பாகிஸ்தானுக்கு எதிரா அதை செய்யாதீங்க ப்ளீஸ் – ரோஹித் சர்மாவுக்கு தெ.ஆ ஜாம்பவான் கோரிக்கை

Babar Azam Rohit Sharma IND vs PAK
- Advertisement -

உலக டி20 கிரிக்கெட்டின் சாம்பியனை தீர்மானிக்கும் 2022 ஐசிசி டி20 உலகக் கோப்பை ஆஸ்திரேலியாவில் கோலாகலமாக துவங்கியுள்ளது. இத்தொடரில் கோப்பையை வெல்வதற்காக களமிறங்கியுள்ள 16 அணிகளுக்கு மத்தியில் தரவரிசையில் நம்பர் ஒன் டி20 கிரிக்கெட் அணியாக திகழும் இந்தியா 2007க்குப்பின் 15 வருடங்கள் கழித்து 2வது கோப்பையை வெல்லும் முனைப்புடன் தீவிரமாக தயாராகி வருகிறது. இருப்பினும் 6 அணிகள் பங்கேற்ற மினி உலகக் கோப்பையை போன்ற சமீபத்திய ஆசிய கோப்பையில் சந்தித்த தோல்வியும் முதன்மை வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா கடைசி நேரத்தில் காயத்தால் விலகியதும் இந்திய அணிக்கு ஆரம்பத்திலேயே பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் அவரை தவிர்த்து இடம் பிடித்துள்ள புவனேஸ்வர் குமார் போன்ற இந்திய பவுலர்கள் மித வேகப்பந்து வீச்சாளர்கள் என்பதுடன் கடைசி கட்ட ஓவர்களில் ரன்களை வாரி வழங்குபவர்களாக உள்ளனர். அத்துடன் பீல்டிங் துறையும் முக்கிய நேரத்தில் கேட்ச்களை கோட்டைவிட்டு தடுமாற்றமாக செயல்படுவதால் இத்தொடரில் கோப்பையை வெல்வதற்கு பேட்ஸ்மேன்கள் சற்று அதிகமாக உழைக்க வேண்டியுள்ளது. அதில் சூர்யகுமார் யாதவ் மற்றும் பார்முக்கு திரும்பியுள்ள விராட் கோலி ஆகியோர் பலத்தைச் சேர்க்கும் நிலையில் டாப் ஆர்டரில் கேஎல் ராகுல் மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் தடுமாற்றமான ஃபார்மில் உள்ளனர்.

- Advertisement -

ரோஹித்துக்கு கோரிக்கை:
அதிலும் குறிப்பாக அணியை முன்னின்று வழி நடத்தும் ரோகித் சர்மா பார்ம் அவுட் என்று சொல்ல முடியாத அளவுக்கு பெரும்பாலான போட்டிகளில் அதிரடியான தொடக்கத்தை பெற்றாலும் அதை பெரிய ரன்களாக மாற்ற முடியாமல் அவுட்டாகி இந்தியாவுக்கு பின்னடைவை ஏற்படுத்துகிறார். பொதுவாகவே களத்தில் அதிக நேரம் நின்று பவுலர்களை பந்தாடி பெரிய ரன்களை குவித்து வெற்றிகளைப் பெற்று கொடுக்கு திறமை பெற்றுள்ள அவரை ரசிகர்கள் ஹிட்மேன் என்று கொண்டாடுகிறார்கள். ஆனால் கேப்டனாக பொறுப்பேற்ற சமீப காலங்களில் 20 பந்துகளில் 40 ரன்களை அடிக்க வேண்டுமென்று அதிரடி அணுகு முறையை பின்பற்றும் அவர் அதற்காக களமிறங்கியதிலிருந்தே அதிரடியாக விளையாடி திடீரென அவுட்டாகி விடுகிறார்.

இந்நிலையில் ரோகித் சர்மா போன்ற மேட்ச் வின்னர் எடுத்த எடுப்பிலேயே அதிரடியை காட்டி அவுட்டாகாமல் ஆரம்பத்தில் பொறுமையைக் கையாண்டு பின்னர் சரவெடியாக செயல்பட்டு பெரிய இன்னிங்ஸ் விளையாடி வெற்றியை பெற்றுக் கொடுக்க வேண்டுமென தென் ஆப்பிரிக்க ஜாம்பவான் லன்ஸ் க்ளூஸ்னர் கேட்டுக்கொண்டுள்ளார். குறிப்பாக பரம எதிரி பாகிஸ்தானுக்கு எதிரான துவக்க போட்டியை முன்னிட்டு சமீபத்தில் கொடுத்த பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“அம்மாதிரி விளையாடுங்கள் என்று யாரும் அவரிடம் கேட்டுக் கொண்டார்களா என்பது பற்றி எனக்கு தெரியாது. ஏனெனில் கடந்த 25 – 30 போட்டிகளாக அவர் தொடர்ச்சியாக ரன்களை எடுக்கவில்லை. எனவே கடந்த காலங்களில் எப்படி இருந்தீர்களோ அப்படியே இருங்கள் என்பதே ரோகித் சர்மாவுக்கு என்னுடைய அறிவுரையாகும். அவர் ஆரம்பத்திலேயே வேகமாக ரன்கள் குவிக்க வேண்டுமென்ற அவசியமில்லை. ஏனெனில் ஏற்கனவே அவர் அதிரடியாகவும் வேகமாகவும் ரன்களை குவிப்பார் என்பதால் அதில் மாற்றம் செய்ய வேண்டிய அவசியமில்லை”

“மேலும் அவரைப் போன்ற மேட்ச் வின்னர்கள் பவர்ப்ளே ஓவர்களைப் பயன்படுத்தி ரன் ரேட்டை கட்டுக்குள் வைத்து பெரிய ரன்களை குவிப்பார்கள் என்பதால் அவருக்கு அணி நிர்வாகம் ஆலோசனை கொடுக்கும் போது கவனத்துடன் செயல்பட வேண்டும். என்னைப் பொருத்தவரை ரோகித் சர்மா இந்திய அணியின் பேட்டிங் துறையில் ஒரு மேட்ச் வின்னர். அவர் அதை கடந்த பல வருடங்களாக நிரூபித்து வருகிறார். அதனால் ரன் ரேட்டை அதிகப்படுத்த அவரைத் தவிர உங்களுக்கு வேறு யாரும் தேவையில்லை” என்று கூறினார்.

- Advertisement -

அதாவது ஆரம்பத்திலேயே அவுட்டாகாமல் எந்தளவுக்கு ரோகித் சர்மா நிலைத்து விளையாடுகிறாறோ அந்தளவுக்கு ரன் ரேட்டும் பெரிய ரன்களும் தாமாக வந்து இந்தியாவுக்கு வெற்றியை கொடுக்கும் என்று லன்ஸ் குளூஸ்னர் கூறியுள்ளார். அவர் கூறுவது போல நிலைத்து நின்று பெரிய இன்னிங்ஸ் விளையாடினால் ரோகித் சர்மா தாமாகவே பெரிய ரன்களை அடித்து விடுவார்.

இதையும் படிங்க : IND vs AUS : இன்றைய பயிற்சி போட்டியில் மூலம் பிளேயிங் லெவன் உறுதி செய்யப்படுமா? – ரோஹித் திட்டம் என்ன?

அதனாலேயே ஒருநாள் கிரிக்கெட்டில் 3 இரட்டை சதங்களை அடித்துள்ள அவர் டி20 கிரிக்கெட்டில் உலகிலேயே அதிகபட்சமாக 4 சதங்களை அடித்துள்ளார். எனவே 10 – 15 ஓவர்கள் வரைஅவர் நிலைத்து நின்று விளையாடினால் நிச்சயமாக இந்தியா வெற்றிகளை எளிதாக குவிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

Advertisement