IND vs WI : நேற்றைய போட்டியில் சூரியகுமார் யாதவ் ஓப்பனராக களமிறங்கியது ஏன்? – மாஸ்டர் பிளான் தான்

Suryakumar-Yadav
- Advertisement -

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதலாவது போட்டி நேற்று நடைபெற்றது. ட்ரினிடாட் நகரில் உள்ள பிரைன் லாரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்த முதலாவது போட்டியில் இந்திய அணி 68 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி ஐந்து போட்டிகள் கொண்ட இந்த தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. டி20 கிரிக்கெட்டில் பலம் வாய்ந்த அணியாக பார்க்கப்படும் வெஸ்ட் இண்டீஸ் அணியை எதிர்த்து இந்திய அணி வீரர்கள் விளையாடியதால் நேற்றைய போட்டியில் யார் வெற்றி பெறுவார்கள் என்று எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகம் இருந்தது.

- Advertisement -

இந்நிலையில் நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியானது சிறப்பாக பேட்டிங் செய்து 190 ரன்களை குவிக்க இரண்டாவதாக வெஸ்ட் இண்டீஸ் 122 ரன்கள் மட்டுமே குவிக்க முடிந்ததால் 68 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் யாரும் எதிர்பாராத வகையில் துவக்க வீரராக ரோஹித் சர்மாவுடன் சூரியகுமார் யாதவ் களத்திற்கு வந்தது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. இந்நிலையில் சூரியகுமார் யாதவ் இப்படி துவக்க வீரராக களமிறங்க என்ன காரணம் என்பது குறித்த கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.

அதற்கு சரியான விளக்கத்தை தான் நாங்கள் இந்த பதிவில் உங்களுக்காக தொகுத்து வழங்கியுள்ளோம். அதன்படி நேற்றைய போட்டியில் சூரியகுமார் யாதவ் துவக்க வீரராக விளையாட காரணம் யாதெனில் : சமீபத்தில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா அளித்த பேட்டி ஒன்றில் இந்திய அணி t20 கிரிக்கெட்டில் இனி பவர் பிளேவில் அதிக ரன்கள் குவிக்கும் வகையில் விளையாடி அந்த மொமண்டத்தை அப்படியே நாங்கள் பின்பற்றி மிக அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம் என்று கூறியிருந்தார்.

Sky-1

இதன் காரணமாக மிடில் ஆர்டரில் அதிரடியாக விளையாடும் சூரியகுமாரை துவக்க வீரராக களமிறக்கி பவர் பிளேவில் அதிக ரன்களை குவிக்கவே இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதோடு கஷ்டமான மிடில் ஓவர்களில் நிறைய பவுண்டரிகளை விளாசும் சூரியகுமார் யாதவ் பவர் பிளே ஓவர்களில் பீல்டிங் கட்டுப்பாடு காரணமாக மேலும் பல பவுண்டரிகளை அடிக்க வாய்ப்புள்ளதால் அவருக்கு இந்த துவக்க வீரருக்கான இடம் கிடைத்துள்ளது.

- Advertisement -

கடந்த இரண்டு மூன்று போட்டிகளாக இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் துவக்க வீரராக விளையாடி வந்த நிலையில் அவரால் பெரிய அளவு அதிரடியாக விளையாட முடியவில்லை என்கிற காரணத்தினால் அதிரடி வீரரான சூரிய குமாரை ரோகித் சர்மாவுடன் நேற்றைய போட்டியில் துவக்க வீரராக களமிறக்கினார்.

இதையும் படிங்க : நீண்ட வருடங்கள் கழித்து கிரிக்கெட் களத்தில் களமிறங்கி விளையாட தயாராகும் தாதா கங்குலி – எங்கே, எப்போது (முழுவிவரம்)

ஏற்கனவே இவர்கள் இருவரும் ஐபிஎல் தொடரில் ஒன்றாக இணைந்து துவக்க வீரர்களாக விளையாடி இருப்பதன் காரணமாகவும் நேற்றைய போட்டியில் அவருக்கு இந்த துவக்க வீரருக்கான வாய்ப்பு கிடைத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

Advertisement