IND vs ZIM : நாளைய போட்டி மழையால் பாதிக்கப்பட்டால் என்ன ஆகும் – இந்திய அணி அரையிறுதிக்கு செல்லுமா?

IND-vs-ZIM
- Advertisement -

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது ஆஸ்திரேலிய நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு நடைபெற்று வரும் டி20 உலக கோப்பை தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் குரூப் இரண்டில் இடம் பெற்றுள்ள இந்திய அணியானது சூப்பர் 12 சுற்றில் இதுவரை நான்கு போட்டிகளில் விளையாடி மூன்று வெற்றி மற்றும் ஒரு தோல்வி என ஆறு புள்ளிகள் பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்தில் நீடிக்கிறது.

Arshdeep Singh 1

- Advertisement -

இருப்பினும் இன்னும் இந்திய அணியின் அரையிறுதிக்கான வாய்ப்பு உறுதி செய்யப்படவில்லை. இந்நிலையில் நாளை நவம்பர் 6-ஆம் தேதி நடைபெற இருக்கும் கடைசி சூப்பர் 12 சுற்று ஆட்டத்தில் ஜிம்பாப்வே அணியை எதிர்கொள்ளும் இந்திய அணியானது இந்த போட்டியில் வெற்றி பெற்றால் எளிதில் முதல் அணியாக அரையிறுதிக்கு தகுதி பெறும்.

ஒருவேளை இந்த போட்டியில் தோல்வி அடைந்தாலோ அல்லது மழையால் போட்டி பாதிக்கப்பட்டாலோ என்ன நடக்கும் என்பது குறித்து தான் இந்த பதிவில் நாம் காண இருக்கிறோம். அந்த வகையில் நாளைய இந்தியா ஜிம்பாப்வே போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டால் இந்திய அணி ஒரு புள்ளியுடன் அரையிறுதிக்கு முன்னேறும்.

Rain

அதே வேளையில் இந்திய அணி தோல்வியை சந்தித்து தென்னாப்பிரிக்க அணி நெதர்லாந்தை வீழ்த்தி வெற்றி பெற்றால் இந்திய அணி இந்த தொடரில் இருந்து வெளியேறவும் வாய்ப்பு உள்ளது. ஏனெனில் பாகிஸ்தான் அணி கடைசி போட்டியில் பங்களாதேஷ் அணியை வீழ்த்தினாலே ரன் ரேட்டில் இந்திய அணியை விட மேலே சென்று விடுவார்கள்.

- Advertisement -

அப்படி இந்திய அணி தோற்று தென்னாப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகள் வெற்றி பெற்றால் இந்திய அணியின் அரையிறுதி வாய்ப்பு பறிபோகவும் வாய்ப்புள்ளது. ஆனால் நாளைய போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்று அரையிறுதிக்கு முன்னேறும் என்பதே நிதர்சனமான உண்மை.

இதையும் படிங்க : நீங்க தான் என்ன லெஜெண்ட்னு சொல்றிங்க. ஆனா அவங்க என்ன மேட்ச் பிக்சர்னு சொல்றாங்க – வாசிம் அக்ரம் ஆதங்கம்

இந்திய அணி புள்ளி பட்டியல் தற்போது ஆறு புள்ளிகளுடன் முதல் இடத்திலும், தென்னாப்பிரிக்க அணி 5 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், பாகிஸ்தான அணி 4 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளன. நாளை இந்த டி20 உலக கோப்பை தொடரின் முக்கியமான மூன்று ஆட்டங்கள் நடைபெற இருப்பதினால் நாளை குரூப்-2 ல் அரையிறுதிக்கு செல்லப்போகும் அணிகள் எவை என்பது உறுதியாகிவிடும்.

Advertisement