மொஹாலி நியாபகமிருக்கா? ஷாஹித் அப்ரிடியை வைத்து கலாய்த்த பாகிஸ்தான் நிரூபரின் மூக்கை உடைத்த ரெய்னா

Suresh Raina Shahid AFridi
- Advertisement -

ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பை வரும் ஜூன் மாதம் துவங்குகிறது. வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறும் அந்த தொடரில் விளையாடுவதற்காக ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அணியில் விராட் கோலி, பும்ரா, சூரியகுமார், ஜெய்ஸ்வால் உள்ளிட்ட அனுபவமும் இளமையும் கலந்த வீரர்கள் தேர்வாகியுள்ளனர்.

எனவே 2007க்குப்பின் இம்முறை கோப்பையை வெல்லும் லட்சியத்துடன் இந்திய அணி விளையாட உள்ளது. குறிப்பாக அயர்லாந்துக்கு எதிராக தங்களுடைய உலகக் கோப்பை பயணத்தை துவங்கும் இந்தியா ஜூன் 9ஆம் தேதி பரம எதிரி பாகிஸ்தானை நியூயார்க் நகரில் எதிர்கொள்கிறது. 2007 முதல் இதுவரை டி20 உலகக் கோப்பைகளில் பெரும்பாலும் பாகிஸ்தானை தோற்கடித்துள்ள இந்தியா வெற்றி வாகை சூடியுள்ளது.

- Advertisement -

ரெய்னா பதிலடி:
அதனால் இம்முறையும் பாகிஸ்தானை வீழ்த்தி அமெரிக்காவில் இந்தியா மூவர்ணக் கொடியை பறக்க விடும் என்று ரசிகர்கள் நம்புகின்றனர். இந்நிலையில் 2024 உலகக் கோப்பை தொடருக்கு இந்தியாவின் முன்னாள் ஜாம்பவான் வீரர் யுவராஜ் சிங் தூதுவராக அறிவிக்கப்பட்டுள்ளார். 2007 டி20 உலகக் கோப்பையில் ஒரே ஓவரில் 6 சிக்சர்கள் அடித்து 12 பந்தில் 50 ரன்கள் தொட்டு இரட்டை உலக சாதனை படைத்த அவர் இந்தியாவின் வெற்றியில் கருப்பு குதிரையாக செயல்பட்டார்.

அதன் காரணமாக வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் வீரர் கிறிஸ் கெயில், ஜமைக்காவின் பிரபல தடகள வீரர் உசைன் போல்ட் ஆகியோருடன் யுவராஜ் சிங் அம்பாசிடராக அறிவிக்கப்பட்டுள்ளார். அவர்களுடன் 2009 டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் ஆட்டநாயகன் விருது வென்று பாகிஸ்தான் சாம்பியன் பட்டம் வெல்ல உதவிய ஷாஹித் அப்ரிடியையும் ஐசிசி அம்பாசிடராக அறிவித்துள்ளது.

- Advertisement -

அதைப் பார்த்த இம்ரான் சித்திக் எனும் ஒரு பாகிஸ்தான் பத்திரிக்கையாளர் ட்விட்டரில் “ஐசிசி ஷாஹித் அப்ரிடியை 2024 டி20 உலகக் கோப்பையின் அம்பாசிடராக அறிவித்துள்ளது. ஹலோ சுரேஷ் ரெய்னா?” என்று பதிவிட்டு முன்னாள் இந்திய வீரர் ரெய்னாவை வம்பிழுத்தார். அதற்கு சற்று யோசிக்காத ரெய்னா கொடுத்த பதிலடி பின்வருமாறு. “நான் ஐசிசி அம்பாசிடர் கிடையாது. ஆனால் என்னுடைய வீட்டில் நான் 2011 உலகக் கோப்பையை வென்று வைத்துள்ளேன்”

இதையும் படிங்க: என்னால் தான் தினேஷ் கார்த்திக் அந்த முடிவை எடுத்தார்.. எமோஷனலாக பேசிய – தீபிகா பல்லிகல்

“மொஹாலியில் நடைபெற்ற போட்டி உங்களுக்கு நினைவிருக்கிறதா? இது அங்கே நிகழ்ந்த சில மறக்க முடியாத நினைவுகளை உங்களுக்கு கொண்டு வரும் என்று நம்புகிறேன்” என மூக்கை உடைக்கும் வகையில் பதிலளித்துள்ளார். அதாவது மொஹாலியில் நடைபெற்ற 2011 உலகக்கோப்பை செமி ஃபைனலில் ஷாஹித் அப்ரிடி தலைமையிலான பாகிஸ்தானை தோற்கடித்த இந்தியா கடைசியில் சாம்பியன் பட்டமும் வென்றது. அப்போட்டியில் முக்கியமான ரன்களை எடுத்த ரெய்னா இந்திய அணி பாகிஸ்தானை நாக் அவுட் முக்கிய காரணமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement