இங்கிலாந்து நாட்டின் லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டியில் ஆஸ்திரேலிய அணி இந்திய அணியை 209 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை கைப்பற்றி அசத்தியது. இந்த போட்டியில் தோல்வியடைந்த இந்திய அணியானது இரண்டாவது முறையாக ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை கைப்பற்றும் வாய்ப்பை இழந்தது.
அதோடு கடந்த 2013-ஆம் ஆண்டிற்கு பிறகு இந்த இந்திய அணி எந்த ஒரு ஐசிசி தொடரையும் கைப்பற்றவில்லை என்று கூறப்பட்டு வரும் வேளையில் இந்த இறுதி போட்டியில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி இந்த சோக கதைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இந்த போட்டியிலும் இந்திய அணி தோல்வியை சந்தித்தது ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியது. அதோடு அந்த போட்டியில் தோல்வியடைந்ததை அடுத்து ரோகித் சர்மாவின் கேப்டன்சி சரியில்லை என்று பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன.
மேலும் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து அவரை நீக்க வேண்டும் என்ற குரல்களும் எழுந்து வருகிறது. இந்நிலையில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவை ஆதரித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனான மைக்கேல் கிளார்க் சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.
இது குறித்த அவர் கூறுகையில் : உலக டெஸ்ட் சாம்பியன்ஸ் தொடரின் இறுதி போட்டியில் இந்திய அணி தோற்றுவிட்டது என்பதனால் ரோகித் சர்மாவை இந்திய அணிக்கு தலைமை தாங்க சரியான ஆள் இல்லை என்று கூற முடியாது. ஏனெனில் அவர் ஒரு நல்ல கேப்டன் அவரது ஆக்ரோஷமான அணுகுமுறை எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் மீது பெரிய நம்பிக்கை இருக்கிறது.
இதையும் படிங்க : அந்த அனுபவமே போதும், இம்முறை இந்தியாவில் நடக்கும் 2023 உ.கோ நாங்க தான் ஜெயிப்போம் – ரபாடா உறுதி
இந்த ஒரு தோல்வியினால் அவரின் கேப்டன்சியை குறைத்து மதிப்பிடக் கூடாது என மைக்கல் கிளார்க் ஆதரவு தெரிவித்துள்ளார். ஏற்கனவே இந்திய அணி அடுத்த கட்டத்தை நோக்கி பயணிக்க ஆரம்பித்துள்ள வேளையில் இன்னும் ஓரிரு டெஸ்ட் தொடருக்குள் ரோகித் சர்மாவை கேப்டன் பொறுப்பில் இருந்து அணி நிர்வாகம் நீக்க உள்ளதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.