ஐசிசி உலககோப்பை 2023 : நம்ம சிங்கார சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் போட்டிகளின் அட்டவணை, முழு விவரம் இதோ

World Cup Chepauk
- Advertisement -

அனைவரிடமும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஐசிசி உலக கோப்பை 2023 தொடர் வரும் அக்டோபர் மாதம் இந்தியாவில் கோலாகலமாக துவங்குகிறது. என்ன தான் டி20 உலக கோப்பை, டெஸ்ட் சாம்பியன்ஷிப் மட்டுமின்றி ஐபிஎல் போன்ற டி20 தொடர்கள் வந்தாலும் சர்வதேச கிரிக்கெட்டின் சாம்பியனை தீர்மானிக்கும் இந்த 50 ஓவர் போட்டிகளை மையப்படுத்திய தொடர் எப்போதுமே தமக்கென்று தனித்துவமான தரத்தையும் ரசிகர்களிடம் மவுசையும் கொண்டுள்ளது. அந்த வகையில் 1987, 2011 ஆகிய வருடங்களில் இலங்கை, வங்கதேசம் பாகிஸ்தான் போன்ற அண்டை நாடுகளுடன் இணைந்து நடத்திய இந்தியா வரலாற்றில் முதல் முறையாக இத்தொடரை தங்களது சொந்த மண்ணில் முழுமையாக நடத்துகிறது.

அதனால் 2011இல் எம்எஸ் தோனி தலைமையில் சாம்பியன் பட்டம் வென்றது போல சொந்த மண்ணில் வலுவான செயல்பாடுகளை வெளிப்படுத்தி வரும் இந்தியா சொந்த ரசிகர்களின் ஆதரவுடன் கோப்பையை வென்று 2013க்குப்பின் ஐசிசி தொடர்களில் தொடர்ந்து 10 வருடங்களாக சந்தித்து வரும் தோல்விகளை நிறுத்துமா என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது. இந்நிலையில் அக்டோபர் 5ஆம் தேதி அகமதாபாத் நகரில் கோலாகலமாக துவங்கும் தொடருக்கான முழு அட்டவணையை ஐசிசி மும்பையில் வெளியிட்டுள்ளது. அதன் படி முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து – நியூஸிலாந்து அணிகள் அகமதாபாத் மைதானத்தில் மோதுகின்றன.

- Advertisement -

சென்னையில் உலககோப்பை:
அதே போல தொடரை நடத்தும் இந்தியா தமிழகத்தின் தலைநகரான சிங்கார சென்னையில் இருக்கும் சேப்பாக்கம் எம்ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் அக்டோபர் 8ஆம் தம்முடைய முதல் போட்டியிலேயே 5 கோப்பைகளை வென்று வரலாற்றின் வெற்றிகரமான அணியாக ஜொலிக்கும் வலுவான ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. அதைத்தொடர்ந்து அனைவரும் ஆவலுடன் காத்திருக்கும் இந்தியா – பாகிஸ்தான் மோதும் போட்டி அக்டோபர் 15ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறுகிறது.

இந்த தொடரில் இந்தியா பங்கேற்கும் அனைத்து போட்டிகளும் மதியம் 2 மணிக்கு துவங்க உள்ளது. இந்நிலையில் சென்னையில் இருக்கும் சேப்பாக்கத்தில் இந்தியா மட்டுமின்றி வெளிநாட்டு அணிகள் பங்கேற்கும் 4 இதர போட்டிகளைப் பற்றி பார்ப்போம்:

- Advertisement -

1. அக்டோபர் 14 காலை 10.30 மணி, நியூசிலாந்து – வங்கதேசம் : கடந்த உலகக் கோப்பையில் ஃபைனல் வரை சென்று ஐசிசியின் முட்டாள்தனத்தால் தோற்காத போதிலும் கோப்பையை வெல்ல தவறிய நியூசிலாந்து இந்த தொடரில் தன்னுடைய முதல் போட்டியில் வங்கதேசத்தை எதிர்கொள்கிறது.

முழுவதுமாக பகலிலேயே நடைபெறும் இந்த போட்டியில் நியூசிலாந்து வலுவாக இருந்தாலும் சமீப காலங்களில் வங்கதேசம் உலக கோப்பையில் பெரிய அணிகளுக்கு சவாலை கொடுத்து வருவதால் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். அதே சமயம் சமீப காலங்களில் இந்தியாவுக்கு எதிராக பாம்பு நடனங்களை ஆடியதால் இந்த போட்டியில் தமிழக ரசிகர்கள் நியூசிலாந்தை ஆதரிப்பார்கள் என்று நம்பப்படுகிறது.

- Advertisement -

2. அக்டோபர் 18 மதியம் 2 மணி, நியூசிலாந்து – ஆப்கானிஸ்தான் : சென்னையில் முதல் பகலிரவு போட்டியாக ரசித் கான், நூர் அஹமத் போன்ற தரமான ஸ்பின்னர்களை கொண்ட ஆப்கானிஸ்தானை மீண்டும் நியூசிலாந்து எதிர்கொள்கிறது.

3. அக்டோபர் 23 மதியம் 2 மணி, பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் : இந்தியாவுக்கு அடுத்தபடியாக 2வது பரம எதிரியாக கருதும் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக சேப்பாக்கத்தில் சுழலுக்கு சாதகமான மைதானத்தில் தோற்று விடுவோம் என்று ஆரம்பத்திலேயே பயந்த பாகிஸ்தான் இப்போட்டியை வேறு இடத்திற்கு மாற்றுமாறு கோரிக்கை வைத்தது. ஆனால் அந்த நியாயமற்ற கோரிக்கையை ஐசிசி மறுத்ததால் நடைபெறும் இப்போட்டி உச்சகட்ட பரபரப்பாக இருக்கும் என நம்பலாம்.

- Advertisement -

குறிப்பாக துபாயில் 2022 ஆசிய கோப்பையில் இந்த 2 அணிகளும் அடித்துக் கொள்ளாத குறையாக உச்சகட்ட பரபரப்புடன் மோதின. எனவே அந்த பழைய கணக்கை சென்னையில் இந்த 2 அணிகளும் மீண்டும் மோதி தீர்க்கும் என்று நம்பலாம்.

இதையும் படிங்க:7 – 0 முக்கியமல்ல அதை சரியா ஹேண்டில் பண்ணனும், 2023 உ.கோ இந்தியா – பாக் போட்டியில் வெல்லப்போவது யார்? சேவாக் பதில் இதோ

4. அக்டோபர் 27 மதியம் 2 மணி, பாகிஸ்தான் – தென்னாபிரிக்கா : இந்த தொடரில் சேப்பாக்கத்தில் நடைபெறும் கடைசி போட்டியில் காலம் காலமாக உலக கோப்பையில் சொதப்பி வரும் தென்னாபிரிக்காவை மீண்டும் பாகிஸ்தான் எதிர்கொள்கிறது.

Advertisement