யுவ்ராஜ் சிங் உட்பட யோயோ டெஸ்டில் தோல்வியை பெற்று தேர்ச்சி பெற தவறிய 4 நட்சத்திர இந்திய வீரர்கள்

Yuvraj Singh
- Advertisement -

இலங்கையில் வரும் செப்டம்பர் 2ஆம் தேதி பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெறும் 2023 ஆசிய கோப்பை போட்டியில் பங்கேற்பதற்காக ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தனி விமானம் வாயிலாக புறப்பட்டு சென்றது. அதற்கு முன்பாக பெங்களூருவில் இருக்கும் தேசிய கிரிக்கெட் அகாடமியில் அனைத்து இந்திய வீரர்களுக்கும் மிகவும் கடினமான யோயோ உடல் தகுதி சோதனை நடத்தப்பட்டது. அதில் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி 17.2 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்ற நிலையில் உச்சகட்டமாக சுப்மன் கில் 18.5 மதிப்பெண்களை பெற்று ஃபிட்டான வீரராக தேர்ச்சி பெற்றார்.

அதே போல ரோகித் சர்மா உள்ளிட்ட இதர வீரர்களும் தேவையான மதிப்பெண்களை எடுத்து தேர்ச்சியடைந்த பின்பே விமானம் ஏறியதாக செய்திகள் வெளியாகின. நவீன கிரிக்கெட்டில் வேகமாக ஓடி சிறப்பாக ஃபீல்டிங் செய்வதற்கு தேவையான ஃபிட்டான வீரர்களை கண்டறிவதற்காக கடந்த 2017ஆம் ஆண்டு முதல் முறையாக இந்திய அணியில் யோயோ டெஸ்ட் கொண்டு வரப்பட்டது. வேகமாக ஓடுவது, குறிப்பிட்ட பளுவை தூக்குவது போன்ற பல்வேறு கடினமான சோதனைகளைக் கொண்ட இந்த சோதனையில் இதற்கு முன் தோல்வியை சந்தித்த சில நட்சத்திர வீரர்களை பற்றி பார்ப்போம்:

- Advertisement -

1. யுவராஜ் சிங்: 2007 மற்றும் 2011 உலகக் கோப்பையை இந்தியாவில் வதற்கு நாயகனாக செயல்பட்ட இவர் புற்றுநோயிலிருந்து குணமடைந்த பின் சற்று தடுமாற்றமாகவே செயல்பட்டு வந்தார். அந்த நிலைமையில் இலங்கைக்கு எதிரான வெள்ளைப்பந்து தொடரில் கழற்றி விடப்பட்ட அவர் யோயோ டெஸ்டில் தோல்வியை சந்தித்ததன் காரணமாகவே நீக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின.

இருப்பினும் அடுத்த சில மாதங்களில் அந்த தேர்வில் தேர்ச்சி பெற்றும் அவருக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இறுதியில் யோயோ டெஸ்டில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே வழியனுப்பும் போட்டியை நடத்துவதற்கு ஏற்பாடு செய்வோம் என்று சொன்ன வாக்கை பிசிசிஐ காப்பாற்றவில்லை என ஓய்வு பெறும் போது யுவராஜ் சிங் செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார்.

- Advertisement -

2. சஞ்சு சாம்சன்: 2018 இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் இந்தியா ஏ அணிக்காக விளையாட தேர்வான சஞ்சு சாம்சன் யோயோ டெஸ்டில் தோல்வியை சந்தித்ததால் கடைசி நேரத்தில் நீக்கப்பட்டு இஷான் கிஷனுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. இருப்பினும் அடுத்த மாதமே அந்த தேர்வில் தேர்ச்சி பெற்ற அவர் அப்போதிலிருந்தே இந்திய அணியில் நிலையான வாய்ப்புக்காக அலைந்து வருகிறார்.

3. அம்பத்தி ராயுடு: 2018ஆம் ஆண்டு இந்திய அணியில் கம்பேக் கொடுத்த இவர் ஒரு சில போட்டிகளில் மட்டுமே விளையாடியிருந்த நிலையில் யோயோ டெஸ்டில் தோற்றதால் மீண்டும் கழற்றி விடப்பட்டார். அதன் பின் சில மாதங்கள் கழித்து தேர்ச்சி பெற்ற அவர் இந்தியா ஏ அணிக்காக தேர்வாகி அதில் சிறப்பாக செயல்பட்டு 2018 ஆசிய கோப்பையில் விளையாடினார். ஆனால் 2019 உலகக்கோப்பையில் கடைசி நேரத்தில் மனசாட்சின்றி அவரின் நீக்கப்பட்டதை மறக்க முடியாது.

இதையும் படிங்க: IND vs PAK : இந்தியா – பாகிஸ்தான்.. முதல் ஆசிய கோப்பை போட்டி நடக்க வாய்ப்பே இல்லையாம் – வெளியான அறிக்கை இதோ

4. முகமது ஷமி: 2018 ஐபிஎல் தொடருக்குப்பின் நடத்தப்பட்ட யோயோ சோதனையில் தோல்வியை சந்தித்த அவரை அதிரடியாக நீக்கிய பிசிசி ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ஒற்றை டெஸ்டில் நவ்தீப் சைனிக்கு வாய்ப்பு கொடுத்தது. ஆனாலும் அடுத்த மாதமே தேர்ச்சி பெற்ற அவர் 2018 இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் தேர்வாகி இப்போது வரை நிலையான இடத்தைப் பிடித்து விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement