சமாக ஓலி ராபின்சன் மற்றும் ஸ்டுவர்ட் ப்ராட் ஆகியோர் தலா 3 விக்கெட்களை எடுத்தனர்.

அதை தொடர்ந்து 7 ரன்கள் முன்னிலையுடன் களமிறங்கிய இங்கிலாந்துக்கு ஜாக் கிராவ்லி 7, பென் டூக்கெட் 19 என தொடக்க வீரர்கள் குறைந்த ரன்களில் பெவிலியன் திரும்பிய நிலையில் ஓலி போப் 14 (16) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார். அதை விட நம்பிக்கை நட்சத்திரம் ஜோ ரூட் 46 (55) ஹரி ப்ரூக் 46 (52) என முக்கிய மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அதிரடியாக விளையாட முயற்சித்து நேதன் லயன் சுழலில் அவுட்டானது இங்கிலாந்துக்கு பெரிய பின்னடைவை கொடுத்தது.

- Advertisement -

அதனால் சற்று நிதானத்துடன் விளையாட முயற்சித்த கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 43 (66) ரன்களில் கேப்டன் கமின்ஸ் வேகத்தில் அவுட்டானதை போல மறுபுறம் 20 ரன்களுக்கு மேல் நேதன் லயன் சுழலில் தாக்குப் பிடிக்க முடியாமல் ஜானி பேர்ஸ்டோ பெவிலியன் திரும்பினார். அதை பயன்படுத்திய ஆஸ்திரேலியா அடுத்து வந்த மொய்ன் அலி 19, ஓலி ராபின்சன் 27 என லோயர் ஆர்டர் பேட்ஸ்மேன்களையும் குறைந்த இடங்களில் அவுட்டாக்கி இங்கிலாந்தை வெறும் 273 ரன்களுக்கு சுருட்டியது.

அந்த அணிக்கு அதிகபட்சமாக கேப்டன் பட் கமின்ஸ் மற்றும் நேதன் லயன் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளை எடுத்தனர். இறுதியில் 281 என்ற எட்டக்கூடிய இலக்கை துரத்தும் ஆஸ்திரேலியாவுக்கு 61 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல தொடக்கம் கொடுத்த டேவிட் வார்னர் 36 ரன்களில் மாலை நேரத்தில் அவுட்டாகி செல்ல அடுத்து வந்த உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேன் மார்னஸ் லபுஸ்ஷேன் 13 ரன்களில் ஸ்டுவர்ட் ப்ராட் வேகத்தில் ஆட்டமிழந்தார். போதாக்குறைக்கு அடுத்து வந்த நம்பிக்கை நட்சத்திரம் ஸ்டீவ் ஸ்மித் 6 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்த நிலையில் மறுபுறம் மீண்டும் நங்கூரமாக நிற்கும் உஸ்மான் கவாஜா 34* ரன்கள் எடுத்து இங்கிலாந்துக்கு சவாலை கொடுத்து வருகிறார்.

- Advertisement -

அதனால் 4வது நாள் முடிவில் 107/3 ரன்கள் எடுத்துள்ள ஆஸ்திரேலியாவுக்கு எதிர்ப்புறம் நைட் வாட்ச்மேன் ஸ்காட் போலண்ட் 13* ரன்களுடன் உள்ளார். தற்போதைய நிலைமையில் கடைசி நாளில் ஆஸ்திரேலியாவுக்கு வெறும் 124 ரன்கள் மட்டுமே தேவைப்படும் நிலையில் இங்கிலாந்துக்கு 7 விக்கெட்கள் வெற்றிக்கு தேவைப்படுவதால் இந்த போட்டியில் உச்சகட்ட பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க:இந்த ஒரு தோல்வியால் யாரும் ரோஹித்தை குறைச்சி மதிப்பிடாதீங்க. ஆதரவு தெரிவித்த – மைக்கல் கிளார்க்

குறிப்பாக முதல் நாளில் தைரியமாக 400 – 450 ரன்களை எடுக்காமல் டிக்ளர் செய்து இங்கிலாந்து முடிவு பந்து வீச்சில் கடைசி நாளில் சொதப்பும் பட்சத்தில் தோல்வியை கொடுக்க காத்திருக்கிறது. இருப்பினும் கடைசி நாளில் சேசிங் செய்வது கடினம் என்ற நிலையில் ஒரு நல்ல பார்ட்னர்ஷிப்பை எப்படியாவது அமைத்து வெற்றி பெற ஆஸ்திரேலியா போராடி வருகிறது.

Advertisement