அஃப்ரிடி சொல்ற மாதிரி ஐசிசியும் இந்தியாவும் ஒன்னு தான், அம்பயர்கள் அவங்க கைக்குள் இருக்காங்க – முன்னாள் இங்கி வீரர் ஆதரவு

Afridi
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் பரபரப்பாக நடைபெற்று வரும் 2022 ஐசிசி டி20 உலக கோப்பையில் இதுவரை பங்கேற்ற 4 போட்டிகளில் 3 வெற்றியை பதிவு செய்துள்ள இந்தியா அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்துள்ளது. இந்த வெற்றிகளுக்கு நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி அதிக ரன்கள் (220*) குவித்த பேட்ஸ்மேனாக சாதனை படைத்து சிறப்பாக செயல்பட்டு முக்கிய பங்காற்றி வருகிறார். ஆனால் அவரது இந்த சிறப்பாக செயல்பாடுகளுக்கு நிகராக சர்ச்சைகளும் எழுந்து வருகின்றன. குறிப்பாக பரம எதிரி பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியில் வரலாற்றின் மிகச்சிறந்த டி20 இன்னிங்ஸ் விளையாடி அசாத்தியமான வெற்றியை பெற்றுக் கொடுத்த அவர் கடைசி ஓவரில் இடுப்பளவு வந்த பந்தை சிக்ஸர் அடித்து விட்டு நோ-பால் கேட்டார்.

இடுப்பு மட்டத்திற்கு மேலே அந்த பந்து வந்ததால் நடுவரும் நோ-பால் வழங்கினார். ஆனால் விராட் கோலி கேட்டார் என்பதற்காக நடுவர் வேண்டுமென்றே பணத்தைப் பெற்றுக் கொண்டு இந்தியாவுக்கு ஆதரவாக செயல்பட்டதாக சோயப் அக்தர் உட்பட ஏராளமான முன்னாள் பாகிஸ்தான் வீரர்கள் அப்பட்டமாக விமர்சித்தனர். அந்த நிலைமையில் வங்கதேசத்துக்கு எதிராக நடைபெற்ற 4வது போட்டியிலும் 16வது ஓவரில் பவுன்ஸ் ஆகி வந்த கடைசி பந்தை எதிர்கொண்ட விராட் கோலி சிங்கிள் எடுத்து விட்டு நோ-பால் கேட்டார்.

- Advertisement -

ஐசிசியும் இந்தியாவும் ஒன்னு:
அந்த ஓவரில் ஏற்கனவே ஒரு பவுன்சர் பந்து வீசப்பட்டிருந்ததால் நடுவரும் நோ பால் வழங்கினார். ஆனால் விராட் கோலி கேட்டதற்காக நடுவர் நோ-பால் வழங்கியதாக வங்கதேச கேப்டன் சாகிப் அல் ஹசன் களத்திலேயே அதிருப்தியை வெளிப்படுத்தினார். அத்துடன் அதே போட்டியில் மழை வந்து நின்ற பின் மைதானத்தில் அதிகப்படியான ஈரம் இருந்தும் இந்தியா வெல்ல வேண்டும் என்பதற்காக நடுவர்கள் அவசர அவசரமாக போட்டியிட்டு துவங்கியதாக சாகிப் அல் ஹசன் அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

அதுபோக எரிமலையாக பேட்டிங் செய்து இந்தியாவின் வெற்றிக்கு அச்சுறுத்தலாக திகழ்ந்த லிட்டன் தாஸ் ஒரு பந்தில் 2 ரன்கள் எடுத்த போது விராட் கோலி போலியான பீல்டிங் செய்ததை நடுவர்கள் கண்டுகொள்ளாமல் விட்டதால் தங்களுக்கு கிடைக்க வேண்டிய 5 பெனால்டி ரன்கள் கிடைக்காமல் வெற்றியும் பறிபோனதாக வங்கதேச வீரர் நுருள் ஹசன் போட்டி முடிந்த பின் வெளிப்படையாக குற்றம் சாட்டினார். அந்த அடுத்தடுத்த சர்ச்சைகளை கையிலெடுத்த முன்னாள் பாகிஸ்தான் வீரர் சாகித் அப்ரிடி இந்தியா எப்படியாவது அரையிறுதிக்கு செல்ல வேண்டும் என்பதில் ஐசிசி குறியாக இருப்பதாக விமர்சித்தார்.

- Advertisement -

அவர்கள் தகுதி பெறாமல் போனால் நிறைய பொருளாதார இழப்புகளை சந்திக்க நேரிடும் என்பதால் ஐசிசி இந்தியாவின் பக்கம் சாய்ந்து விட்டதாக அவர் பகிரங்கமாக குற்றம் சாட்டினார். அதற்காக நடுவர்கள் இந்தியாவுக்கு ஆதரவாக களத்தில் செயல்படும் வகையில் பின்புலத்திலிருந்து ஐசிசி இயங்குவதாக கூறிய அவர் அந்த நடுவர்களுக்கு இந்த வருடம் சிறந்த அம்பயர்களுக்கான விருது கிடைக்கும் என்றும் பகிரங்கமாக பேசினார்.

பொதுவாக பாகிஸ்தான் ரசிகர்கள் தான் ஐசிசி என்றால் இந்திய கிரிக்கெட் கவுன்சில் என்று விமர்சிக்கும் நிலையில் ஒரு முன்னாள் வீரரே இப்படி விமர்சித்தது இந்திய ரசிகர்களை அதிருப்தியடைய வைத்தது. இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியாவின் ஆதிக்கத்துக்கு எதிராக ஷாஹித் அப்ரிடி மிகவும் சக்தி வாய்ந்த வார்த்தைகளை பிரயோகித்து பேசியுள்ளதாக முன்னாள் இங்கிலாந்து வீரர் மற்றும் பிரபல வர்ணனையாளர் டேவிட் லாய்ட் தனது ட்விட்டரில் ஒற்றை வார்த்தையில் ஆதரவு தெரிவித்துள்ளது இந்திய ரசிகர்களை மீண்டும் அதிருப்தியடைய வைத்தது.

அதனால் கோபமடைந்த ஒரு இந்திய ரசிகர் “இதை நீங்களும் நம்புகிறீர்களா” என்று அவரிடம் கேள்வி எழுப்பினார். ஆனாலும் அதற்கு பின்வாங்காத அவர் “ஆம் அது ஒரு வீரரிடமிருந்து வந்துள்ள சக்தி வாய்ந்த கருத்தாகும். உங்களுக்கு எப்படி தோன்றவில்லையா?” என மீண்டும் பதிலளித்தார்.

அதை விட “இந்த டெக்னாலஜி வளர்ந்த யுகத்தில் நடுவர்கள் இந்தியாவுக்கு ஆதரவாக செயல்பட முடியும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா” என்று மீண்டும் மற்றொரு இந்திய ரசிகர்கள் கேள்வி எழுப்பினார். அப்போதும் பின்வாங்காத அவர் இந்தியாவுக்கு எதிராக நடுவர்கள் செயல்படாத வகையில் ஐசிசி அறிவுறுத்தியுள்ளதாக மீண்டும் பதிலளித்துள்ளது இந்திய ரசிகர்களை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.

Advertisement