ரவி சாஸ்திரி ஆலோசனையை தலைகீழாக செய்யும் விராட் கோலி – 2022இல் ஓய்வெடுத்த போட்டிகளின் பட்டியல்

shastri
- Advertisement -

இந்தியாவை சேர்ந்த நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராட் கோலி கடந்த 2008 முதல் 3 வகையான இந்திய அணியிலும் ஏராளமான ரன்களையும் 70 சதங்களையும் அடித்து நிறைய வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்துள்ளார். உலகின் அனைத்து இடங்களிலும் உலகத்தரம் வாய்ந்த பவுலர்களையும் எதிர்கொண்ட அவர் தன்னை உலகத்தரம் வாய்ந்த பேட்ஸ்மன் என்று நிரூபித்துள்ளார். ஆரம்ப காலம் முதலே களமிறங்கினாலே சதமடிப்பார் என்று அளவுக்கு அட்டகாசமாக செயல்பட்டு தனக்கென்ற ஒரு தரத்தை அவர் உருவாக்கியதே தற்போது அவருக்கு பிரச்சினையை கொடுக்கிறது.

kohli

- Advertisement -

ஆம் கடைசியாக கடந்த 2019இல் சதமடித்திருந்த அவர் அதன்பின் கடந்த 3 வருடங்களாக டெஸ்ட், ஒருநாள், டி20 மற்றும் ஐபிஎல் என அனைத்து வகையான கிரிக்கெட்டையும் சேர்த்து 100 இன்னிங்ஸ்களுக்கும் மேலாக அடுத்த சதத்தை அடிக்க முடியாமல் தவித்து வருகிறார். ஏற்கனவே கூறியது போல் களமிறங்கினாலே சதமடிப்பார் என்ற நம்பிக்கையை அனைவரின் மனதிலும் ஆழமாக பதித்துள்ள அவர் இடையிடையே அடிக்கும் 40, 50, 70 ரன்களை எடுத்தாலும் அனைவரும் அவரை பார்ம் அவுட் என்றே கருதுகிறார்கள்.

பிரேக் கோரிக்கை:
மேலும் உலக கோப்பை மற்றும் ஐபிஎல் கோப்பையை வெல்ல முடியவில்லை என்ற விமர்சனங்களையும் சந்தித்த அவர் கேப்டன்ஷிப் அழுத்தம் தமது பேட்டிங்கை பாதித்ததாக உணர்ந்த காரணத்தால் அந்தப் பதவிகளிலிருந்து படிப்படியாக விலகி கடந்த ஜனவரியிலிருந்து சுதந்திரப் பறவையாக விளையாடத் தொடங்கினார். அதனால் விரைவில் சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட அவர் ஐபிஎல் 2022 தொடரில் வரலாற்றிலேயே முதல் முறையாக 3 கோல்டன் டக் அவுட் உட்பட முன்பை விட மோசமாக பேட்டிங் செய்கிறார்.

shastri

அதிலிருந்து விடுபடுவதற்காக எவ்வளவோ முயற்சித்தும் கடினமான பயிற்சிகளை எடுத்தும் அதிர்ஷ்டம் இல்லாததை போல் ஓடிஓடி ரன்கள் சேர்த்த களைப்பு அவரின் ஆட்டத்திலும் உடலிலும் தெரிந்ததால் இன்னும் எத்தனை நாட்கள் தான் இந்த சோதனை என்பது போல் வானத்தை நோக்கி அவர் புலம்பியது பார்ப்போரின் நெஞ்சங்களை உடைத்தது. அதனால் ஐபிஎல் தொடரில் இருந்து உடனடியாக வெளியேறி 2 – 3 மாதங்கள் ஓய்வெடுத்து புத்துணர்ச்சியுடன் பார்முக்கு திரும்புமாறு ரவி சாஸ்திரி, வாசிம் ஜாபர், மைக்கேல் வாகன் போன்ற முன்னாள் வீரர்கள் கேட்டுக் கொண்டார்கள்.

- Advertisement -

தலைகீழான பிரேக்:
ஆனால் விளையாடினால் தானே பார்முக்கு திரும்ப முடியும் என்று பதிலளித்த விராட் கோலி தொடர்ச்சியாக விளையாடும் போதிலும் எந்த மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் காண முடியாமல் தவித்து வருகிறார். இந்நிலையில் ஏற்கனவே கூறியது போல் தொடர்ச்சியாக விளையாடாமல் இடையிடையே ஓய்வெடுத்து வரும் அவர் அடுத்ததாக வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடரில் ஓய்வெடுப்பது மேலும் கேள்விகளையும் விமர்சனங்களையும் எழுப்பியுள்ளது.

Kohli practice

ஒன்று ரவி சாஸ்திரி கூறியது போல் பிரேக் எடுக்க வேண்டும் அல்லது அவரே கூறியதுபோல் தொடர்ச்சியாக விளையாட வேண்டும். அதை இரண்டையும் செய்யாமல் ஒரு தொடரில் விளையாடும் விராட் கோலி மற்றொரு தொடரில் ஓய்வெடுப்பது நிச்சயமாக எந்த பலனையும் கொடுக்காது. ஏனெனில் இடையிடையே விளையாடி விட்டு சில நாட்கள் ஓய்வெடுப்பதற்கும் தொடர்ச்சியாக ஓய்வெடுப்பதற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. அதுதான் உண்மையான புத்துணர்ச்சியையும் கொடுக்கும் என்பதே நிதர்சனம். அதற்கு எடுத்துக்காட்டாக பென் ஸ்டோக்ஸ், கிளன் மேக்ஸ்வெல் ஆகியோரைக் கூறலாம்.

- Advertisement -

சரி கடந்த 9 மாதங்களில் விராட் கோலி இதுவரை தவறவிட்டுள்ள போட்டிகளின் பட்டியலைப் பார்ப்போம்:
1. துபாயில் நடந்த டி20 உலக கோப்பையில் லீக் சுற்றுடன் வெளியேறிய நிலையில் தாமாக முன்வந்து டி20 கேப்டன் பதவியிலிருந்து விலகிய விராட் கோலி அடுத்ததாக சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிராக நடந்த 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஓய்வெடுத்தார்.

kohli

2. அதன்பின் நடந்த 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் கான்பூரில் நடந்த முதல் போட்டியில் ஓய்வெடுத்த அவர் மும்பையில் நடந்த 2-வது போட்டியில் திரும்பினார்.

- Advertisement -

3. கடந்த பிப்ரவரியில் சொந்த மண்ணில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இலங்கை அணிகளுக்கு எதிராக நடந்த அடுத்தடுத்த தலா 3 போட்டிகள் கொண்ட 2 டி20 தொடரில் ஓய்வெடுத்தார்.

kohli

4. ஆனால் ஐபிஎல் 2022 தொடரில் முழுமையாக பங்கேற்ற அவர் அடுத்ததாக தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடந்த 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஓய்வெடுத்தார்.

3. இங்கிலாந்துக்கு எதிராக தற்போது நடைபெற்று வரும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முதல் போட்டியில் லேசான காயத்தால் அவருக்கு ஓய்வளிக்கப்பட்டது. அதுபோக கடந்த ஜனவரியில் தென்னாப்பிரிக்க மண்ணில் நடந்த 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் 2-வது டெஸ்ட் போட்டியிலும் லேசான காயத்தால் அவர் ஓய்வெடுத்தார்.

Kohli

4. தற்போது இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் வெறும் 6 போட்டியில் மட்டுமே பங்கேற்ற அவர் அடுத்ததாக வெஸ்ட் இண்டீசில் நடைபெறும் 3 ஒருநாள் மற்றும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் மொத்தமாக ஓய்வளிக்கப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க : கவனக்குறைவாக நடந்த தவறுக்காக வங்கதேச வீரரை தடைசெய்த ஐ.சி.சி – அதிரடி நடவடிக்கை

மொத்தத்தில் கடந்த நவம்பர் முதல் வரும் ஆகஸ்ட் வரை 9 மாதங்களில் 19 டி20 போட்டிகள் 4 ஒருநாள் போட்டிகள் 2 டெஸ்ட் போட்டிகள் என 25 போட்டிகளில் 23 போட்டிகளில் ஓய்வெடுத்த விராட் கோலிக்கு 2 போட்டிகளில் காயத்தால் ஓய்வளிக்கப்பட்டது.

Advertisement