டி20 உலகக்கோப்பை : மழைக்காக பயந்து செமி பைனல் மற்றும் பைனலில் மாற்றப்பட்டுள்ள ரூல்ஸ் – விவரம் இதோ

Cup
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் கடந்த அக்டோபர் 16-ஆம் தேதி கோலாகலமாக துவங்கிய டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரானது வரும் நவம்பர் 13-ஆம் தேதி நிறைவு பெறவுள்ளது. இந்த தொடரில் மொத்தம் 16 அணிகள் பங்கேற்றிருந்த வேளையில் எட்டு அணிகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றிற்கு தகுதி பெற்றிருந்தன. அதன் பிறகு தகுதிச்சுற்றில் தேர்ச்சி பெற்ற இலங்கை, அயர்லாந்து, ஜிம்பாப்வே மற்றும் நெதர்லாந்து ஆகிய நான்கு அணிகள் சூப்பர் 12 சுற்றில் மற்ற எட்டு அணிகளுடன் இணைந்தன.

T20 World Cup Captains 2022

- Advertisement -

பின்னர் 12 அணிகளும் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு குழுவிலும் தலா 6 அணிகள் இடம் பிடித்து அவர்களுக்குள் மோதி வருகின்றனர். இரண்டு குழுவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் நான்கு அணிகள் அரையிறுதி போட்டியில் விளையாடும் என்றும் அறையறுதியில் வெற்றி பெறும் 2 அணிகள் இறுதிப்போட்டியில் விளையாடி அதில் வெற்றி பெறும் அணி சாம்பியனாக அறிவிக்கப்படும்.

இந்நிலையில் இந்த 20 உலகக் கோப்பை தொடரில் ஏற்கனவே பல போட்டிகள் மழையால் பாதிக்கப்பட்டதால் சில அணிகளுக்கு பின்னடையும் ஏற்பட்டது. இந்நிலையில் இந்த தொடரின் அரையிறுதியின் போதும், இறுதிப்போட்டியின் போதும் மழை காரணமாக இதே போன்ற சூழல் ஏற்படக்கூடாது என்பதற்காக இந்த உலகக் கோப்பை தொடரில் அதிரடியாக செமி பைனல் மற்றும் பைனல் போட்டிகளுக்கு முன்பாக விதிமுறையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Rain

அந்த வகையில் அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டியில் விளையாடும் போது போட்டி மழையால் பாதிக்கப்பட்டால் அடுத்த நாள் ரிசர்வ் டே போட்டி நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதுமட்டும் இன்றி தற்போது போட்டியின் முதல் பாதியோ அல்லது இரண்டாம் பாதியோ 10 ஓவர்கள் முழுவதுமாக முடிவடையாமல் போட்டி மழையால் பாதிக்கப்பட்டால் ஆட்டத்தின் முடிவு அறிவிக்கப்படாது என்று கூறப்பட்டுள்ளது.

- Advertisement -

அதாவது ஒரு அணி முதலில் விளையாடி 20 ஓவர்களை முடித்து இருந்தாலும் அடுத்த விளையாடும் அணி குறைந்தது 10 ஓவர்களாவது விளையாடி இருக்க வேண்டும். அப்படி விளையாடி இருந்தால் தான் டக் வொர்த் லூயிஸ் முறைப்படி முடிவுகள் அறிவிக்கப்படும். இல்லையெனில் போட்டி வேறு ஒருநாள் நடத்தப்படும். ஏற்கனவே இருந்த விதிமுறைகளின் படி ஒரு அணி முன்னதாக விளையாடி இரண்டாவது அணி ஐந்து ஓவர்கள் விளையாடியிருந்தாலே டக் வொர்த் லூயிஸ் விதிமுறை செயல்படுத்தப்பட்டு வந்தது.

இதையும் படிங்க : அஃப்ரிடி சொல்ற மாதிரி ஐசிசியும் இந்தியாவும் ஒன்னு தான், அம்பயர்கள் அவங்க கைக்குள் இருக்காங்க – முன்னாள் இங்கி வீரர் ஆதரவு

அதனால் இந்த விதிமுறை இரண்டாவது பேட்டிங் செய்யும் அணிகளுக்கே சாதகமாக இருந்த வேளையில் தற்போது ஐந்து ஓவர்கள் என்பது பத்து ஓவர்களாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. மேலும் மழை காரணமாக எந்த ஒரு அணிக்கும் குறை நிறை இல்லாமல் இருக்க வேண்டும் என்பதற்காகவே இது போன்ற ரூல்ஸ் அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement