சச்சினை மிஞ்சி 21 பந்தில் 50 ரன்கள் உட்பட, இந்தியாவின் புதிய தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் – படைத்துள்ள 5 சாதனைகள் இதோ

- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவராக நட்சத்திர முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் அஜித் அகர்கர் நியமிக்கப்பட்டுள்ளார். மும்பையை சேர்ந்த அவர் கடந்த 1998இல் அறிமுகமாகி 2007 வரை 26 டெஸ்ட் மற்றும் 191 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 346 விக்கெட்களை சாய்த்துள்ளார். அந்த வகையில் கடைசியாக நிறைய குளறுபடியான தேர்வுகளை தேர்வு செய்த எம்எஸ்கே பிரசாத் மற்றும் சேட்டன் சர்மா ஆகியோரை விட இவர் தரத்திலும் அனுபவத்திலும் சிறந்தவராகவே இருக்கிறார். அதன் காரணமாக 2023 உலககோப்பை போன்ற அடுத்து வரும் தொடர்களில் நியாயமான தேர்வுகளை அவர் செய்வார் என்று எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் காணப்படுகிறது.

இந்நிலையில் தரம் மற்றும் அனுபவத்திற்கு எடுத்துக்காட்டாக சர்வதேச கிரிக்கெட்டில் அவர் படைத்துள்ள 5 சாதனைகளைப் பற்றி பார்ப்போம்:

- Advertisement -

1. அதிரடி அகர்கர்: கடந்த 2000ஆம் ஆண்டு ராஜ்கோட் நகரில் நடைபெற்ற ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் 44வது ஓவரில் களமிறங்கிய அவர் அதிரடியாக 7 பவுண்டரி 4 சிக்சருடன் 67* (25) ரன்கள் விளாசி 301/6 ரன்கள் எடுக்க உதவினார். குறிப்பாக 21 பந்துகளிலேயே 50 ரன்கள் தொட்ட அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் சச்சின், சேவாக் போன்றவர்களை மிஞ்சி அதிவேகமாக அரை சதமடித்த இந்திய வீரராக அன்று படைத்த சரித்திர சாதனை 23 வருடங்கள் கழித்து இன்றும் நின்று பேசுகிறது.

அத்துடன் பந்து வீச்சிலும் 3 விக்கெட்டுகளை எடுத்து ஆல் ரவுண்டராக அசத்திய அவர் இந்தியா 39 ரன்கள் வித்தியாசத்தில் வெல்வதற்கு முக்கிய பங்காற்றி ஆட்டநாயகன் விருது வென்றார்.

- Advertisement -

2. அதிவேக அகர்கர்: அதே போல வெறும் 23 போட்டிகளிலேயே 50 விக்கெட்டுகள் எடுத்த அவர் ஜஹீர் கான், ஜவகள் ஸ்ரீநாத், அனில் கும்ப்ளே போன்ற ஜாம்பவான்களை மிஞ்சி ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 50 விக்கெட்டுகளை சாய்த்த இந்திய பந்து வீச்சாளர் என்ற சாதனையை இன்றும் படைத்துள்ளார். அவருக்கு அடுத்தபடியாக இந்தியா சார்பில் குல்தீப் யாதவ் 24 போட்டிகளில் 50 விக்கெட்டுகள் எடுத்து 2வது இடத்தில் இருக்கிறார்.

3. ஆல் ரவுண்டர் அகர்கர்: அப்படி பேட்டிங், பவுலிங் ஆகிய 2 துறைகளிலும் அசத்திய திறமையை கொண்டிருந்த அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 200+ விக்கெட்டுகளையும் 1000+ ரன்களையும் எடுத்த வீரர் என்ற தென்னாபிரிக்க ஜாம்பவான் ஷான் பொல்லாக்கை மிஞ்சி படைத்த உலக சாதனையை தற்போதும் தன்வசம் வைத்துள்ளார். குறிப்பாக தன்னுடைய 133வது போட்டியில் இந்த சாதனையை அவர் படைத்த நிலையில் 2வது இடத்தில் ஷான் பொல்லாக் (138 போட்டிகள்) உள்ளார்.

- Advertisement -

4. லார்ட்ஸ் அகர்கர்: உலகில் எத்தனை மைதானங்கள் இருந்தாலும் இங்கிலாந்தில் இருக்கும் லண்டன் லார்ட்ஸ் கிரிக்கெட்டின் மெக்கா என்று அனைவராலும் அழைக்கப்படுகிறது. அப்படிப்பட்ட பழமையும் பெருமையும் வாய்ந்த அந்த மைதானத்தில் சதமடிக்கும் வீரர்களின் பெயர்கள் அங்குள்ள கௌரவ பலகையில் காலம் கடந்தும் பேசப்படும் அளவுக்கு பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படுவது வழக்கமாகும்.

இருப்பினும் அந்த மகத்தான கௌரவத்தை இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான்களான சுனில் கவாஸ்கர், சச்சின் டெண்டுல்கர் மட்டுமின்றி உலக அளவில் ஜேக் காலிஸ், ரிக்கி பாண்டிங், பிரையன் லாரா போன்ற மகத்தானவர்களாலும் அடிக்க முடியவில்லை. ஆனால் 2002ஆம் ஆண்டு அங்கு நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் 2வது இன்னிங்ஸில் 568 ரன்களை துரத்திய இந்தியா முக்கிய வீரர்களின் பொறுப்பற்ற ஆட்டத்தால் 170 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றாலும் அசத்தலாக பேட்டிங் செய்து போராடிய அவர் சதமடித்து 109* ரன்கள் குவித்து லார்ட்ஸ் கௌரவ பலவையில் தன்னுடைய பெயரை பொறித்து சாதனை படைத்தார்.

இதையும் படிங்க:TNPL 2023 : கடைசி போட்டியில் திருச்சிக்கு கருணை காட்டாமல் மிரட்டிய நெல்லை – பிளே ஆஃப் சுற்று அட்டவணை இதோ

5. பாம்பே டக்: இப்படி மகத்தான சாதனைகள் படைத்த அவர் கடந்த 1999 – 2000ஆம் ஆண்டு நடைபெற்ற ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் தொடர்ந்து 5 இன்னிங்ஸில் டக் அவுட்டானார். அத்துடன் ஏற்கனவே 2 முறை அவுட்டாகியிருந்த அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு குறிப்பிட்ட தொடரிலும் (5) அதிக இன்னிங்ஸில் தொடர்ச்சியாகவும் (7) டக் அவுட்டான வீரர் என்ற மோசமான உலக சாதனையும் படைத்தார்.

Advertisement