கவனக்குறைவாக நடந்த தவறுக்காக வங்கதேச வீரரை தடைசெய்த ஐ.சி.சி – அதிரடி நடவடிக்கை

Shahidul-Islam
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டில் ஊக்க மருந்து பிரச்சினையில் சிக்கி பல வீரர்கள் தடை செய்யப்பட்டதை நாம் இதுவரை பார்த்துள்ளோம். அந்த வகையில் தற்போது வங்கதேச அணியைச் சேர்ந்த 27 வயதான இளம் வீரர் ஒருவர் ஐசிசியால் தண்டிக்கப்பட்டுள்ளது இணையத்தில் செய்தியாக வைரலாகி வருகிறது. அதன்படி 27 வயதான ஷாகிதுல் இஸ்லாம் என்கிற வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பாகிஸ்தான் அணிக்கு எதிரான டி20 போட்டியில் அறிமுகமானார்.

Shahidul Islam 2

- Advertisement -

வங்கதேச அணிக்காக இதுவரை ஒரே ஒரு டி20 போட்டியில் மட்டுமே விளையாடியுள்ள இவர் தற்போது ஊக்க மருந்து சர்ச்சையில் சிக்கி ஐசிசியால் தடை செய்யப்பட்டுள்ளார். அதன்படி சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி-யின் விதிமுறைப்படி ஊக்க மருந்தை பயன்படுத்தியதாக அவருக்கு 10 மாதங்கள் ஐசிசி கிரிக்கெட் விளையாட தடை விதித்துள்ளது.

அவருக்கு கடைசியாக நடைபெற்ற ஊக்க மருந்து பரிசோதனையின் போது தடை செய்யப்பட்ட குளோமிபென் என்ற மருந்தினை அவர் பய்னபடுத்தியதாக அறிக்கை வெளியானது. இதன் காரணமாக அவர் மீது எந்த கரிசனமும் காட்டாமல் முதல் முறை அவர் இந்த தவறினை செய்துள்ளதால் 10 மாதங்கள் தடை விதிக்கப்பட்டுள்ளதாக icc அறிவித்துள்ளது.

Shahidul Islam 1

இதன் காரணமாக அடுத்த ஆண்டு மே மாதம் வரை அவர் எந்தவித சர்வதேச போட்டியிலும், உள்ளூர் போட்டியிலும் விளையாட முடியாது என்று கூறப்பட்டுள்ளது. ஐசிசி ஊக்க மருந்து தடுப்புச் சட்டத்தின் பிரிவு 2.1 விதிமுறையை மீறியதற்காக வங்கதேச இளம் வீரரான ஷாகிதுல் இஸ்லாம் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்று ஐசிசி அதிகாரபூர்வ அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

- Advertisement -

ஆனால் இந்த ஊக்க மருந்து உட்கொண்ட விவகாரம் குறித்து வங்கதேச கிரிக்கெட் வாரியம் சார்பில் வெளியான அறிக்கையின்படி : ஷாகிதுல் இஸ்லாம் வேண்டுமென்றே அதை எடுத்துக் கொள்ளவில்லை என்றும் கவனக்குறைவாக மருந்துகளை அவர் உட்கொள்ளும் போது அந்த மருந்துகளின் வாயிலாக தடை செய்யப்பட்ட அந்த பொருளை அவர் உட்கொண்டதாக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : IND vs ENG : இதெல்லாம் ஒரு கேள்வியா? அவர் ரெகார்ட பாருங்க – விராட் கோலிக்கு இங்கிலாந்து கேப்டனின் ஆதரவு

கவனக்குறைவாக அவர் தடைசெய்யப்பட்ட அந்த மருந்துகளை எடுத்துக் கொண்டிருந்தாலும் தவறு தவறுதான் என்று ஐசிசியும் அவருக்கு 10 மாதங்கள் இடைக்கால தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement