IND vs ENG : விராட் கோலியை பிசிசிஐ எப்போதும் நீக்காது, காரணம் இதுதான் – முன்னாள் இங்கிலாந்து வீரர்

BCCI
- Advertisement -

இந்தியாவின் நட்சத்திர வீரர் விராட் கோலி கடந்த 2019க்கு பின்பு சதமடிக்க முடியாமல் தடுமாறி வருவதால் கடுமையான விமர்சனங்களையும் தினந்தோறும் சந்தித்து வருகிறார். கடந்த பல வருடங்களாக தனது அபார பேட்டிங் திறமையால் ஏற்கனவே ஏராளமான ரன்களையும் 70 சதமடித்து களமிறங்கினாலே சதமடிப்பார் என்று எதிர்பார்க்கும் அளவுக்கு தனக்கென்ற ஒரு தரத்தை அவர் ஏற்படுத்தியுள்ளதே அதற்கு ஒரு காரணமாகும். ஏனெனில் இந்த 3 வருடங்களில் நிறைய போட்டிகளில் இடையிடையே 30, 50, 70 போன்ற ரன்களை அடித்ததை கணக்கில் எடுத்துக்கொள்ளாத அனைவரும் அவரை பார்ம் அவுட் என்ற கோணத்திலேயே பார்க்கிறார்கள்.

kohli

- Advertisement -

ஆனாலும் பொதுவாக ஒரு பேட்ஸ்மேன் 5 – 10 போட்டிகளில் சுமாராக செயல்பட்டால் உடனடியாக அணியை விட்டு நீக்குவதே வழக்கமான ஒன்றாகும். அதுவும் நிறைய ரன்களையும் சதங்களையும் அடித்து ஏராளமான வெற்றிகளை பெற்றுக்கொடுத்து நட்சத்திர அந்தஸ்து பெற்ற வீரர்களும் பார்மை இழந்தால் அதை அதிகபட்சம் 6 மாதங்களுக்குள் மீட்டெடுக்க வேண்டும். இல்லையேல் ஜாம்பவானாக இருந்தாலும் அணி நலனுக்காக அதிரடியாக நீக்கப்படுவார்கள். அதற்கு வரலாற்றில் சௌரவ் கங்குலி, விவிஎஸ் லக்ஷ்மன், வீரேந்திர சேவாக் போன்ற தரமான வீரர்களை கூறலாம்.

பிசிசிஐ ஆதரவு:
அதன் காரணமாகவே பெரிய பெயரை வைத்துக் கொண்டு 3 வருடங்களாக சதமடிக்க முடியாமல் எத்தனை நாட்கள் இளம் வீரர்களின் வாய்ப்பையும் கெடுத்துக் கொண்டு அணியில் நீடிக்க முடியும் என்ற நியாயமான கேள்வியை கபில்தேவ் உட்பட நிறைய ஜாம்பவான்களும் விமர்சனங்களாக எழுப்பியுள்ளனர். இருப்பினும் 70 சதங்களும் ஏராளமான வெற்றிகளை பெற்று கொடுத்தார் என்பதற்காக மட்டுமே பார்மை காரணம்காட்டி இதுவரை எந்த ஒரு போட்டியிலும் இந்திய அணி நிர்வாகம் விராட் கோலியை நீக்காமல் இருந்து வருகிறது.

Ganguly

அதே காரணத்தாலேயே சவுரவ் கங்குலி உட்பட தலைவர் முதல் பிசிசிஐயில் இருக்கும் அனைவரும் விராட் கோலிக்கு ஆதரவளித்து வருகின்றனர். ஆனால் வரலாற்றில் சௌரவ் கங்குலி உட்பட எத்தனையோ ஜாம்பவான்கள் தடுமாறிய காலத்தில் அதிரடியாக நீக்கப்பட்டு உள்ளூர் கிரிக்கெட்டுக்கு சென்று மிகச் சிறப்பாக செயல்பட்டு மீண்டும் இந்திய அணிக்கு திரும்பி வெற்றிகரமாக விளையாடியுள்ளார்கள் என்ற நிலைமையில் விராட் கோலி மட்டும் என்ன விதிவிலக்கா என வெங்கடேஷ் பிரசாத் போன்ற முன்னாள் வீரர்கள் அதிரடியான கேள்விகளை எழுப்புகின்றனர்.

- Advertisement -

பணம் காரணம்:
மொத்தத்தில் 10இல் 7 பேர் விராட் கோலியை நீக்க வேண்டும் என்ற கருத்தை முன்வைக்கும் நிலையில் இந்திய அணி நிர்வாகமும் பிசிசிஐயும் அவருக்கு தொடர்ந்து ஆதரவளித்து வருகிறது. இந்நிலையில் விராட் கோலியை நீக்கினால் ஸ்பான்சர்ஷிப் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்பதால் அவரை எப்போதும் பிசிசிஐ நீக்காது என்று தெரிவிக்கும் இங்கிலாந்து முன்னாள் வீரர் மான்டி பனேஷர் இந்திய நிர்வாகத்துக்கு அந்த தைரியமும் கிடையாது என்று வித்தியாசமான கருத்தை கூறியுள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “இது கால்பந்தில் அனைவரும் பார்க்கும் மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காக விளையாடும் கிறிஸ்டியானோ ரொனால்டோ போன்றதாகும். விராட் கோலியும் அதே போன்றவர். அவருக்கு ஏராளமான பின்பற்றுபவர்களும் ரசிகர்களும் உள்ளனர்”

Monty-Panesar-and-Virat-Kohli

“விராட் கோலியின் செயல்பாடு என்னவாக இருந்தாலும் ஸ்பான்சர்களை வைத்திருக்க வேண்டும் என்பதற்காக அவரை நீக்கும் முடிவை எடுக்க முடியாமல் பிசிசிஐ அழுத்தத்தில் இருக்கிறதா? என்பது மிகப்பெரிய கேள்வியாகும். அவரை அவர்களால் நீக்க முடியாது. ஏனெனில் அவர்கள் அதனால் பெரும் நிதி உதவியை இழக்க நேரிடும். விராட் கோலி உலகிலேயே அதிக மார்க்கெட் கொண்ட கிரிக்கெட் வீரர். ரசிகர்கள் அவரை அதிகம் விரும்புகிறார்கள். அவரின் ஆட்டத்தையும் நாம் ரசிக்கிறோம். சொல்லப்போனால் இங்கிலாந்தில் கூட அவரை நிறைய பேர் ரசிக்கிறார்கள். எனவே இதுபற்றி பிசிசிஐ உட்கார்ந்து யோசிக்க வேண்டும்”

- Advertisement -

“பொருளாதார அடிப்படையில் விராட் கோலியால் இதர நாட்டு வாரியங்களும் சம்பாதிக்கின்றன. ஆனால் அதற்காக அவர் இந்திய அணியில் தற்போது சிறப்பாக செயல்படுகிறாரா? மற்றும் சிறப்பாக செயல்படவில்லை என்றாலும் அவருக்கு வாய்ப்பளித்து 20 ஓவர் அல்லது 50 ஓவர் உலககோப்பையை ஒருவேளை அவர்களால் வெல்ல முடியாமல் போனால் அது சரியானதாக இருக்குமா? என்பதே மிகப்பெரிய கேள்வியாகும்” என்று கூறினார்.

Ganguly-1

அவர் கூறுவது போல உலகிலேயே கிறிஸ்டியானோ ரொனால்டோ, லயோனல் மெஸி ஆகியோருக்கு பின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிக ரசிகர்களை கொண்ட 3-வது விளையாட்டு வீரராக சாதனை படைத்த விராட் கோலி அதிக ரசிகர்களை கொண்ட முதல் கிரிக்கெட் வீரராகவும் திகழ்ந்தார்.

இதையும் படிங்க : ரவி சாஸ்திரி ஆலோசனையை தலைகீழாக செய்யும் விராட் கோலி – 2022இல் ஓய்வெடுத்த போட்டிகளின் பட்டியல்

எனவே அவரை நீக்கினால் இந்தியா விளையாடும் போட்டிகளை பார்க்கும் ரசிகர்களின் எண்ணிக்கை குறைந்து பிசிசிஐக்கு ஸ்பான்சர்ஷிப் அளவில் பிரச்சினையை ஏற்படுத்தும். அதற்காக பெயரை மட்டும் வைத்துக் கொண்டு சிறப்பாக செயல்படாமல் போனால் அது உலக கோப்பை போன்ற பெரிய தொடர்களில் பின்னடைவையும் ஏற்படுத்தும் என்பது யோசிக்க வேண்டிய அம்சமாகும்.

Advertisement