அந்த அனுபவமே போதும், இம்முறை இந்தியாவில் நடக்கும் 2023 உ.கோ நாங்க தான் ஜெயிப்போம் – ரபாடா உறுதி

Kagiso Rabada
- Advertisement -

உலகப் புகழ் பெற்ற ஐசிசி 2023 உலகக்கோப்பை வரும் அக்டோபர் மாதம் இந்தியாவில் கோலாகலமாக நடைபெறுகிறது. சர்வதேச கிரிக்கெட்டின் உண்மையான சாம்பியனை தீர்மானிக்கும் இந்த 50 ஓவர் போட்டிகளை அடிப்படையாகக் கொண்ட தொடரை 1987, 2011 ஆகிய வருடங்களில் இலங்கை, வங்கதேசம் போன்ற அண்டை நாடுகளுடன் இணைந்து நடத்திய இந்தியா வரலாற்றிலேயே முதல் முறையாக தற்போது முழுக்க முழுக்க தங்கள் மண்ணிலேயே நடத்த உள்ளது. அதன் காரணமாக எப்போதுமே சொந்த மண்ணில் சிறப்பாக செயல்படும் இந்தியா 2011 போல இந்த பொன்னான வாய்ப்பை பயன்படுத்தி 2013க்குப்பின் 10 வருடங்களாக ஐசிசி தொடர்களில் சந்தித்து வரும் தோல்விகளை நிறுத்துமா என்று எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது.

worldcup

- Advertisement -

இருப்பினும் அதற்கு நடப்புச் சாம்பியன் இங்கிலாந்து, ஏற்கனவே 5 கோப்பைகளை வென்று வெற்றிகரமாக திகழும் ஆஸ்திரேலியா, எங்களுக்குன்னே வருவீங்களா என்று இந்திய ரசிகர்களை புலம்ப வைக்கும் நியூசிலாந்து போன்ற அணிகள் இந்தியாவுக்கு பெரிய சவாலை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அது போக பாகிஸ்தான், தென்னாபிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் போன்ற எந்த அணியையும் குறைத்து மதிப்பிட முடியாது என்பதால் இத்தொடரில் சொந்த மண்ணில் சொந்த ரசிகர்களுக்கு முன்னிலையில் இந்தியா பெரிய அழுத்தத்துடன் விளையாடும் என்றால் மிகையாகாது.

ரபாடா உறுதி:
இந்நிலையில் ஐபிஎல் தொடரில் கடந்த பல வருடங்களாக தாம் உட்பட தங்கள் நாட்டைச் சேர்ந்த நிறைய வீரர்கள் விளையாடி வருவதால் இந்தியாவின் கால சூழ்நிலைகளை நன்கு உணர்ந்து புரிந்து வைத்துள்ளதாக தெரிவிக்கும் நட்சத்திர கிரிக்கெட் வீரர் ககிஸோ ரபாடா 2023 உலக கோப்பையை முதல் முறையாக தென்னாப்பிரிக்கா வெல்லும் என்று உறுதியாக தெரிவித்துள்ளார். 1992 உலகக் கோப்பையில் மழை வந்து வெற்றியை பறித்தது முதல் 1999 உலகக்கோப்பை செமி ஃபைனலில் சொதப்பியது வரை காலம் காலமாக தென்னாபிரிக்காவுக்கு உலகக்கோப்பை என்றாலே ராசியில்லாமல் இருந்து வருகிறது.

Rabada

அது போக கடந்த டி20 உலக கோப்பையில் நெதர்லாந்திடம் தோற்று வெளியேறியதைப் போல் முக்கிய தருணத்தில் காலம் காலமாக சொதப்புவதை வழக்கமாக வைத்துள்ள தென்னாபிரிக்கா “சோக்கர்” என்று அழைக்கப்படுவது வழக்கமாகும். இருப்பினும் இம்முறை இந்தியாவில் விளையாடிய அனுபவத்தை பெற்றிருப்பதால் தங்களது அணி சாதிக்கும் என்று உறுதியாக தெரிவிக்கும் அவர் இது பற்றிய சமீபத்திய பேட்டியில் பேசியது பின்ருமாறு. “சுழலுக்கு சாதகமான இந்திய பிட்ச்களில் விளையாடுவது வேகப்பந்து வீச்சாளர்களுக்கு மிகவும் கடினமாகும். இருப்பினும் ஆரம்ப காலங்களில் ஒரு இளம் வீரருக்கு தெரியாத அடிப்படையான தகவல்களும் அனுபவமும் இந்த வயதில் எனக்கு தெரிந்துள்ளதை சவாலாக எடுத்துக் கொள்கிறேன்”

- Advertisement -

“எனவே நீங்கள் எப்போதும் வெவ்வேறு மைதானங்களிலும் தொடர்ந்து பாடங்களை கற்றுக்கொண்டு தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்படுவது அவசியமாகும். அத்துடன் இவை அனைத்தும் பிட்ச்சை நன்கு படிப்பதிலும் அதற்கு தகுந்த வீரர்களை தேர்வு செய்து நீங்கள் எந்த வகையான லட்சியத்துடன் விளையாடுகிறீர்கள் என்பதை பொறுத்து அமையும். எனவே வெற்றி என்பது சூழ்நிலைகளை சரியாக படிப்பது மற்றும் உங்களுடைய திறமைகளை வெற்றிகரமாக செயல்படுத்துவது ஆகியவற்றைப் பொறுத்ததாகும்”

“இப்படி சொல்வது அநாகரிமாகவும் எளிதாகவும் தெரியலாம். ஆனால் இது மிகவும் கடுமையான செயல்முறைகளைக் கொண்டது. அந்த செயல்களில் தற்போது நான் ஈடுபட்டுள்ளேன். அங்கு தான் நான் இருக்கிறேன். மொத்தத்தில் இந்தியாவில் நடைபெறும் உலகக் கோப்பையில் விளையாடுவது எங்களுக்கு சாதகமாக இருக்கும் என்று நினைக்கிறேன். ஏனெனில் கடந்த பல வருடங்களாக நாங்கள் ஐபிஎல் தொடரில் நிறைய விளையாடியுள்ளோம். குறிப்பாக இந்தியாவில் இருக்கும் பெரும்பாலான மைதானங்களில் விளையாடியுள்ள நாங்கள் அங்குள்ள கால சூழ்நிலைகளை புரிந்து கொண்டுள்ளோம்” என்று கூறினார்.

இதையும் படிங்க:Ashes 2023 : பாவம் மொய்ன் அலி, காயத்துக்கு மனசாட்சியின்றி இவ்ளோ பெரிய தண்டனையா? ஆதாரத்துடன் ஐசிசியை விளாசிய ப்ராட் ஹாக்

அவர் கூறுவது போல அவர் மட்டுமல்லாமல் டேவிட் மில்லர், நோர்ட்ஜெ உட்பட நிறைய தென்னாப்பிரிக்க வீரர்களை போல இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற வெளிநாட்டு வீரர்களும் ஐபிஎல் தொடரில் விளையாடி இந்தியாவின் கால சூழ்நிலைகளை புரிந்து கொண்டு இந்திய வீரர்களின் பலம் பலவீனங்களை தெரிந்து கொண்டுள்ளனர். அதனால் சொந்த மண்ணில் பெயருக்காக மட்டும் களமிறங்கும் இந்தியா கடினமாக உழைத்தால் மட்டுமே வெற்றி பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement