
இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இவ்விரு அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியானது செப்டம்பர் 19-ஆம் தேதியான இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற வங்கதேச அணி முதலில் பந்துவீச்சை தீர்மானம் செய்தது.
அதனை தொடர்ந்து தற்போது இந்திய அணியானது தங்களது முதல் இன்னிங்க்ஸை விளையாடி வருகிறது. இந்நிலையில் இந்த டெஸ்ட் தொடர் ஆரம்பிப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்னதாக சென்னை வந்தடைந்த ரோகித் சர்மா தலைமையிலான இந்திய வீரர்கள் அனைவரும் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்திய வீரர்கள் இம்முறை சென்னை லீலா பேலஸ் ஹோட்டலில் தங்கி இருக்கிறார்கள். கடந்த ஒரு வாரமாக அவர்கள் தங்கி இருக்கும் இந்த ஹோட்டல் வசதிகள் குறித்த சில விவரங்கள் வெளியாகி உள்ளன. அந்த வகையில் லீலா பேலஸ் ஹோட்டலில் ஒரு நாள் வாடகை எவ்வளவு? அந்த ஹோட்டலில் உள்ள வசதிகள் என்னென்ன? என்பது பற்றி இந்த பதிவில் காணலாம்.
அந்த வகையில் சென்னையில் இந்திய வீரர்கள் தங்கி இருக்கும் இந்த லீலா பேலஸ் ஹோட்டல் சுமார் 4.8 ஏக்கர் பரப்பளவில் அமைந்தது. மொத்தம் 11 அடுக்குமாடிக்கொண்ட இந்த ஹோட்டலில் 326 சொகுசு அறைகள் உள்ளன. இந்த ஹோட்டலில் ஒரு ரூமின் ஒருநாள் வாடகை இந்திய மதிப்பில் சுமார் 12,744 ரூபாய் என்று கூறப்படுகிறது.
அதோடு இந்த ஹோட்டல் கடற்கரையை ஒட்டி இருப்பதால் வீரர்களுக்கு கடற்கரையின் இயற்கை காட்சியினை ரசிக்க முடியும். அதோடு இந்த ஹோட்டலில் நவீன ஜிம் வசதி, ஆலோசனை நடத்த தனிக்கூடம், ஓய்வெடுக்க தனி அறைகள், நீச்சல் குளம், பார்க் மற்றும் ஒவ்வொரு அறையிலும் பால்கனி என பல்வேறு வசதிகள் இருக்கின்றன.
இதையும் படிங்க : முட்டாள்தனமான ஸ்டேட்மன்ட்.. நேதன் லயனுக்கு அஸ்வின் பதிலடி கொடுக்கனும்.. பசித் அலி அதிருப்தி
இதுமட்டும் இன்றி அனைத்து வகையான உணவு வகைகள் இங்கு கிடைக்கும். அதோடு பிரபலமான சர்வதேச சலூன், மசாஜ் என ஏகப்பட்ட வசதிகள் இருக்கின்றன. வழக்கமாக இந்திய வீரர்கள் ஹோட்டல் தாஜ் ஹோட்டலில் தங்குவது வழக்கம். ஆனால் இம்முறை லீலா பேலஸ் ஹோட்டலில் அவர்கள் தங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.