IND vs WI : அவரை பார்த்தாலே பேட்ஸ்மேன்கள் தெறிச்சு ஓடுறாங்க – இந்திய பவுலரை பாராட்டும் ஆகாஷ் சோப்ரா

Aakash Chopra
- Advertisement -

வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் துவங்கிய 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியில் இந்தியா 68 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. டிரினிடாட் நகரில் நடைபெற்ற அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் சிறப்பாக செயல்பட்டு 190/6 ரன்கள் சேர்த்தது. இந்தியாவுக்கு கேப்டன் ரோகித் சர்மா 7 பவுண்டரி 2 சிக்சருடன் அதிரடியாக 64 (44) ரன்கள் குவித்தாலும் சூர்யகுமார் யாதவ் 24, ஸ்ரேயாஸ் அய்யர் 0, ரிஷப் பண்ட் 14, ஹர்திக் பாண்டியா 1, ரவீந்திர ஜடேஜா 16 என மிடில் ஆர்டரில் வந்த பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றினர்.

Arshdeep Singh IND vs WI

- Advertisement -

அதனால் தடுமாறிய இந்தியாவை கடைசி நேரத்தில் களமிறங்கி 4 பவுண்டரி 2 சிக்சருடன் 41* (19) ரன்களை விளாசிய தினேஷ் கார்த்திக் அற்புதமான பினிஷிங் கொடுத்து காப்பாற்றினார். அதைத்தொடர்ந்து 191 ரன்களை துரத்திய வெஸ்ட் இண்டீசுக்கு கெய்ல் மேயர்ஸ் 15, சமர் ப்ரூக்ஸ் 20 என தொடக்க வீரர்கள் ஆரம்பத்திலேயே சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றிய நிலையில் அடுத்து வந்த ஜேசன் ஹோல்டர் டக் அவுட்டானார். அதனால் ஆரம்பத்திலேயே பெரிய பின்னடைவை சந்தித்த அந்த அணிக்கு நிக்கோலஸ் பூரன் 18, ரோமன் போவெல் 14, சிம்ரோன் ஹெட்மயர் 14 என மிடில் ஆர்டரில் வந்த முக்கிய பேட்ஸ்மேன்களும் பெரிய ரன்கள் எடுக்காமல் அவுட்டாகி கைவிட்டனர்.

அசத்திய அஷ்வின்:
அதனால் 20 ஓவர்களில் வெஸ்ட் இண்டீஸ் 122/8 ரன்களை மட்டுமே எடுத்ததால் அபார வெற்றி பெற்ற இந்தியா 1 – 0* (5) என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே தொடரில் முன்னிலை பெற்றுள்ளது. இந்த போட்டியில் 6 மாதங்கள் கழித்து இந்தியாவுக்காக டி20 கிரிக்கெட்டில் விளையாடிய தமிழகத்தின் அஷ்வின் பேட்டிங்கில் இந்தியா தடுமாறியபோது தினேஷ் கார்த்திக் உடன் இணைந்து கடைசி 4 ஓவரில் முக்கியமான 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து 13* (10) ரன்கள் எடுத்தார்.

Ravichandran Ashwin

அதேபோல் பந்து வீச்சிலும் 4 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை 5.50 என்ற சிறப்பான எக்கனாமியில் எடுத்து அசத்தலாக செயல்பட்டார். ஒரு கட்டத்தில் இந்திய வெள்ளை பந்து அணியில் அவரின் கிரிக்கெட் கேரியர் முடிந்து விட்டதாக நினைத்த வேளையில் ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டு வந்ததால் கடந்த 2021 டி20 உலக கோப்பையில் தேர்வான அவர் 4 வருடங்கள் கழித்து கம்பேக் கொடுத்தார். அந்த தொடரில் கிடைத்த வாய்ப்புகளில் அசத்திய அவர் அதன்பின் நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் நடந்த டி20 தொடர் உட்பட கிடைத்த அனைத்து வாய்ப்புகளிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.

- Advertisement -

தெறிச்சு ஓடுறாங்க:
இதனால் வரும் அக்டோபரில் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலக கோப்பையில் அவர் மீண்டும் தேர்வு செய்யப்படுவாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் காணப்படுகிறது. முன்னதாக இப்போட்டியில் டாப் ஆர்டர் சொதப்பியதால் தடுமாறிய வெஸ்ட் இண்டீசை காப்பாற்ற மிடில் ஆர்டரில் களமிறங்கிய கேப்டன் நிக்கோலஸ் பூரன் மற்றும் சிம்ரோன் ஹெட்மையர் என்ற 2 முரட்டுத்தனமான பேட்ஸ்மேன்களை அவுட் செய்த அஸ்வின் அந்த அணியின் கதையை மொத்தமாக முடித்தார். ஆச்சர்யப்படும் வகையில் அந்த இருவருமே இடதுகை பேட்ஸ்மேன்கள் ஆவர். இந்நிலையில் உலகின் அனைத்து அணிகளிலும் இப்படி இடதுகை பேட்ஸ்மேன்கள் அஷ்வின் பந்துவீச்சில் சரணடைந்து விடுவதாக முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா பாராட்டியுள்ளார்.

Chopra

இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “3 சுழல் பந்துவீச்சாளர்கள் விளையாடிய இந்திய அணியில் சுவாரசியமாக அஷ்வினும் கம்பேக் கொடுத்தார். அஷ்வின் மிகச் சிறப்பாக பந்துவீசி 2 விக்கெட்டுகளை எடுத்தார். குறிப்பாக நிக்கோலஸ் பூரானை அவர் அவுட் செய்தது போட்டியின் மிகப்பெரிய விக்கெட் என்று நினைக்கிறேன். அதேப்போல் லோயர் ஆர்டரில் சிம்ரோன் ஹெட்மயரை அவுட் செய்தார். இப்படி அஷ்வின் பந்துவீச வரும்போதெல்லாம் அவருக்கு முன்பாக இடதுகை பேட்ஸ்மேன்கள் மண்டியிட்டு விடுகிறார்கள். மேலும் ஒரு சிக்சர் உட்பட 13 ரன்கள் குவித்த அவர் கார்த்திக்கு மிகப்பெரிய உதவி செய்தார்.” என்று கூறினார்.

- Advertisement -

பொதுவாகவே வலதுகை பேட்ஸ்மேன்களைவிட இடதுகை வீரர்களை அல்வா போல் அவுட் செய்யும் பழக்கத்தை வைத்துள்ள அஸ்வின் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிகமுறை இடதுகை பேட்ஸ்மேன்களை அவுட் செய்த பவுலர் என்ற உலக சாதனையை படைத்துள்ளார். அவருடன் புவனேஸ்வர் குமார், அர்ஷிதீப் சிங் ஆகியோரும் இப்போட்டியில் சிறப்பாக செயல்பட்டதை பாராட்டிய ஆகாஷ் சோப்ரா மேலும் பேசியது பின்வருமாறு.

இதையும் படிங்க : IND vs WI : நேற்றைய போட்டியில் சூரியகுமார் யாதவ் ஓப்பனராக களமிறங்கியது ஏன்? – மாஸ்டர் பிளான் தான்

“புவனேஸ்வர் குமார் மீண்டும் 2 ஓவர்களில் 11 ரன்கள் கொடுத்து 1 விக்கெட் எடுத்து துல்லியமாக பந்து வீசினார். அர்ஷிதீப் சிங் பற்றி பேசியாக வேண்டும். இதற்குமுன் விளையாடிய ஆவேஷ் கானை விட அவர் சிறப்பாக பந்து வீசுகிறார். நம்மிடம் அவரைப்போலவே இடதுகை பந்துவீச்சாளராக நடராஜனும் உள்ளார். இருப்பினும் தற்போதைய நிலைமையில் அர்ஷிதீப் நேற்றைய தார் ரோடு போன்ற பிட்சில் கூட சிறப்பாக பந்துவீசினார்” என்று கூறினார்.

Advertisement