நீங்க தான் என்ன லெஜெண்ட்னு சொல்றிங்க. ஆனா அவங்க என்ன மேட்ச் பிக்சர்னு சொல்றாங்க – வாசிம் அக்ரம் ஆதங்கம்

Wasim-Akram
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டில் பாகிஸ்தான் எப்போதுமே கணிக்க முடியாத அணியாகவும் உலகத்தரம் வாய்ந்த வேகபந்து வீச்சாளர்களை உருவாக்கும் அணியாகவும் போற்றப்படுகிறது. அதிலும் குறிப்பாக 414 டெஸ்ட் விக்கெட்டுகளையும் 502 ஒருநாள் விக்கெட்டுகளையும் எடுத்து சர்வதேச கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை எடுத்த இடது கை வேகப்பந்து வீச்சாளராக சாதனை படைத்த வாசிம் அக்ரம் 1992 உலகக் கோப்பை பைனலில் ஆட்டநாயகன் விருது வென்ற ஜாம்பவானாக போற்றப்படுகிறார். அப்படி எந்தளவுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் பெருமைகளை கொண்டுள்ளதோ அதே அளவுக்கு சூதாட்ட சர்ச்சைகளையும் கொண்டுள்ளது.

asif

- Advertisement -

அதிலும் 2010ஆம் ஆண்டு சல்மான் பட், முகமது அமீர், முகமது ஆசிப் ஆகியோர் ஏற்படுத்திய மெகா சர்ச்சையை போல அதற்கு முன்பாகவே 90களில் நிறைய முன்னாள் பாகிஸ்தான் வீரர்கள் சூதாட்ட சர்ச்சையில் சிக்கி வாழ்நாள் தடைகளை பெற்ற கதைகள் உள்ளது. அதற்கு விதிவிலக்காகாத ஜாம்பவான் வாசிம் அக்ரமும் ஒருமுறை சூதாட்டம் செய்ததாக செய்திகளும் வதந்திகளும் வந்தன. குறிப்பாக 1993/94இல் நியூசிலாந்துக்கு எதிராக நடைபெற்ற ஒரு ஒருநாள் போட்டியில் மோசமாக பந்து வீசுவதற்காக வாசிம் அக்ரம் தமக்கு 3 – 4 லட்சங்கள் கொடுத்ததாக அப்போதைய பாகிஸ்தான் வீரர் அடா-உர்-ரஹ்மான் குற்றம் சாட்டினார்.

1996 பின்னணி:
அத்துடன் 1996இல் இந்தியாவில் நடைபெற்ற ஐசிசி உலக கோப்பையில் பெங்களூருவில் நடந்த இந்தியாவுக்கு எதிரான காலிறுதி போட்டியில் பெவிலியனில் இருந்து கொண்டு மொபைல் போன் வாயிலாக போட்டியை இயக்குவதற்காக வேண்டுமென்றே காயம் என்ற பெயரில் வாசிம் அக்ரம் பங்கேற்கவில்லை என்றும் வெளிவந்த செய்திகள் அதை மேலும் உறுதியாக்கின. இருப்பினும் அதில் உண்மை இல்லை என்று தெரிந்ததால் இறுதியில் ரஹ்மான் வாழ்நாள் தடை பெற்றார். அதே சமயம் இந்தியாவுக்கு எதிரான காலிறுதி போட்டியில் உண்மையாகவே பக்கவாட்டு காயத்தை சந்தித்ததால் விளையாட முடியவில்லை என்று வாசிம் அக்ரம் வெளிப்படையாக பேட்டியளித்தார்.

wasim akram

இருப்பினும் முக்கிய போட்டிக்கு முன்பாக கவனக் குறைவாக நடந்து கொண்டதற்காக அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இந்நிலையில் இங்கிலாந்து போன்ற வெளிநாட்டுகளில் தம்மை மிகச்சிறந்த ஜாம்பவான் என்றும் இடது கை வேகப்பந்து வீச்சாளர் என்று போற்றுவதாக தெரிவிக்கும் வாசிம் அகரம் அந்த பழைய வதந்திகளால் பாகிஸ்தானில் இன்னும் சிலர் தன்னை மேட்ச் பிக்ச்சர் என்று அழைப்பது வேதனையளிப்பதாக கூறியுள்ளார். இது பற்றி இங்கிலாந்தின் பிரபல கார்டியன் பத்திரிக்கையில் அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“வாசிம் அக்ரம் என்பவர் பாகிஸ்தான் மற்றும் லான்ஷைர் அணிக்காக விளையாடிய சிறந்த இடது கை வேகப்பந்து வீச்சாளர் என்று பேசுகிறார்கள். குறிப்பாக இங்கிலாந்தில் அவ்வாறு தான் என்னை அழைக்கிறார்கள். ஆனால் பாகிஸ்தானில் “வாசிம் அக்ரம் ஒரு மேட்ச் பிக்சர்” என்று இன்னும் வதந்திகள் இருப்பது என்னை மிகவும் வேதனையில் ஆழ்த்துகிறது. அப்போதெல்லாம் இது எப்படி சாத்தியமாகிறது? நான் இதை நம்பவில்லை என்று கூறுவேன். நாங்கள் விளையாடிய காலகட்டத்தில் பாகிஸ்தான் அணியில் சூதாட்ட சர்ச்சைகள் இருந்ததால் ஒவ்வொரு வீரரும் ஒருவரை ஒருவர் நம்பாமல் பதற்றத்துடன் விளையாடினார்கள்”

“அது போன்றவர்களிடம் நான் மட்டும் தான் நண்பனாக பழகவில்லை என்று நினைக்கிறேன். குறிப்பாக இம்ரான் கான் மற்றும் ஜாவித் மியாண்தத் ஆகியோரது ஓய்வுக்கு பின் பாகிஸ்தான் அணியை கட்டுப்படுத்த யாருமே இல்லை. அதனால் என் மீது குற்றம் சுமத்தியவர்களுடன் இணைந்து விளையாட வேண்டிய மோசமான நிலைமை எனக்கு ஏற்பட்டதை நினைத்து பாருங்கள். அந்த சமயத்தில் பாகிஸ்தான் வாரியம் பயிற்சியாளர்கள் மற்றும் நிர்வாகிகள் வலுவாக இருந்திருக்க வேண்டும்”

இதையும் படிங்க : டி20 உலகக்கோப்பை : மழைக்காக பயந்து செமி பைனல் மற்றும் பைனலில் மாற்றப்பட்டுள்ள ரூல்ஸ் – விவரம் இதோ

“மேலும் அவரை (சலீம் மாலிக்) நீங்கள் எப்போதும் நம்ப முடியாது. அவரை இம்ரான் கான் எப்போதும் எலி என்றே அழைப்பார். சில நேரங்களில் சிலர் நொடிக்குள் மாறி விடுவார்கள். அந்த மோசமான காலகட்டங்களில் அவர்கள் செய்தவற்றை மறந்து மன்னிக்குமாறு என்னுடைய தந்தை என்னை அறிவுறுத்தினார். அதனால் வாழ்க்கை மிகவும் சிறியது என்பதை புரிந்து கொண்டு நான் யாரையும் பழி வாங்க நினைக்கவில்லை” என்று கூறினார்.

Advertisement