Ashes 2023 : பாவம் மொய்ன் அலி, காயத்துக்கு மனசாட்சியின்றி இவ்ளோ பெரிய தண்டனையா? ஆதாரத்துடன் ஐசிசியை விளாசிய ப்ராட் ஹாக்

Bradd Hogg
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நூற்றாண்டு பழமை வாய்ந்த 2023 ஆஷஸ் கிரிக்கெட் தொடரில் களமிறங்கியுள்ள இங்கிலாந்து ஜூலை 16ஆம் தேதி பர்மிங்கம் நகரில் துவங்கிய முதல் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்து 393/8 ரன்களை அதிரடியாக குவித்து முதல் நாளிலேயே டிக்ளர் செய்து அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தது. அந்த அணிக்கு அதிகபட்சமாக நம்பிக்கை நட்சத்திரம் ஜோ ரூட் சதமடித்து 118* ரன்களும் ஜானி பெஸ்ட் 78 ரன்களும் எடுக்க ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக நேதன் லயன் 4 விக்கெட்டுகளை சாய்த்தார். அதைத்தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியா முடிந்தளவுக்கு போராடியும் 386 ரன்கள் மட்டுமே எடுத்தது.

அந்த அணிக்கு அதிகபட்சமாக அலெக்ஸ் கேரி 66 ரன்களும் டிராவிஸ் ஹெட் 50 ரன்களும் எடுக்க தொடக்க வீரர் உஸ்மான் கவாஜா நங்கூரமாக நின்று சவாலை கொடுத்து சதமடித்து 141 ரன்களும் எடுத்தார். இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக ஓலி ராபின்சன் மற்றும் ஸ்டுவர்ட் ப்ராட் ஆகியோர் தலா 2 விக்கெட் எடுத்தனர். அதைத்தொடர்ந்து 7 ரன்கள் முன்னிலையுடன் களமிறங்கிய இங்கிலாந்து 4வது நாள் உணவு இடைவெளியில் 155/5 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. அந்த அணிக்கு ஜோ ரூட் மற்றும் ஹரி ப்ரூக் தலா 46 ரன்கள் எடுத்து அவுட்டான நிலையில் களத்தில் கேப்டன் பென் ஸ்டோக்ஸ், ஜானி பேர்ஸ்டோ ஆகியோர் விளையாடி வருகின்றனர்.

- Advertisement -

காயத்துக்கு அபராதம்:
முன்னதாக இந்த போட்டியில் 2வது நாளின் 89வது ஓவரில் தன்னுடைய கைகள் உலர்வாக இருப்பதற்காக மருந்து போன்ற திரவத்தை இங்கிலாந்து வீரர் மொயின் அலி நேர்மைக்கு புறம்பாக பயன்படுத்தியதாக போட்டியின் நடுவர் புகார் செய்தார். அதை ஏற்றுக்கொண்ட ஐசிசி அவருக்கு இந்த போட்டியிலிருந்து 25% சம்பளம் அபராதமும் ஒரு கருப்பு புள்ளியையும் தண்டனையாக அறிவித்தது அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தது. அதாவது அந்த போட்டியில் கையில் லேசான காயத்தை சந்தித்த மொயின் அலி அதை உலர்வாக வைத்துக் கொள்வதற்காக மருந்துப் போன்ற திரவத்தை பயன்படுத்தினார்.

ஆனால் அதை நடுவரிடம் கேட்காமல் தன்னிச்சையாக பயன்படுத்திய காரணத்தால் நேர்மைக்கு புறம்பான அடிப்படை விதிமுறையை மீறியதாக நடுவர் தெரிவித்த புகாரை ஏற்றுக்கொண்ட ஐசிசி தண்டனை கொடுத்தது. அதே சமயம் பந்தை சேதப்படுத்தும் நோக்கத்தில் அந்த மருந்தை பயன்படுத்தாத காரணத்தால் மேற்கொண்டு எந்த விசாரணையும் மொய்ன் அலியிடம் நடத்தப்படாது என்று ஐசிசி தெரிவித்தது. இந்நிலையில் அந்தப் போட்டியில் தன்னுடைய சுட்டு விரலில் கிட்டத்தட்ட ரத்தம் வரும் அளவுக்கு காயத்தை மொய்ன் அலி காயத்தை சந்தித்தார்.

- Advertisement -

அந்த நிலையில் மேற்கொண்டு காயம் பெரிதாகாமல் இருப்பதற்காக வலி நிவாரணியை தான் மொய்ன் அலி பயன்படுத்தியதாக தெரிவிக்கும் முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் பிராட் ஹாக் இதற்கு தண்டனை கொடுத்தது சரியல்ல என்று அதற்கு வெளிப்படுத்தியுள்ளார். ஒருவேளை ஐசிசி மற்றும் நடுவர்கள் கூறியது போல் நேர்மைக்கு புறம்பாக நடக்க நினைத்தால் மொய்ன் அலி ஏன் மைதானத்தில் வெட்ட வெளியில் அந்த மருந்தை பயன்படுத்த வேண்டும்? மாறாக பெவிலியனுக்கு சென்று யாருக்கும் தெரியாமல் பயன்படுத்தியிருக்கலாமே? என்றும் அவர் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

எனவே நடுவர் புகார் தெரிவித்தார் என்பதற்காக ஐசிசி எதுவுமே கேட்காமல் கண்மூடித்தனமாக தண்டனை கொடுத்துள்ளது ஏமாற்றமளிப்பதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி மொய்ன் அலி காயமடைந்த புகைப்படத்தை தனது ட்விட்டரில் ஆதாரமாக பதிவிட்டு கூறியுள்ளது பின்வருமாறு. “தனது கையில் ஏற்பட்ட காயத்தை தடுப்பதற்காகவே அதை பயன்படுத்திய மொய்ன் அலி வேறு எந்த நோக்கத்திற்காகவும் பயன்படுத்தவில்லை என்பது தெரிந்த போது இந்த 25% அபராதம் என்பது ஓவர் ஸ்பின் போல சற்று அதிகப்படியானது”

இதையும் படிங்க:வீடியோ : தலைக்கு எவ்ளோ தில்லு பாத்தியா? முதல் ஓவரிலேயே தைரியமாக வித்யாசமாக மிரட்டிய ஜோ ரூட் – தடுமாறும் இங்கிலாந்து

“ஒருவேளை அவர் நினைத்திருந்தால் களத்தை விட்டு வெளியேறி யாருக்கும் தெரியாமல் அதை பயன்படுத்தி இருக்க முடியும். ஆனால் அதை செய்யாத அவர் வெளிப்படையாக செய்தார். இருப்பினும் நியாயம் அவருடைய விரலுக்கு கொடுக்கப்பட்டது” என்று கூறியுள்ளார். முன்னதாக டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓய்வு பெற்ற மொய்ன் அலி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் கோரிக்கையால் அதிலிருந்து மீண்டும் திரும்பி களமிறங்கிய இந்த கம்பேக் முதல் போட்டியில் அதுவும் தன்னுடைய பிறந்த நாளில் இப்படி ஒரு பின்னடைவை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement