மித்தாலிக்கும் எனக்கும் கல்யாணம்ன்னு சொன்னாங்க.. அடுத்த ஐபிஎல் தொடரில் ஓய்வு? பற்றி தவான் பதில்

Shikhar Dhawan 2
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணி இந்த வருடமும் கோப்பையை வெல்லாமலேயே பரிதாபமாக வெளியேறியது. இந்த வருடம் ஷிகர் தவான் தலைமையில் களமிறங்கிய அந்த அணி ஆரம்பம் முதலே தடுமாற்றமாக விளையாடியது. போதாகுறைக்கு 4 – 5 போட்டிகளுக்கு பின் ஷிகர் தவான் காயத்தை சந்தித்ததால் சாம் கரண் பஞ்சாப் அணியை பெரும்பாலான போட்டிகளில் வழி நடத்தினார்.

அந்த வகையில் நிலையற்ற கேப்டன்கள் தலைமையில் விளையாடிய பஞ்சாப் மொத்தம் 14 போட்டிகளில் 5 வெற்றியையும் 9 தோல்வியையும் பதிவு செய்து 9வது இடத்தை பிடித்து வெளியேறியது. இந்த சூழ்நிலையில் 39 வயதை தொட்டுள்ள ஷிகர் தவான் அடுத்த வருடம் விளையாடுவாரா என்பது சந்தேகமாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் மிஸ்டர் ஐசிசி என்று ரசிகர்கள் கொண்டாடும் அளவுக்கு அவர் ஒரு காலத்தில் இந்தியாவின் துவக்க வீரராக சொல்லி அடித்தார்.

- Advertisement -

தவான் கேரியர்:
அதே போல ஐபிஎல் தொடரிலும் அற்புதமாக விளையாடிய அவர் விராட் கோலிக்கு பின் அதிக ரன்கள் குவித்த வீரராக சாதனை படைத்துள்ளார். இருப்பினும் வயது காரணமாக சமீப காலங்களில் தடுமாற்றமாக விளையாடும் அவர் இந்திய அணியிலிருந்து மொத்தமாக கழற்றி விடப்பட்டுள்ளார். அதே போல ஐபிஎல் தொடரிலும் அதிரடியாக விளையாடுவதற்கு தடுமாறும் அவரை 2025 மெகா ஏலத்தில் பஞ்சாப் தக்க வைக்குமா என்பதே கேள்விக்குறியாக உள்ளது.

இந்நிலையில் தினேஷ் கார்த்திக் போன்ற சில வீரர்களை போல் தாமும் ஐபிஎல் தொடரிலிருந்து விடைபெறும் நேரம் வந்துள்ளதாக ஷிகர் தவான் தெரிவித்துள்ளார். இருப்பினும் இன்னும் ஓரிரு வருடங்கள் விளையாடிய பின்பே ஓய்வு பெற உள்ளதாக தவான் கூறியுள்ளார். அத்துடன் உங்கள் வாழ்நாளில் சந்தித்த மறக்க முடியாத வதந்தி என்ன என்று செய்தியாளர் கேட்டார்.

- Advertisement -

அதற்கு ஒருமுறை முன்னாள் இந்திய மகளிரணி கேப்டன் மிதாலி ராஜுக்கும் தமக்கும் திருமணம் என்ற வதந்தியை மறக்க முடியாது என்று தவான் சிரித்துக் கொண்டே கூறினார். இது பற்றி ஜியோ சினிமா சேனலில் அவர் பேசியது பின்வருமாறு. “நான் மிதாலி ராஜுடன் திருமணம் செய்து கொள்ள உள்ளேன் என்று கேள்விப்பட்டேன். இம்முறை ரிஷப் பண்ட் காயத்திலிருந்து குணமடைந்து விளையாடிய விதத்திற்காக பெருமைப்படுகிறேன்”

இதையும் படிங்க: மொஹாலி நியாபகமிருக்கா? ஷாஹித் அப்ரிடியை வைத்து கலாய்த்த பாகிஸ்தான் ரசிகரின் மூக்கை உடைத்த ரெய்னா

“நானும் என்னுடைய கேரியரின் முடிவுக்கு வந்துள்ளேன். என்னுடைய வாழ்வில் புதிய பாகம் துவங்க உள்ளது. உங்களால் குறிப்பிட்ட வயது வரை மட்டுமே விளையாட முடியும். எனவே அது எனக்கு இன்னும் ஒன்று அல்லது 2 அல்லது சில வருடங்களாக இருக்கும். துரதிஷ்டவசமாக இந்த வருடம் பஞ்சாப் அணிக்காக காயமடைந்ததால் 4 – 5 போட்டிகளை தவிர்த்து என்னால் விளையாட முடியவில்லை. தற்போது குணமடைந்து வரும் நான் இன்னும் 100% ஃபிட்டாகவில்லை” என்று கூறினார்.

Advertisement