16 வருஷமா தோனி சி.எஸ்.கே அணிக்காக எந்த முடிவை எடுத்தாலும் ஒருத்தர் கிட்ட மட்டும் தான் சொல்லுவாரு – காசி விசுவநாதன் பேட்டி

Kasi
- Advertisement -

இந்தியாவில் அண்மையில் நடைபெற்று முடிந்த 16-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது கோப்பையை கைப்பற்றி ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை சாம்பியன் பட்டம் பெற்ற அணியாக மும்பை இந்தியன்ஸ் அணி உடன் சாதனையை சமன் செய்துள்ளது. அதோடு சிஎஸ்கே அணி எவ்வளவு வலிமையான அணி என்பதையும் மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது.

CSK

- Advertisement -

இந்நிலையில் 41 வயதாகும் தல தோனிக்கு நடைபெற்று முடிந்த இந்த தொடரே கடைசி தொடராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் ரசிகர்களின் அன்புக்காகவும் பாசத்திற்காகவும் அவர் மேலும் ஒரு சீசனில் விளையாடுவதாக அறிவித்துள்ளார். இதன் காரணமாக தோனி அடுத்த ஆண்டு விளையாடுவது உறுதியாகி உள்ளது. அதோடு நடப்பு சீசனில் முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக தற்போது அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ள தோனி ராஞ்சியில் முழு ஓய்வினை எடுத்து வருகிறார்.

இந்நிலையில் சென்னை அணிக்கும் கேப்டன் தோனிக்கும் இடையேயான பிணைப்பு குறித்து பேசியுள்ள சென்னை அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் கூறுகையில் : தோனி ஐபிஎல் தொடர் முடிவடைந்த கையோடு மும்பை சென்று அறுவை சிகிச்சை செய்வதாக எங்களிடம் உடனடியாக தெரிவித்தார். அதுமட்டும் இன்றி எதிர்காலத்தில் என்ன முடிவுகளை எடுக்க வேண்டும் என்பது குறித்து அவருக்கு தெளிவாக தெரியும்.

Srinivasan

எனவே நாங்கள் அவரிடம் எதையும் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. தோனி அறுவை சிகிச்சை முடித்த கையோடு ராஞ்சி சென்றடைந்த வேளையில் புதுமண தம்பதிகளாக ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் அவரது மனைவியை சந்தித்தார்.

- Advertisement -

அதோடு அடுத்த ஆண்டு ஜனவரி முதல் பிப்ரவரி வரை அவர் எந்தவித கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடப் போவதில்லை. அதன்பிறகே அவர் எந்தவொரு முடிவினையும் மேற்கொள்வார் என்று காசி விஸ்வநாதன் கூறினார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் : சென்னை அணியை பொறுத்தவரை அவர் எந்த ஒரு முடிவுகளை எடுக்க வேண்டும் என்றாலும் எங்களிடம் கூற மாட்டார்.

இதையும் படிங்க : ஐ.சி.சி டெஸ்ட் பவுலர்கள் தரவரிசை : நம்பர் 1 இடத்தில் நீடிக்கும் தமிழக வீரர் – டாப் 10 ல் 3 இந்திய வீரர்கள் – விவரம் இதோ

நேரடியாக உரிமையாளர் ஸ்ரீனிவாசனிடம் மட்டுமே கூறுவார். அவரை தவிர்த்து வேறு யாரையும் அழைத்து தோனி எதையும் சொல்ல மாட்டார். ஸ்ரீனிவாசன் மூலமாகவே தோனி சொல்வதை நாங்கள் அறிந்து கொள்வோம். இது இப்போது மட்டுமல்ல 2008 ஆம் ஆண்டு முதல் இப்படித்தான் நடந்து வருகிறது என காசி விஸ்வநாதன் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement