சூரியகுமார் 360 டிகிரி பேட்ஸ்மேன்லாம் கிடையாது. அவருக்கு இந்த ஒரு ஷாட் தெரியாது – கவுதம் கம்பீர் பகீர்

Gautam Gambhir Suryakumar Yadav
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் பரபரப்பாக நடைபெற்று வரும் 2022 ஐசிசி டி20 உலக கோப்பையில் 2007க்குப்பின் 2வது கோப்பை வெல்லும் முனைப்புடன் களமிறங்கியுள்ள இந்தியா இதுவரை பங்கேற்ற 4 போட்டிகளில் 3 வெற்றிகளை பதிவு செய்து அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்துள்ளது. இந்த தொடரில் பேட்டிங் துறையில் ஃபார்முக்கு திரும்பி சக்கை போட்டு வரும் விராட் கோலிக்கு அடுத்தபடியாக நம்பிக்கை நட்சத்திரம் சூரியகுமார் யாதவ் தனக்கே உரித்தான பாணியில் அபாரமாக செயல்பட்டு வருகிறார். நிலைமை எப்படி இருந்தாலும் களமிறங்கும் முதல் பந்திலிருந்தே அதிரடியை துவங்கும் அவர் பெரும்பாலான போட்டிகளில் அட்டகாசமாக செயல்பட்டு 180 – 200 ஸ்டிரைக் ரேட்டில் ரன்களை குவித்து இந்தியாவின் வெற்றிகளில் கருப்பு குதிரையாக செயல்பட்டு வருகிறார்.

Suryakumar YAdav

- Advertisement -

அதிலும் குறிப்பாக தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் வேகத்துக்கு சாதகமாக சவாலை கொடுத்த பெர்த் மைதானத்தில் விராட் கோலி, ரோஹித் சர்மா உள்ளிட்ட இதர பேட்ஸ்மேன்கள் திணறியதால் இந்தியா 49/5 என தடுமாறியது. ஆனால் அப்போட்டியில் அவர் மட்டும் வேறு ஏதோ பேட்டிங்க்கு சாதகமான பிட்ச்சில் விளையாடியதைப் போல் அபாரமாக செயல்பட்டு 68* (40) ரன்கள் குவித்து இந்தியாவை 133 ரன்கள் எடுக்க உதவியது அனைவரையும் வியந்து பாராட்ட வைத்தது.

360 டிகிரி கிடையாது:
முன்னதாக 20 வயதில் அறிமுகமாகும் வீரர்களுக்கு மத்தியில் தாமதமாக 30 வயதில் அறிமுகமானாலும் கடந்த ஒரு வருடத்தில் கிடைத்த அத்தனை வாய்ப்புகளிலும் பெரும்பாலும் அட்டகாசமாக செயல்பட்டு வரும் சூரியகுமார் யாதவ் மிகவும் குறுகிய காலத்திலேயே இன்று உலகின் நம்பர் ஒன் டி20 பேட்ஸ்மேனாக பாகிஸ்தானின் முகமது ரிஸ்வானை முந்தி புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

Suryakumar Yadav 1

அத்துடன் எவ்வளவு கடினமாக சூழ்நிலையாக இருந்தாலும் எப்படி பந்து வீசினாலும் பெரும்பாலான போட்டிகளில் மைதானத்தின் நாலாபுறமும் சுழன்றடிக்கும் அவரை ரிக்கி பாண்டிங் போன்ற முன்னாள் வீரர்களும் ரசிகர்களும் இந்தியாவின் ஏபிடி என்றும் மிஸ்டர் 360 டிகிரி பேட்ஸ்மேன் என்றும் பாராட்டி வருகிறார்கள். இந்நிலையில் விராட் கோலி, பாபர் அசாம் போன்ற இதர பேட்ஸ்மேன்களை போல் இதுவரை கச்சிதமாக கவர் டிரைவ் அடிக்க தெரியாத சூரியகுமார் யாதவை 360 டிகிரி பேட்ஸ்மேன் என அழைப்பது சரியானதல்ல என்று முன்னாள் இந்திய வீரர் கௌதம் கம்பீர் கூறியுள்ளார்.

- Advertisement -

ஆனால் 180 – 200 ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடும் திறமை பெற்றுள்ளதால் விராட் கோலி போன்றவர்களை விட சூரியகுமார் யாதவ் மதிப்புமிக்க வீரராக திகழ்வதாக பாராட்டும் கௌதம் கம்பீர் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் சிறப்பாக செயல்படும் திறமை பெற்றுள்ளதாக கூறியுள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “முதலில் அவருக்கு 360 டிகிரி பேட்ஸ்மேன் என்ற பெயரை கொடுக்காதீர்கள். அதற்கு இன்னும் நிறைய வேலைகள் செய்ய வேண்டியுள்ளது. அவரிடம் ஏராளமான திறமைகள் உள்ளது. அதனால் 360 அல்லது 180 அல்லது 1 டிகிரி என்பது முக்கியமல்ல. அவருக்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்பது தெரிந்துள்ளது”

Gambhir

“ஒரு பாரம்பரியமான பயிற்சியாளர் அவரை பார்க்கும் போது அவர் கோட்டுக்கு உள்ளே நிற்காமல் ஓப்பன் ஸ்டேன்ஸ் பயன்படுத்தி விளையாடுவதாக கூறுவார். ஆனால் அதை வைத்து தான் அவர் இந்த அளவுக்கு வெற்றிகரமாக செயல்படுகிறார். அவர் முதல் தர கிரிக்கெட் உட்பட அனைத்து வகையான போட்டிகளிலும் ரன்களை குவித்துள்ளார்.

இதையும் படிங்க : IND vs ZIM : நாளைய போட்டி மழையால் பாதிக்கப்பட்டால் என்ன ஆகும் – இந்திய அணி அரையிறுதிக்கு செல்லுமா?

அதனால் அவர் விரைவில் டெஸ்ட் கிரிக்கெட்டில் வாய்ப்பு பெறுவார் என்று நம்புகிறேன். அதே சமயம் இதர இந்திய வீரர்கள் விளையாடுவது போல் அவரால் இன்னும் கச்சிதமான கவர் டிரைவ் அடிக்க முடியவில்லை. ஆனால் 180 ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடுவதால் தனித்துவமாக தெரியும் அவர் இதர இந்திய வீரர்களை காட்டிலும் மதிப்பு மிக்கவராக ஜொலிக்கிறார்” என்று கூறினார்.

Advertisement