2014 மாதிரி விராட் கோலியை பார்முக்கு கொண்டுவர உங்களால் தான் முடியும் – சச்சினுக்கு முன்னாள் வீரர் கோரிக்கை

Sachin Virat Kohli
- Advertisement -

இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி கடந்த 3 வருடங்களாக சர்வதேச கிரிக்கெட்டில் சதமடிக்க முடியாமல் தவித்து வருவதால் தினந்தோறும் ஏராளமான விமர்சனங்களை சந்தித்து வருகிறார். கடந்த 2008இல் அறிமுகமாகி 2011 முதல் 3 வகையான கிரிக்கெட்டிலும் உலகின் பல்வேறு உலகத்தரம் வாய்ந்த பவுலர்களையும் அனைத்து சவாலான சூழ்நிலைகளிலும் அபாரமாக எதிர்கொண்ட அவர் ஏராளமான ரன்களையும் 70 சதங்களையும் அடித்து ஏற்கனவே தன்னை உலகத்தரம் வாய்ந்த பேட்ஸ்மேன் என்று நிரூபித்துள்ளார். சொல்லப்போனால் ஜாம்பவான்கள் சச்சின் டெண்டுல்கர், ரிக்கி பாண்டிங் ஆகியோருக்குப் பின் அதிக சதங்கள் அடித்த பேட்ஸ்மேன் என்ற மாபெரும் சாதனை படைத்துள்ள அவர் இடையிடையே 50, 70 போன்ற ரன்களை அடித்தாலும் அனைவரும் அவரை பார்ம் அவுட் என்றே கருதுகிறார்கள்.

Kohli-1

- Advertisement -

ஆரம்ப காலங்களில் அபாரமாக செயல்பட்டு களமிறங்கினாலே சதமடிப்பார் என்று அனைவரும் எதிர்பார்க்கும் அளவுக்கு தனக்கென்று தரத்தை அவர் உருவாக்கியதே இதற்கு காரணமாகும். அதிலிருந்து விடுபடுவதற்காக 3 வகையான இந்திய அணிக்கும் ஐபிஎல் தொடரிலும் கேப்டனாக செயல்பட்ட அழுத்தம் தனது பேட்டிங்கை பாதித்ததாக உணர்ந்த அவர் கடந்த ஜனவரியில் அனைத்து பதவிகளையும் ராஜினாமா செய்து சாதாரண வீரராக விளையாட துவங்கிய போதிலும் எந்த மாற்றத்தையும் பார்க்க முடியவில்லை.

தவிக்கும் விராட்:
மேலும் ஐபிஎல் 2022 தொடரில் வரலாற்றிலேயே முதல் முறையாக 3 கோல்டன் டக் அவுட்டானது உட்பட முன்பை விட சுமாராக செயல்படும் அவர் நடைபெற்றுவரும் இங்கிலாந்து தொடரில் 11, 20, 1, 10, 16 என 3 வகையான கிரிக்கெட்டிலும் சொற்ப ரன்களில் அவுட்டாகி விமர்சனத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க முடியாமல் திண்டாடுகிறார். இதனால் பெரிய பெயரை வைத்துக் கொண்டு எத்தனை நாட்கள் இளம் வீரர்களின் வாய்ப்பையும் கெடுத்து இந்திய அணியில் இடம் பிடிப்பீர்கள் என்று கபில் தேவ் உட்பட நிறைய முன்னாள் வீரர்களின் விமர்சனங்கள் இருமடங்காக அம்புகளைப் போல் அவரை துளைத்து வருகின்றன. அதேசமயம் இதிலிருந்து விடுபடுவதற்கு சில மாதங்கள் பிரேக் எடுத்து புத்துணர்ச்சியுடன் பார்முக்கு திரும்புவதே ஒரே வழி என ரவிசாஸ்திரி போன்ற முன்னாள் வீரர்கள் அவருக்கு ஆலோசனையும் தெரிவிக்கின்றனர்.

Kohli

ஆனாலும் விளையாடினால் தானே பார்முக்கு திரும்ப முடியும் என்று பதிலளித்து தொடர்ச்சியாக விளையாடி வரும் அவருக்கு சிலர் ஆதரவையும் கொடுத்து வருகின்றனர். அந்த வரிசையில் விராட் கோலிக்கு தனது ஆதரவை தெரிவிக்கும் முன்னாள் இந்திய வீரர் அஜய் ஜடேஜா இந்த மோசமான நிலைமையில் இருந்து அவரை மீட்டெடுக்க ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரால் மட்டுமே முடியும் என்று தெரிவித்துள்ளார். கடந்த 2014இல் இதேபோல் ரன்கள் அடிக்க தடுமாறிய விராட் கோலி இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் நடந்த 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஜேம்ஸ் ஆண்டர்சனிடம் மொத்தமாக சரணடைந்து தனது கேரியரில் பெரிய வீழ்ச்சியை சந்தித்தார்.

- Advertisement -

2014 மாதிரி:
அந்த மோசமான தொடரை முடித்துக் கொண்டு நாடு திரும்பி ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரை மும்பைக்கு சென்று நேரில் பார்த்து அவரின் ஆலோசனைகளை பெற்ற பின்புதான் பார்முக்கு திரும்ப முடிந்ததாக விராட் கோலி ஏற்கனவே தெரிவித்துள்ளார். எனவே அவரை மீண்டும் ஃபார்முக்கு சச்சினே சரியானவர் என தெரிவிக்கும் அஜய் ஜடேஜா அதற்காக சச்சின் டெண்டுல்கர் தாமாக விராட் கோலியை அழைத்து ஆலோசனைகளை வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். இது பற்றி சோனி ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு.

Ajay-Jadeja-and-Virat-Kohli

“இதை 8 மாதங்களுக்கு முன்பே நாம் பேசும்போது கூறியிருந்தேன். விராட் கோலியை இது சம்பந்தமாக சரிப்படுத்த கூடிய ஒருவர் சச்சின் டெண்டுல்கர் மட்டுமே என்று நான் கூறியிருந்தேன். இந்த விஷயத்தில் அவர் தாமாக விராட் கோலியை அழைத்து “ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவோம்” என்ற வகையில் மனம் விட்டு பேச வேண்டும்.

- Advertisement -

ஏனெனில் 14 அல்லது 15 வயதிலிருந்து கிரிக்கெட் விளையாடிய துவங்கிய சச்சின் சந்திக்காத மோசமான தருணங்களைக் விட வேறு யாராவது சந்தித்திருக்க முடியுமா? வேறு யாராவது முன்னோக்கி நகர்ந்து டெண்டுல்கர் எட்டிய உயரத்தை அடைந்துள்ளார்களா?” “எனவே இந்த விஷயத்தில் வேறு யாரை பற்றியும் நான் நினைக்கவில்லை ஏனெனில் அவரிடம் அனைத்தும் உள்ளது. எனவே விராட் கோலி டெண்டுல்கரை அழைத்துப் பேச வேண்டும். ஒருவேளை விராட் கோலி அழைக்கவில்லை என்றாலும் சச்சின் தாமாக அவரை அழைக்க வேண்டும்.

இதையும் படிங்க : IND vs ENG : விராட் கோலியை பிசிசிஐ எப்போதும் நீக்காது, காரணம் இதுதான் – முன்னாள் இங்கிலாந்து வீரர்

சில நேரங்களில் இளம் வீரர்கள் இதுபோன்ற மோசமான தருணத்தில் தவிப்பார்கள். அப்போது மூத்தவர்களாக இது போன்ற தருணங்களை ஏற்கனவே கடந்துள்ள நீங்கள் அவரை அழைத்து பேச வேண்டியது உங்களது கடமையாகும். எனவே இதை சச்சின் செய்வார் என்று நம்புகிறேன்” என கூறினார்.

Advertisement