IND vs ENG : இங்கிலாந்தை அதன் சொந்த மண்ணில் வைத்து சம்பவம் செய்த ஜஸ்ப்ரித் பும்ரா – படைத்த 6 சாதனைகள் இதோ

Jasprit Bumrah
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் இந்தியா பங்கேற்கும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஜூலை 12-ஆம் தேதியன்று துவங்கியது. புகழ்பெற்ற லண்டன் ஓவல் மைதானத்தில் இந்திய நேரப்படி மாலை 5.30 மணிக்கு துவங்கிய அப்போட்டியில் காயத்தால் விராட் கோலி விலகிய நிலையில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதை தொடர்ந்து பேட்டிங்கை தொடங்கிய இங்கிலாந்து அனலாக வீசிய இந்தியாவின் தரமான பந்துவீச்சுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் ஆரம்பத்திலேயே மடமடவென விக்கெட்டுகளை இழந்தது. குறிப்பாக 2-வது ஓவரில் ஜேசன் ராயை டக் அவுட் செய்த இந்தியாவின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா அதே ஓவரின் கடைசி பந்தில் ஜோ ரூட்டையும் டக் அவுட் செய்து மிரட்டினார்.

அடுத்த ஓவரிலேயே மறுபுறம் அம்பாக பாய்ந்த முகமது சமியின் ஓவரில் நம்பிக்கை நட்சத்திரம் பென் ஸ்டோக்ஸ் கோல்டன் டக் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார். அதனால் 7/3 என்ற மோசமான தொடக்கத்தை பெற்ற இங்கிலாந்துக்கு அடுத்த சில ஓவர்களில் ஜானி பேர்ஸ்டோ 7 (20) லியம் லிவிங்ஸ்டன் 0 (8) என காப்பாற்ற வேண்டிய முக்கிய பேட்ஸ்மேன்களும் பும்ராவின் மிரட்டல் பந்துகளில் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார்கள். அதனால் 25/6 என படுமோசமான தொடக்கத்தை பெற்ற அந்த அணிக்கு மெதுவாக பேட்டிங் செய்து காப்பாற்ற முயன்ற மொய்ன் அலி 14 (18) ரன்களிலும் நங்கூரத்தை போட முயன்ற கேப்டன் ஜோஸ் பட்லர் 30 (32) ரன்களிலும் அவுட்டானார்கள்.

- Advertisement -

தெறிக்கவிட்ட பும்ரா:
அதனால் 53/6 என திண்டாடிய இங்கிலாந்து 100 ரன்களை தாண்டுமா என்ற கவலை அந்நாட்டு ரசிகர்களிடம் ஏற்பட்ட நிலைகள் கடைசியில் ஓவர்ட்டன் 8 (7) கார்ஸ் 15 (26) டேவிட் வில்லி 21 (26) என பவுலர்கள் கணிசமான ரன்களை அடித்ததால் தப்பிய அந்த அணி தனது ஆல் டைம் குறைந்தபட்சத் கோரான 86 ரன்களை தாண்டினாலும் 25.2 ஓவரில் 110 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. அதன் வாயிலாக ஒருநாள் கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு எதிராக தனது குறைந்தபட்ச ஸ்கோரை பதிவு செய்த இங்கிலாந்தின் தோல்வியும் அப்போதே உறுதியானது.

அந்த அளவுக்கு புதிய பந்தை அற்புதமாக ஸ்விங் செய்து எரிமலையாக பந்துவீசிய இந்தியாவின் சார்பில் அதிகபட்சமாக ஜஸ்பிரித் பும்ரா 6 விக்கெட்டுகளும் முகமது சமி 3 விக்கெட்டுகளும் எடுத்தனர். அதைத்தொடர்ந்து 111 என்ற இலக்கை துரத்திய இந்தியாவுக்கு நீண்ட நாட்களுக்குப்பின் அணிக்கு திரும்பிய ஷிகர் தவானுடன் களமிறங்கிய கேப்டன் ரோகித் சர்மா அதிரடியான பவுண்டரிகளை பறக்கவிட்டு ரன்களை சேர்த்தார். இதில் 4 பவுண்டரியுடன் ஷிகர் தவான் கடைசி வரை அவுட்டாகாமல் 31* (54) ரன்கள் எடுத்து மெதுவாக பேட்டிங் செய்ய மறுபுறம் பட்டையை கிளப்பிய ரோகித் சர்மா 7 பவுண்டரி 5 சிக்சருடன் 76* (58) ரன்கள் குவித்து பினிஷிங் செய்தார்.

- Advertisement -

சாதனைகளின் பட்டியல்:
அதனால் 18.4 ஓவர்களில் 114 ரன்கள் எடுத்த இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1 – 0* (3) என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே தொடரில் முன்னிலை பெற்று அசத்தியுள்ளது. இந்த வெற்றிக்கு 6 விக்கெட்டுகள் வீழ்த்தி துருப்பு சீட்டாக செயல்பட்ட ஜஸ்பிரித் பும்ரா ஆட்ட நாயகன் விருதுகளை வென்று சச்சின் டெண்டுல்கர் உட்பட பல முன்னாள் ஜாம்பவான் வீரர்களின் பாராட்டு மழையில் நனைந்தார். இப்போட்டியில் மிரட்டலாக பந்துவீசிய அவர் படைத்த முக்கிய சாதனைகள் பற்றி பார்ப்போம்:

1. இப்போட்டியில் 6 விக்கெட்டுகள் எடுத்த ஜஸ்பிரித் பும்ரா ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் வெளிநாட்டு மண்ணில் சிறந்த பந்து வீச்சை பதிவு செய்த இந்திய வேகப்பந்து வீச்சாளராக புதிய வரலாறு படைத்துள்ளார். அந்த பட்டியல்:
6/19 – ஜஸ்பிரித் பும்ரா, லண்டன், இங்கிலாந்து, 2022*
6/23 – ஆஷிஷ் நெஹ்ரா, டர்பன், தென்ஆப்ப்ரிக்கா, 2003

- Advertisement -

2. மேலும் இங்கிலாந்து மண்ணில் ஒரு போட்டியில் 6 விக்கெட்டுகள் எடுத்த முதல் இந்திய வேகப்பந்துவீச்சாளர் என்ற சாதனையும் பும்ரா படைத்துள்ளார். இதற்குமுன் கடந்த 2019இல் முகமது சமி பர்மிங்காம் மைதானத்தில் 5/69 விக்கெட்டுக்கள் எடுத்திருந்ததே அதிகபட்சமாக இருந்தது.

3. அதேபோல் இங்கிலாந்து மண்ணில் ஒரு போட்டியில் 5 அல்லது அதற்கு மேற்பட்ட விக்கெட்டுகள் எடுத்த 3-வது இந்திய பவுலர் என்ற பெருமையை குல்தீப் யாதவ், முகமது சமி ஆகியோருக்குப் பின் பெற்றார்.

- Advertisement -

4. மேலும் வரலாற்றில் இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் என 2 முதன்மையான கிரிக்கெட்டிலும் ஒரு இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை எடுத்த முதல் இந்திய பந்துவீச்சாளர் என்ற புதிய சரித்திரத்தையும் அவர் எழுதியுள்ளார். இதற்கு முன் கபில்தேவ், ஜாஹீர் கான், அனில் கும்ப்ளே உட்பட எந்த இந்திய பவுலரும் இந்த 2 வகையான கிரிக்கெட்டிலும் இங்கிலாந்தில் 5 விக்கெட் ஹால் எடுத்ததில்லை.

5. இங்கிலாந்து மண்ணில் அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் அதிக முறை ஒரு இன்னிங்ஸ்சில் 5 விக்கெட்டுகள் (3 முறை) எடுத்த இந்திய பவுலர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார்.

இதையும் படிங்க : நாங்க ஒன்னும் அந்த டீம் இல்ல. உங்ககிட்ட அடி வாங்க, இங்கிலாந்தை கலாய்த்து தள்ளும் ரசிகர்கள் – முழுவிவரம் இதோ

6. அத்துடன் ஒட்டுமொத்த ஒருநாள் கிரிக்கெட்டில் மிகச்சிறந்த பந்துவீச்சை பதிவு செய்த 3-வது இந்திய பவுலர் என்ற பெருமையும் அவர் பெற்றார். அந்தப் பட்டியல்:
1. ஸ்டூவர்ட் பின்னி : 6/4
2. அனில் கும்ப்ளே : 6/12
3. ஜஸ்பிரிட் பும்ரா : 6/19*
4. ஆஷிஷ் நெஹ்ரா : 6/23
5. குல்தீப் யாதவ் : 6/25

Advertisement