IND vs BAN : நல்லவேளை ரன் அவுட் ஆயிட்டாரு. இல்லனா இந்தியா தோத்தே போயிருக்கும் – பயம்காட்டிய பங்களாதேஷ் வீரர்

Litton-das
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணி ஏற்கனவே பங்கேற்று விளையாடியுள்ள மூன்று ஆட்டங்களில் இரண்டு வெற்றி பெற்று நான்கு புள்ளிகளுடன் இருக்கும் வேளையில் இன்று அடிலெயிடு கிரிக்கெட் மைதானத்தில் பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் பங்கேற்று விளையாடியது. இந்த போட்டியில் பங்களாதேஷ் அணியை வீழ்த்தினால் மட்டுமே அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்ய முடியும் என்கிற வேளையில் இன்றைய ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியானது 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 184 ரன்கள் குவித்தது.

Virat Kohli IND vs BAN

- Advertisement -

இந்திய அணியின் சார்பாக விராட் கோலி அதிகபட்சமாக 64 ரன்களை விளாசினார். அதனை தொடர்ந்து 185 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய பங்களாதேஷ் அணியானது இந்திய அணியை தாக்குப் பிடிக்க முடியாமல் விரைவில் ஆட்டம் இழந்து விடும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் துவக்கம் முதலே அந்த அணி மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

அதிலும் குறிப்பாக பங்களாதேஷ் அணியின் துவக்க வீரரான லிட்டன் தாஸ் இரண்டாவது ஓவரிலிருந்து பவுண்டரிகளும், சிக்சர்களுமாக பறக்க விட்டார். ஒரு கட்டத்தில் 21 பந்துகளில் அரை சதத்தை பூர்த்தி செய்த அவர் இந்திய அணியின் பவுலர்களுக்கு மரண பயத்தை காட்டி தனது அதிரடியை தொடர்ந்து வெளிப்படுத்தி வந்தார்.

Liton Das

இறுதியில் 27 பந்துகளை சந்தித்த அவர் 7 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்கள் அடித்த நிலையில் 60 ரன்கள் எடுத்திருந்தபோது ராகுல் மூலம் ரன் அவுட் ஆனார். ஒரு கட்டத்தில் வங்கதேச அணி ஏழு ஓவர்களில் 66 ரன்களை குவித்து இருந்தது. அந்த நேரத்தில் மழை குறுக்கிட்டதால் போட்டி சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.

- Advertisement -

பின்னர் மீண்டும் சில ஓவர்கள் குறைக்கப்பட்டு 16 ஓவர்களில் 151 ரன்கள் அடித்தால் வெற்றி என்று நிர்ணயிக்கப்பட்டது. அப்படி மழையால் ஆட்டம் நின்று மீண்டும் துவங்கிய போது லிட்டன் தாஸ் ரன் அவுட் ஆகினார். அவர் மட்டும் ஆட்டம் இழக்காமல் இருந்தால் நிச்சயம் இந்த போட்டியில் இந்திய அணி தோல்வியை கூட சந்தித்திருக்கலாம்.

இதையும் படிங்க : வீடியோ : இவரை பாத்து கத்துக்கோங்க டிகே, அபார பினிஷிங் கொடுத்த அஷ்வின், வியந்த கோலி – கொண்டாடும் ரசிகர்கள்

இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய லிட்டன் தாஸ் 27 பந்துகளில் 60 ரன்களை குவித்தார். அதோடு இறுதி வரை போராடிய பங்களாதேஷ் அணியானது இந்திய அணியின் இலக்கை மிகச்சிறப்பாக துரத்தி 16 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 145 ரன்கள் குவித்து 5 ரன்கள் வித்தியாசத்தில் மட்டுமே தோல்வியை தழுவியது குறிப்பிடத்தக்கது.

Advertisement