IND vs AUS : இன்றைய பயிற்சி போட்டியில் மூலம் பிளேயிங் லெவன் உறுதி செய்யப்படுமா? – ரோஹித் திட்டம் என்ன?

INDvsAUS
- Advertisement -

ஆஸ்திரேலிய நாட்டில் தற்போது நடைபெற்று வரும் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரை கருத்தில் கொண்டு முன்கூட்டியே அங்கு பயணித்த இந்திய அணியானது உள்ளூர் அணிகளுக்கு எதிராக சில பயிற்சி போட்டிகளில் விளையாடியது. இந்நிலையில் அதனை தொடர்ந்து சூப்பர் சுற்றில் நுழையும் இந்திய அணி நேரடியாக 23-ஆம் தேதி பாகிஸ்தான் அணியை எதிர்த்து மெல்போர்ன் மைதானத்தில் வரும் ஞாயிற்று கிழமை விளையாட இருக்கிறது.

IND

- Advertisement -

முன்னதாக நேரடியாக சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள எட்டு அணிகளும் தலா இரண்டு பயிற்சி போட்டிகளில் விளையாட திட்டமிடப்பட்டுள்ளது. அந்த வகையில் இன்று ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக தற்போது பயிற்சி போட்டியானது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

இந்த போட்டியை தொடர்ந்து அடுத்ததாக ஒரு பயிற்சி போட்டியிலும் இந்திய அணி விளையாட இருக்கிறது. இந்த இரண்டு பயிற்சி போட்டிகளில் விளையாடும் பிளேயிங் லெவன் தான் நிச்சயம் பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடும் என்பதனால் இன்றைய போட்டியின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது.

KL-RAHUL

அந்த வகையில் இன்றைய போட்டியில் ரோகித் சர்மா மற்றும் கே.எல் ராகுல் ஆகியோர் துவக்க வீரர்களாக விளையாடி வருகின்றனர். அவர்களை அடுத்து மிடில் ஆர்டரில் விராட் கோலி, சூரியகுமார் யாதவ், ஹார்டிக் பாண்டியா, தினேஷ் கார்த்திக் ஆகியோரும் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

- Advertisement -

பந்துவீச்சாளர்களை பொறுத்தவரை அக்சர் பட்டேல், அஷ்வின், ஹர்ஷல் பட்டேல், புவனேஸ்வர் குமார் மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இதன் காரணமாக இந்த பிளேயிங் லெவன் தான் நிச்சயம் பாகிஸ்தான் அணிக்கு எதிராகவும் விளையாடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க : தம்மை மிகவும் இம்ப்ரெஸ் செய்த 11 வயது குட்டி எக்ஸ்பிரஸ் பவுலர் – நேரடியாக எதிர்கொண்டு பாராட்டிய ரோஹித் சர்மா, வீடியோ உள்ளே

பயிற்சி போட்டியாக இருந்தாலும் இந்த போட்டியில் இந்திய அணி தங்களது முழு திறணையும் வெளிப்படுத்தி விளையாடுமா? இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெறுமா? என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement