TNPL 2023 : முதல் வெற்றிக்கே திணறும் திருச்சி, சவாலன பிட்ச்சில் சுஜய் அசத்தல் – சிறிய இலக்கை கோவை போராடி எட்டியது எப்படி

TNPL 12
- Advertisement -

தமிழகத்தில் நடைபெற்று வரும் டிஎன்பிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் ஜூன் 21ஆம் தேதி இரவு 7.15 மணிக்கு திண்டுக்கல்லில் இருக்கும் என்பிஆர் காலேஜ் மைதானத்தில் நடைபெற்ற 12வது லீக் போட்டியில் திருச்சி மற்றும் கோவை கிங்ஸ் ஆகிய அணிகள் மோதின. அந்த போட்டியில் டாஸ் அதிர்ஷ்டத்தை பெற்ற கோவை முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய திருச்சிக்கு அக்ஷய் ஸ்ரீனிவாசனை டக் அவுட்டாகிய சித்தார்த் தன்னுடைய அடுத்த ஓவரில் அடுத்து வந்த மணி பாரதியையும் டக் அவுட்டாக்கி அடுத்ததாக வந்த பெராரியோவை கோல்டன் டக் அவுட்டாக்கி மிரட்டலை கொடுத்தார்.

அதனால் 12/3 என ஆரம்பத்திலேயே திண்டாடிய திருச்சியை ஒருபுறம் மற்றொரு தொடக்க வீரர் கங்கா ஸ்ரீதர் ராஜூ நிதானமாக விளையாடி காப்பாற்ற போராடினார். ஆனால் எதிர்புறம் ஜாபர் ஜமால் 11 (9) வினோத் 1 (7) என முக்கிய மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். இருப்பினும் மறுபுறம் தொடர்ந்து போராடிய கங்கா ஸ்ரீதர் ராஜு அரை சதமடித்து 8 பவுண்டரி 1 சிக்சருடன் 58 (55) ரன்கள் எடுத்து முக்கிய நேரத்தில் அவுட்டாக கடைசியில் திருச்சி பேட்ஸ்மேன்கள் அதிரடியாக விளையாடுவதற்கு திண்டாடினர்.

- Advertisement -

எளிதான வெற்றி:
இறுதியில் ராஜ்குமார் 3 பவுண்டரி 2 சிக்சருடன் 31* (28) ரன்கள் எடுத்ததால் ஓரளவு மட்டுமே தப்பிய திருச்சி 20 ஓவர்களில் வெறும் 117/6 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்தளவுக்கு சாதகமான மைதானத்தில் சிறப்பாக பந்து வீசி ஆரம்பத்திலேயே வெற்றியை உறுதி செய்த கோவை சார்பில் அதிகபட்சமாக மணிமாறன் சித்தார்த் 3 விக்கெட்டுகளும் கேப்டன் சாருக்கான் 2 விக்கெட்டுகளும் முகமது 1 விக்கெட்டும் சாய்த்தனர்.

அதைத்தொடர்ந்து 118 என்ற சுலபமான இலக்கை துரத்திய கோவைக்கு ஒருபுறம் இளம் வீரர் சுஜய் அதிரடியாக விளையாடிய நிலையில் எதிர்புறம் சுரேஷ்குமார் 9 (10) நம்பிக்கை நட்சத்திரம் சாய் சுதர்சன் 7 (6) ராம் அரவிந்த் 2 (4) என முக்கிய பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார்கள். அதனால் 49/3 என தடுமாறி அந்த அணிக்கு சுஜய் அதிரடியாக விளையாடி அரை சதமடித்த நிலையில் எதிர்ப்புறம் சற்று தடுமாற்றமாக செயல்பட்ட முகிலேஷ் 9 (16) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்துடன் சென்றார்.

- Advertisement -

ஆனாலும் இலக்கு மிகவும் குறைவாக இருந்த காரணத்தால் அதை அடிப்பதற்கு நானே போதும் என்ற வகையில் செயல்பட்ட சுஜய் 7 பவுண்டரி 2 சிக்சருடன் 72* (59) ரன்கள் குவித்து எளிதாக வெற்றி பெற வைத்தார். அவருடன் அதிக் உர் ரஹ்மான் 13* (15) ரன்கள் எடுத்ததால் 18.2 ஓவரிலேயே 119/4 ரன்கள் எடுத்த கோவை 6 விக்கெட் வித்தியாசத்தில் எளிதான வெற்றி பெற்றது. மறுபுறம் எதிர்பார்த்தது போலவே பேட்டிங்கில் சொதப்பி போராடுவதற்கு தேவையான இலக்கை நிர்ணயிக்கத் தவறிய திருச்சி சார்பில் அதிகபட்சமாக டார்ல் பெராரியோ 2 விக்கெட்டுகள் எடுத்தும் வெற்றி காண முடியவில்லை.

இந்த வெற்றிக்கு சவாலான பிட்ச்சில் 72 ரன்கள் எடுத்து முக்கிய பங்காற்றிய சுஜய் ஆட்டநாயகன் விருது வென்றார். இந்த வெற்றியால் இதுவரை பங்கேற்ற 4 போட்டிகளில் 3வது வெற்றியை பதிவு செய்த நடப்பு சாம்பியன் கோவை கிங்ஸ் புள்ளி பட்டியலில் 6 புள்ளிகளுடன் ரன் ரேட் அடிப்படையில் 2வது இடத்தைப் பிடித்துள்ளது. முதலிடத்தில் ரவிச்சந்திரன் அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ் பங்கேற்ற 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று 6 புள்ளிகளுடன் இருக்கிறது.

இதையும் படிங்க:16 வருஷமா தோனி சி.எஸ்.கே அணிக்காக எந்த முடிவை எடுத்தாலும் ஒருத்தர் கிட்ட மட்டும் தான் சொல்லுவாரு – காசி விசுவநாதன் பேட்டி

மறுபுறம் பங்கேற்ற 3 போட்டிகளில் 3 தோல்விகளை பதிவு செய்து இதுவரை முதல் வெற்றியை பெறுவதற்கு திண்டாடி வரும் திருச்சி புள்ளி பட்டியலில் 7வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. அதனால் பிளே ஆப் சுற்றுக்குச் செல்ல எஞ்சிய போட்டிகளில் அந்த அணி நிச்சயம் வென்றாக வேண்டும் என்ற நிலைமையில் களமிறங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement