அந்த தமிழ்நாட்டு பிளேயரை எடுத்துருந்தா.. இந்திய அணி இன்னும் 100% பலமா இருந்திருக்கும்.. ஹைடன் கருத்து

Matthew Hayden 5
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் 2024 ஐசிசி டி20 உலகக் கோப்பை வரும் ஜூன் மாதம் நடைபெற உள்ளது. இந்த தொடரில் விளையாடுவதற்காக ரோகித் சர்மா தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய கிரிக்கெட் அணி ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது. அந்த அணியில் விராட் கோலி, பும்ரா, சூரியகுமார், ஜெய்ஸ்வால், சிவம் துபே போன்ற அனுபவமும் இளமையும் கலந்த வீரர்கள் இந்தியாவுக்காக தேர்வாகியுள்ளனர்.

இருப்பினும் அந்த அணியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரிங்கு சிங் தேர்வு செய்யப்படாதது நிறைய முன்னாள் வீரர்களை அதிருப்தியில் ஆழ்த்தியது. அதை விட சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் நடராஜன் 12 போட்டிகளில் 18 விக்கெட்டுகளை எடுத்து நல்ல ஃபார்மில் இருக்கிறார். குறிப்பாக இந்திய அணியில் தேர்வாகியுள்ள முகமது சிராஜ் மற்றும் அர்ஷிதீப் சிங் ஆகியோரை விட நடராஜன் குறைந்த எக்கனாமியில் அதிக விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.

- Advertisement -

நல்ல அணி ஆனால்:
மேலும் பும்ராவை போலவே டெத் ஓவர்களில் துல்லியமான யார்க்கர் பந்துகளை வீசக்கூடிய அவர் இடது கை வேகப்பந்து வீச்சாளர் என்பது மற்றொரு சிறப்பம்சமாகும். இருப்பினும் அவரை ரிசர்வ் வீரர்கள் பட்டியலில் கூட அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக்குழு தேர்ந்தெடுக்காதது தமிழக ரசிகர்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் டெத் ஓவர்களில் துல்லியமாக பந்து வீசக்கூடிய நடராஜன் இருந்திருந்தால் 2024 டி20 உலகக் கோப்பை இந்திய அணி இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் என்று மேத்தியூ ஹைடன் தெரிவித்துள்ளார்.

மற்ற படி இப்போதும் சமநிலையுடன் தேர்வு செய்யப்பட்டுள்ள இந்திய அணியில் ரிஷப் பண்ட் துருப்புச் சீட்டாக இருப்பார் என்று அவர் பாராட்டியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “இந்திய அணியில் அற்புதமான சமநிலை இருக்கிறது. அவர்கள் 3 – 4 ஸ்பின்னர்களை தேர்வு செய்துள்ளது வெஸ்ட் இண்டீஸ் சூழ்நிலைகளுக்கு சிறந்த திட்டமாக இருக்கும். அமெரிக்காவைப் பற்றி தெரியாது”

- Advertisement -

“3வது இடத்தில் விராட் கோலியுடன் டாப் ஆர்டரில் இடது – வலது கை பேட்ஸ்மேன்கள் இருப்பதால் அவர்களின் பேட்டிங் வரிசை நன்றாக இருக்கிறது. ரோகித் சர்மா ஏற்கனவே பல பெரிய தொடர்களில் விளையாடிய செட்டிலான கேப்டனாக இருக்கிறார். பும்ரா, சிராஜ் ஆகிய வேகப்பந்து வீச்சாளர்கள் வலுவான தேர்வு. இருப்பினும் இந்த அணியில் ஐபிஎல் தொடரில் டெத் ஓவர்களில் அசத்தி வரும் நடராஜன் போன்றவர் இருப்பதை பார்க்க விரும்புகிறேன்”

இதையும் படிங்க: சி.எஸ்.கே அணிக்காக ஒரு நல்ல வீரரை தேர்வு செய்தோம்.. ஆனால் அவர் என் சொல்பேச்சை கேக்கல – தோனி சாடல்

“இருப்பினும் ஒட்டுமொத்தமாக இந்தியா சமநிலையுடன் கூடிய நல்ல அணியாகவே இருக்கிறது. அவர்களிடம் உலக தரத்தில் புதுமையை கொண்ட பேட்ஸ்மேன்கள் இருப்பது பலமாகும். குறிப்பாக சூரியகுமார், ஜெய்ஸ்வால் ஆகியோர் மற்ற வீரர்களை விட வித்தியாசமான விஷயங்களை செய்யக்கூடிய திறமையை கொண்டுள்ளனர். அதே போல துருப்புச்சீட்டாக ரிஷப் பண்ட் இருப்பது பெரிய போனஸாகும்” என்று கூறினார்.

Advertisement